நாகர்கோவிலில் இன்று முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சி மாநில துணை தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
வருகிற 12-ந்தேதி கிளை மற்றும் மண்டல தேர்தல் நடக்கிறது. ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தல் இம்மாத இறுதியில் நடக்கிறது. அடுத்த மாதம் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மாநில தேர்தலும் ஜனவரியில் அகில இந்திய தலைவர் தேர்தலும் நடக்கிறது. குமரிமாவட்டத்தில் தற்போது 30 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 30 ஆயிரம் பேருக்கு அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி எழுச்சி பெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்த உறுப்பினர்களைவிட தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி கூறுகிறது. அதில் 7 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
கம்யூனிஸ்டு கட்சிகள் மிகபெரிய சரிவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் அரசின் செயல்பாடு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. சீனா 1962-ல் நடந்ததை மறந்து விட கூடாது என்று எச்சரிக்கிறது. நாம் வீரர்களை தயார் நிலையில் வைத்து கொள்ளவேண்டும். நாட்டில் தற்போது லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. தங்கம் விலை உயர்வை கட்டுபடுத்த அரசு தவறிவிட்டது. இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர். எம்.பி.க்கள் குழுவை அனுப்பினார்கள்.
ஆனால் அகில இந்திய அளவிலான எம்.பி.க்கள் குழுவை அனுப்பி இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment