ஆங்கில புத்தாண்டு சென்னையில் கெடுபிடி ?

இன்று நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் பிறக்கிறது. சென்னையில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பல்வேறு தரப்பினரும் தயாராக உள்ளனர்.

மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற இடங்களில் இன்று மாலையில் இருந்தே இளைஞர் பட்டாளங்கள் கூட்டம், கூட்டமாக வலம் வரத் துவங்கி விடுவர். நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகள் போன்ற தனியார் இடங்களிலும் புத்தாண்டு விருந்துகளுக்கு ஏற்காடுகளை செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிய, சென்னை காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை நகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் பணியாற்றும் 12 ஆயிரம் காவலர்களும், தமிழ்நாடு விசேஷ காவல் படையின் 6 கம்பெனி காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினா, எலியட்ஸ் பீச், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதி சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற போர்வையில் பெண்களிடம் அத்துமீறி நடப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுப்போம். மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார் .

0 comments: