சென்னை மாநகராட்சிக்கு விருது

பொது மக்களின் குறைகளை சிறப்பான வகையில் தீர்வு காண்பதை பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு "ஸ்காட்ச்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்களின் குறைகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தீர்வு காண 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க 97899-51111 என்ற எண்ணும் உள்ளது.மேலும், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தை பயன்படுத்தியும் பொதுமக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகிறது.குப்பைகள் அகற்றுதல், தெரு நாய்கள் பிடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், சொத்து வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு எரியாதது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சரி செய்யப்படுகின்றன.இந்த சிறப்பான பணிக்காக, அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் (ண்டுணிஞிட) நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு 2010ம் ஆண்டிற்கான "ஸ்காட்ச்' விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. வரும் 22ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 comments: