இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர்.
அண்மையில் பண்டார வன்னியர் நினைவு தூணை தகர்த்த ராணுவத்தினர், உண்ணாநிலை இருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவுத் தூணையும் சிதைத்தனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டை சிங்களர்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வந்தனர். அந்த வீட்டை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். தமிழர்களின் வரலாற்றை அழித்தொழிக்கும் ராணுவத்தின் நடவடிக்கை தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment