புயல் அபாயம்

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் மராட்டியம், குஜராத் இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்பதால் அந்த இரு மாநிலங்களுக்கும் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோவாவில் இருந்து மேற்கே 250 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த புயல் மராட்டியத்தின் வடக்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குஜராத், மராட்டியத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. ஃபியன் (Phyan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் மும்பைக்கு சேதம் ஏற்படாது என்றாலும், தெற்கு குஜராத்தில் இந்தப் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: