வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று செயின்ட் லூசியாவில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.
காம்பிர் இல்லை:
இந்திய அணியில் வயிற்றுப்போக்கு காரணமாக காம்பிர் இடம் பெறவில்லை. இவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். ஜாகிர் கான் நீக்கப்பட்டு, பியுஸ் சாவ்லா இடம் பெற்றார். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், பீல்டிங் தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
இந்திய அணிக்கு துவக்கத்தில் "ஷாக்' காத்திருந்தது. கிளெய்ன்வெல்ட் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் "டக்' அவுட்டானார். பின் ஸ்டைன், மார்கல் மிக துல்லியமாக பந்துவீச ரன் வறட்சி ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக் 16 ரன்களுக்கு காலிஸ் பந்தில் வீழ்ந்தார். ஒருகட்டத்தில் 9 ஓவரில் 56 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தவித்தது.
யுவராஜ் நம்பிக்கை:
இதற்கு பின் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். மெர்வி, ஆல்பி மார்கல் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்தார் யுவராஜ். மறுபக்கம் காலிஸ் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ரெய்னா. இருவரும் ரன் மழை பொழிய, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. ஐ.பி.எல்., பைனலில் சென்னை கிங்ஸ் அணிக்காக சூப்பராக ஆடிய ரெய்னா, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 42 பந்துகளில் அரைசதம் எட்டினார். 3வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் 37 ரன்களுக்கு வெளியேறினார்.
ஒரே ஓவரில் 25 ரன்
கிளெயன்வெல்ட் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். பின் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ரெய்னா, கடைசி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மொத்தம் 25 ரன் எடுக்கப்பட்டது. யூசுப் 11 ரன்கள் எடுத்தார்.
அதிரடி சதம்:
பின் ஆல்பி மார்கல் பந்தில் இன்னொரு இமாலய சிக்சர்(90 மீ.,) அடித்த ரெய்னா, சதம் கடந்து அசத்தினார். அடுத்த பந்தையும் அவசரப்பட்டு தூக்கி அடித்த இவர் 101 ரன்களுக்கு(60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார். பின் கேப்டன் தோனி ஒரு சிக்சர் அடிக்க, கடைசி 5 ஓவரில் 75 ரன் எடுக்கப்பட்டது. இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. தோனி(16) அவுட்டாகாமல் இருந்தார்.
திணறல் ஆட்டம்:
கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய பந்துவீச்சில் திணறியது. நெஹ்ரா, பிரவீண் குமார் துல்லியமாக பந்துவீச, சுலபமாக ரன் எடுக்க முடியவில்லை. யூசுப் பதான் சுழலில் போஸ்மென்(8) சிக்கினார். போராடிய காலிஸ், ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். பின் ரவிந்திர ஜடேஜா பந்திலும் சிக்சர் அடித்தார். கேப்டன் ஸ்மித்(36) ரன் அவுட்டானார். காலிஸ் 73 ரன்களுக்கு சாவ்லா பந்தில் அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது.
நெஹ்ரா காயம்:
கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நெஹ்ரா அசத்தலாக பந்துவீசினார். 3வது பந்தை பீல்டிங் செய்த போது நெஹ்ராவுக்கு "அந்த' இடத்தில் அடிபட, வலியால் துடித்து கீழே விழுந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர் கட்டுக் கோப்பாக பந்துவீச, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
லீக் சுற்றில் ஏற்கனவே ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் 4 புள்ளிகளுடன் "சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.
மூன்றாவது வீரர்
* சர்வதேச "டுவென்டி-20' வரலாற்றில் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (116* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 2010) இச்சாதனை படைத்திருந்தனர்.
* தவிர, "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற மேலும் ஒரு புதிய சாதனை படைத்தார். முன்னதாக காம்பிர் (75) அதிகபட்ச ஸ்கோரை பெற்றிருந்தார். இதேபோல <உலக கோப்பை அரங்கில் இச்சாதனை படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (117) இச்சாதனை படைத்தார்.
* இதன்மூலம் ரெய்னா, சர்வதேச "டுவென்டி-20' கிரிக்கெட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2009ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது அதிகம்
உற்சாகம் தந்த சதம்
ஸ்கோர் போர்டு
இந்தியா
கார்த்திக்(கே)ஸ்மித்(ப)காலிஸ் 16(17)
விஜய்(கே)பவுச்சர்(ப)கிளெய்ன்வெல்ட் 0(1)
ரெய்னா(கே)டிவிலியர்ஸ்(ப)ஆல்பி மார்கல் 101(60)
யுவராஜ்(கே)ஸ்மித்(ப)கிளெய்ன்வெல்ட் 37(30)
யூசுப் பதான்(கே)மெர்வி(ப)ஸ்டைன் 11(7)
தோனி-அவுட் இல்லை- 16(6)
ஹர்பஜன்- அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஒவரில் 5 விக்.,) 186
விக்கெட் வீழ்ச்சி: 1-4(விஜய்), 2-32(கார்த்திக்), 3-120(யுவராஜ்), 4-163(யூசுப் பதான்), 5-178(ரெய்னா).
பந்து வீச்சு: கிளெய்ன்வெல்ட் 4-0-48-2, ஸ்டைன் 4-0-24-1, மார்னே மார்கல் 4-0-32-0, ஆல்பி மார்கல் 3-0-39-1, காலிஸ் 4-0-30-1, மெர்வி 1-0-13-0.
தென் ஆப்ரிக்கா
காலிஸ்(கே)ஜடேஜா(ப)சாவ்லா 73(54)
போஸ்மென்(கே)சாவ்லா(ப)யூசுப் பதான் 8(14)
ஸ்மித்--ரன் அவுட்(பிரவீண்/தோனி) 36(28)
டிவிலியர்ஸ்(கே)சாவ்லா(ப)நெஹ்ரா 31(15)
ஆல்பி மார்கல்(கே)ஹர்பஜன்(ப)யூசுப் 12(7)
பவுச்சர்-அவுட் இல்லை- 4(2)
டுமினி-அவுட் இல்லை- 4(1)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 172
விக்கெட் வீழ்ச்சி: 1-21(போஸ்மென்), 2-118(ஸ்மித்), 3-128(காலிஸ்), 4-152(ஆல்பி மார்கல்), 5-167(டிவிலியர்ஸ்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 4-0-33-0, பிரவீண் 1-0-3-0, நெஹ்ரா 4-0-27-1, யூசுப் பதான் 4-0-42-2, பியுஸ் சாவ்லா 3-0-27-1, ஜடேஜா 4-0-37-0.
0 comments:
Post a Comment