ஜமாத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).
பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குத்புதீனுக்கும், இதயதுல்லாவுக்கும், தொழுகை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக விசாரிக்க குத்புதீன் உறவினர் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருமங்கலகுடியை சேர்ந்த ஹாஜ்முகமது(40). தனது ஆதரவாளர்கள் சுமார் 15 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருவிடைச்சேரிக்கு வந்தார். அப்போது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயிலுக்கும் ஹாஜ் முகமதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த ஹாஜ் முகமது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில், மற்றும் அருகே நின்ற அஜீத் முகமது ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் திருவிடைச்சேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் பெயர் வருமாறு:-
1. முகமது குத்புதீன், 2. அப்துல் மாலிக், 3. சேத்தப்பா, 4. சலாவுதீன், 5. முகமது இலியாஸ், 6. பசீர் மைதீன், 7. அப்துல் ரகீம், 8. ஜமீல், 9. முஜிபுர் ரகுமான், 10.முகமது அன்சாரி. 11. ஹபீப் ரகுமான், 12. அன்வர்தீன், 13. பசீர் முகமது, 14. ரவி, 15.ஜியாவுதீன்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஏதேனும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்றும் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
திருவிடைச்சேரி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலெக்டர் சந்திரசேகரன் விசாரித்த காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்ளார்.

0 comments: