காவலாளி கைது

நில‌ப்‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ‌சிவபாலனை தா‌க்‌கிய வழ‌க்‌கி‌ல் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா‌வி‌ன் ப‌ண்ணை ‌வீ‌ட்டு காவலா‌ளியை ‌சி.‌பி.‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கும், கல்லாங்குத்து தோட்டம் சிவபாலனுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோப‌ர் 21ஆம் தேதி நள்ளிரவு காஞ்சிகோயில் பண்ணை வீட்டில் இருந்த தன்னையும் மனைவி உமா மகேஸ்வரியையும் சிவபாலன் அரிவாளால் வெட்டியதாக ராஜாவும், தன்னை தாக்கியதாக சிவபாலனும் புகார் தெரிவித்தனர். இ‌ந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகு, ராஜாவின் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த, பண்ணை வீட்டு காவலாளி காளியப்பனை (55) சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காளியப்பனை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து அவர் கோவை சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். தலைமறைவாக உள்ள ராஜாவும், உமாமகேஸ்வரியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவ‌ர்களது கடவு‌சீ‌ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சாம்பசிவம் தெரிவித்தார்.

0 comments: