கோயில் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து சிக்கிக் கொண்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த செக்ஸ் அர்ச்சகருக்கு தூக்குத் தண்டனை பெற்றுதர கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அர்ச்சகர் தேவநாதனை பெண்கள் செருப்பால் அடித்தனர்.இந்நிலையில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை தூக்கில் இடக்கோரி மாங்காடு இந்துமக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனசிங்தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் ஆனந்தன், மாநில அமைப்பு செயலர் கணபதி ரவி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தகுந்த ஆதாரங்களை திரட்டி தேவநாதனுக்கு தூக்கு தண்டனையை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
0 comments:
Post a Comment