திமிங்கிலங்களை காப்பாற்றினர் நியூசிலாந்து மக்கள்

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ஒரு கடற்கரையில் கரை ஒதுங்கித் தத்தளித்த பைலட் வகைத் திமிங்கலங்கள் நாற்பதுக்கும் அதிகமானவற்றை சுற்றாடல் பாதுகாப்பு ஊழியர்களும் தன்னார்வலர்களுமாக சேர்ந்துக்காப்பாற்றியுள்ளனர்.
சுற்றாலா வந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் டஜன் கணக்கிலானோர், இந்த திமிங்கலங்கள் நீரை விட்டு வெளியே வந்து தத்தளிக்கவிடாமல் பார்த்துக்கொண்டதோடு, தண்ணீரின் அளவு உயர்ந்த நேரத்தில் அவை மீண்டும் கடலுக்குள் நீந்திச்செல்ல உதவியுள்ளனர்.

அறுபதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின, அவற்றில் சுமார் இருபது நிலத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டிருந்தன.
திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதன் காரணம் தெளிவடையவில்லை என சுற்றாடல் பாதுகாப்பு பணியாளர்கள் கூறுகின்றனர்.

0 comments: