மாயாவதி மனு தள்ளுபடி

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை மறைக்கும் வகையில், 'தாஜ் ஓட்டல்' கட்ட உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி அனுமதி அளித்தார். அதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாயாவதி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை கவர்னர் ராஜேஸ்வர் ஏற்கவில்லை.

எனவே, மாயாவதி மீது சி.பி.ஐ. விசாரணை கேட்டு அலகாபாத் ஐகோர்ட்டில் கமலேஷ் வர்மா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் என்னுடைய ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். எனவே, அந்த பொதுநல மனுவில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மாயாவதி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், சுதர்சன் ரெட்டி ஆகியோர் அடங்கி பெஞ்சு, மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் தீர்ப்பில் கூறும்போது, "இந்த பிரச்சினையில் அலகாபாத் ஐகோர்ட்டையே மனுதாரர் (மாயாவதி) அணுக வேண்டும். ஆட்சியை கலைப்பதற்காக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது குறித்து எங்களுக்கு கவலை கிடையாது. மனுவில் உள்ள விவகாரத்தை மட்டும் பேசாமல் மற்ற அனைத்து விஷயங்களையும் ஏன் பேச வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

0 comments: