அமெரிக்க நிறுவனத்தில் 19 பேருக்கு வேலைஉத்தரவுகளை வழங்கினார் துணை முதல்வர்

ஒரகடம் சிப்காட் வளாகத்தில் உள்ள அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய, உள்ளூர் இளைஞர்கள் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


சான்மினா - எஸ்.சி.ஐ., நிறுவனம், 225 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொடர்பு, மருத்துவம், தானியங்கி, பல் நோக்கு ஊடகம், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுக்காக உயர் தொழில்நுட்ப மின்னணு கருவிகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவியுள்ளது.இந்த தொழிற்சாலையை, கடந்த மார்ச் 28ம் தேதி துவக்கி வைத்து துணை முதல் வர் ஸ்டாலின் பேசினார்.


ஒரகடம் பகுதியில் உள்ள வல்லக்கோட்டை, வல்லம், வடகால், வைப்பூர், மாத்தூர் மற்றும் சென்னாக்குப்பம் கிராமங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 10 மாணவிகளையும், ஒன்பது மாணவர்களையும் நேர்முகத் தேர்வு மூலம் சான்மினா நிறுவனம் தேர்வு செய்தது.இந்த 19 பேரும், மேற்படிப்பை தொடர முடியாத ஏழ்மை நிலையில் உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் சான் மினா நிறுவனத்தில், இளநிலை இயக்குபவராக (ஜூனியர் ஆபரேட்டர்) நியமிக் கப்பட்டுள்ளனர். இதற்கான நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங் கினார்.மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அதற்கான கால அவகாசமும், படிப்பிற்குத் தேவையான நிதி உதவிகளையும் வழங்க சான்மினா நிறுவனம் முன்வந்துள்ளது.

0 comments: