இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல்திறன் தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி 15 மாவட்டங்களில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2009ஆம் ஆண்டிற்கான 4 ஆயிரம் இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் தேர்வுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் தாங்கும் திறனறித்தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு ஆகியவை டிசம்பர் 10ஆம் தேதி முதல் 15 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்று. ஆனால் சில நிர்வாக காரணத்தினால் தூத்துக்குடிக்கு பதிலாக நாகர்கோயிலில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts
Subscribe to:
Posts (Atom)