ராமேஸ்வரம், பாம்பன் கடலோர பகுதிகளில் நேற்று காலை தொடர் மழை மற்றும் காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 30.20 மி.மீட்டர் பதிவானது. தனுஷ்கோடி பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்லமுடியவில்லை.
கோதண்டராமர் கோயில் வரை சென்று திரும்பினர்.மழையால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவு காணமுடியவில்லை. காற்றால் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பன் பகுதியில் அலைகள் சிறி பாய்ந்தன. கடல் சீற்றமாக இருந்ததால் பாம்பனில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ராமேஸ்வரத்தில் வழக்கம்போல் டோக்கன் வழங்கப்பட்டாலும், சிலர் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மழை தொடர்ந்து பெய்தாலும் பாம்பனில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவில்லை.
0 comments:
Post a Comment