மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணிவெற்றியுடன் துவக்கியுள்ளது. நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.
வெஸ்ட் இண்டீசில், மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட்தொடர் நடக்கிறது. நேற்று, தொடரின் 6வது லீக் போட்டி செயின் லூசியாவில்நடந்தது. இதில் "ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள்மோதின.
சூப்பர் துவக்கம்:
"டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாட்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது வார்னர் (26) அவுட்டானார். அடுத்து வந்த மைக்கேல்கிளார்க் (2) சோபிக்கவில்லை.
வாட்சன் அதிரடி:
பின்னர் இணைந்த வாட்சன், டேவிட் ஹசி ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சைபதம்பார்த்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த போது, டேவிட்ஹசி (53) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வாட்சன் (81) நம்பிக்கைஅளித்தார். அடுத்து வந்த மைக்கேல் ஹசி (17) ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள்ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஆமர், அஜ்மல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
"டாப்-ஆர்டர் திணறல்:
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல் (0), சல்மான் பட் (15), ஹபீஸ் (12), உமர் அக்மல் (18) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்பேட்ஸ்மேன்கள் திணறல் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் அப்ரிதி (33), மிஸ்பாஓரளவு நம்பிக்கை அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 34 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நான்ஸ், டெய்ட் தலா 3, ஜான்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய "ஆல்-ரவுண்டர் வாட்சன் ஆட்டநாயகனாகதேர்வு செய்யப்பட்டார்.
ஒரு ஓவரில் 5 விக்.,
ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் ஆமர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹாடின்(1) வெளியேறினார். இரண்டாவது பந்தில் ஜான்சன் (0), போல்டானார். மூன்றாவதுபந்தில் மைக்கேல் ஹசி (17), ரன்-அவுட்டானார். நான்காவது பந்தில் ஸ்டீவன்ஸ்மித்(0), ரன்-அவுட்டானார். ஐந்தாவது பந்தை எளிதாக தடுத்த டெய்ட்(0), கடைசிபந்தில் போல்டானார். இதனால் ஆஸ்திரேலிய அணி, ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் 5 விக்கெட் இழந்து திணறியது.
இதுவே அதிகம்
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்துள்ள 6 லீக்போட்டியின் முடிவில், ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 20 ஓவரில் 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா (186 ரன், எதிர்-தென்ஆப்ரிக்கா), பாகிஸ்தான் (172 ரன், எதிர்-வங்கதேசம்), தென் ஆப்ரிக்கா (172 ரன், எதிர்-இந்தியா) அணிகள் தங்கள் அதிகபட்ச ஸ்கோரை பெற்றன.
ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியா
வார்னர் (கே)உமர் அக்மல் (ப)சமி 26(18)
வாட்சன் எல்.பி.டபிள்யு.,(ப)அஜ்மல் 81(49)
மைக்கேல் கிளார்க் (ப)ஹபீஸ் 2(3)
டேவிட் ஹசி (கே)பவாத் (ப)அஜ்மல் 53(29)
மைக்கேல் ஹசி ரன்-அவுட்(கம்ரான்) 17(8)
ஒயிட் (கே)பவாத் (ப)அஜ்மல் 9(7)
ஹாடின் (கே)சமி (ப)ஆமர் 1(2)
ஜான்சன் (ப)ஆமர் 0(1)
ஸ்மித் ரன்-அவுட்(கம்ரான்) 0(1)
நான்ஸ் -அவுட் இல்லை- 0(1)
டெய்ட் (ப)ஆமர் 0(2)
உதிரிகள் 2
மொத்தம் (20 ஓவரில், ஆல்-அவுட்) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-51(வார்னர்), 2-64(மைக்கேல் கிளார்க்), 3-162(டேவிட் ஹசி), 4-164(வாட்சன்), 5-181(ஒயிட்), 6-191(ஹாடின்), 7-191(ஜான்சன்), 8-191(மைக்கேல்ஹசி), 9-191(ஸ்மித்), 10-191(டெய்ட்).
பந்துவீச்சு: ஆமர் 4-1-23-3, ஹபீஸ் 4-0-47-1, சமி 4-0-54-1, அப்ரிதி 4-0-33-0, அஜ்மல்
பாகிஸ்தான்
கம்ரான் (கே)ஸ்மித் (ப)நான்ஸ் 0(1)
சல்மான் பட் (கே)டேவிட் ஹசி (ப)டெய்ட் 15(10)
ஹபீஸ் (கே)மைக்கேல் ஹசி (ப)ஜான்சன் 12(14)
உமர் அக்மல் (கே)மைக்கேல் ஹசி (ப)ஸ்மித் 18(14)
மிஸ்பா (கே)மைக்கேல் கிளார்க் (ப)நான்ஸ் 41(31)
அப்ரிதி (ப)டெய்ட் 33(24)
ரசாக் (கே)வார்னர் (ப)நான்ஸ் 1(2)
பவாத் (கே)மைக்கேல் கிளார்க் (ப)ஜான்சன் 16(11)
ஆமர் (கே)ஸ்மித் (ப)டேவிட் ஹசி 2(3)
சமி -அவுட் இல்லை- 5(5)
அஜ்மல் (ப)டெய்ட் 4(6)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில், ஆல்-அவுட்) 157
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கம்ரான்), 2-28(சல்மான் பட்), 3-34(ஹபீஸ்), 4-70(உமர்அக்மல்), 5-117(அப்ரிதி), 6-120(ரசாக்), 7-132(மிஸ்பா), 8-148(ஆமர்), 9-151(பவாத்), 10-157(அஜ்மல்).
பந்துவீச்சு: நான்ஸ் 4-0-41-3, டெய்ட் 4-0-20-3, ஜான்சன் 4-0-21-2, வாட்சன் 3-0-24-0, டேவிட் ஹசி 2-0-12-1, மைக்கேல் கிளார்க் 1-0-14-0, ஸ்மித் 2-0-24-1. (41) 40-0-34-3.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment