இந்தியாவில் முதலீடு வெளிநாட்டினர் அச்சம்

பிரிட்டனை சேர்ந்த மேப்பிள்கிராப்ட் என்ற நிறுவனம் மாறி வரும் அரசியல் அபாய குறியீட்டெண் பட்டியலை 196 நாடுகளுக்கு அவ்வப்பொழுது வெளியிடுகிறது.

இந்தக் குறியீட்டெண் பயங்கரவாதம், ஊழல், வர்த்தக வாய்ப்புகள், விரிவான பொருளாதாரச்சூழல் ஆகியவற்றை மதிப்பிட்டு அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. மேப்பிள்கிராப்ட் நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளரான ஈவா மோலினியாக்ஸ் ஆய்வு அறிக்கையினையும் குறியீட்டெண் பட்டியலையும் சமீபத்தில் டெல்லியில் வெளியிட்டார்.


தெற்கு ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான அளவு குறியீட்டெண் அடிப்படையில் சரிவைச் சந்தித்த நாடு இந்தியாதான். முதலீடு செய்ய தகுதியில்லாத நாடுகள் பட்டியலில் 36வது இடத்தில் இருந்த இந்தியா, இப்பொழுது 9 புள்ளிகள் சரிந்து 27வது இடத்துக்கு வந்துள்ளது.

0 comments: