கடனை திருப்பிச் செலுத்துவதில் தமிழகம் முதலிடம

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் நடந்த மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவில், சுய உதவிக் குழுக்களுக்கும், கூட்டமைப்புகளுக்கும் 78 கோடி ரூபாய் நிதி வழங்கி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் மொத்தம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 104 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 65 லட்சத்து 72 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். 2009-2010ம் நிதியாண்டில் மட்டும் 21 ஆயிரத்து 175 புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2008-2009ம் ஆண்டில், தேசிய அளவில் அனைத்து வங்கிகளிடமும் இருந்து, மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வழங்கப்பட்டதில் 93 சதவீதம் மகளிரும், ஏழு சதவீதம் ஆண்களும் கடனை முழுமையாக திருப்பி செலுத்தியுள்ளனர். வங்கிகளிடம் வாங்கிய கடனை வட்டியோடு முழுமையாக திருப்பி செலுத்துவதில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. இது தமிழகத்திற்கே கிடைத்த பெருமை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

0 comments: