அரசு வேலை : மருந்தாளுனர்களுக்கான தேர்வு

தமிழக அரசின் மருந்தாளுனர் -ஆய்வாளர் (Drug Inspector) மற்றும் அது தொடர் பான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக விண்ண்ப்பிக்கவும

வருகிற 12-04-2012 தேதி கடைசிநாள்
தேர்வு நடைபெறவுள்ள பணியிடங்கள் மற்றும் விவரங்களுக்கு
ஆகிய வலைதளங்களைப்பார்த்து விண்ணப்பிக்கவும்

தேர்வில்வெற்றி பெற்று பணிடங்களுக்கு செல்ல தமிழ்நாடு தினசரி செய்திகள் தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!

Ramajeyam
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கல்லணையை ஒட்டி புதர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வட்டாரத்தில் முக்கிய திமுக தலைவர் கே.என்.நேரு. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது தம்பி ராமஜெயம். இவரது வீடு தில்லைநகர் பகுதியில் உள்ளது. ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மீதும், கே.என்.நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக நில மோசடி வழக்குகள் நிறைய போடப்பட்டன. இந்த வழக்குகளில் கைதாகி ஜாமீனி்ல் விடுதலையாகியிருந்தார் ராமஜெயம்.

இந்த நிலையில் இன்று காலை அவர் 6 மணிக்கு வழக்கம் போல வாக்கிங் போனார். ஆனால் 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பரபரப்படைந்தனர். அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான திமுகவினர் ராமஜெயம் மற்றும் நேரு வீடுகள் முன்பு திரண்டனர். பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் திருச்சி நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியது.

இந்த நிலையில் ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட தகவல் இன்று பிற்பகல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை அருகே நீர் நிரம்பிய புதர்ப் பகுதியில் வைத்து சிக்கியது.

அவரைக் கை, கால்களைக் கட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ராமஜெயம் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அலறியடித்தபடி அவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு ராமஜெயம் உடலைப் பார்த்து அழுதபடி அடையாளம் காட்டினர்.

ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரை யார் கொன்றவர் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தனரா என்பது தெரியவில்லை.

ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், அதிர்சசி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகள் கால் தெரியுற சட்டை போட்டால் அம்மா தொடை தெரியுற சட்டை போடுற காலமிது

யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் அந்தகால ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை கடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு.

பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள்.



மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல என்கின்றன.

மயிலு... ஒரு தடவ பழைய படத்தை காட்டும்மா அவங்களுக்கு.

ஓய்வெடுத்துக்கொள்வதற்கான பெட்டி Sleep box அறிமுகம் - புகைப்படங்கள்


ரஷ்ய கட்டிட வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறிய ஹோட்டெல் அறைகளே
இப்படங்களில் உள்ளவை. The Sleep box (தூங்குவதற்கான பெட்டி) என்று குறிப்போடு காணப்படும் இவற்றை முதலில் விமான நிலையங்களில் வைப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றார்களாம்.

உள்ளே 30 நிமிடங்களில் இருந்து சில மணி நேரம் வரை ஓய்வெடுத்துக்கொள்ளவதற்கு ஏற்றவகையில் உள்ளே சிறிய கட்டில் மற்றும் மின்சார வசதி போன்றவை உள்ளன.














கல்லூரி மாணவி பலாத்காரம்

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன் காதலனை கட்டிப்போட்டுவிட்டு அவரின் காதலியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது. அந்த 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 4 பேரில் 2 பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் மற்றும் பூவார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரில் ஒருவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இதில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், கேரள நிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவரும் ஆட்டோ டிரைவர்கள். பூவாரையைச் சேர்ந்தவர் கார் டிரைவர். ஆட்டோ டிரைவர்கள் 2 பேரும் தேங்காய்பட்டணத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர். அவர்கள் சவாரிக்கு காத்திருக்கும்போது கடற்கரைக்கு வரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளை நோட்டம் போடுவார்கள். அவர்கள் தனியாக செல்வதை பார்த்து மற்றவர்களுக்கு போன் செய்து வரவழைப்பார்கள். பின்னர் 4 பேரும் அங்கு வந்து அவர்களை பின் தொடர்வார்கள்.

காதல் ஜோடிகள் தனிமையை தேடிச் செல்லும்போது காதலனை தனிமைப்படுத்தி பெண்ணை பலாத்காரம் செய்து வந்தனர். இந்த கும்பல் பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.

டைட்டானிக்குக்கு வழிகாட்டிய அவதார்

இன்றும் உலக அளவில் வசூலில் இரண்டாம் இடத்தில் டைட்டானிக் இருக்கிறது. முதலிடம் அவதார். டை‌ட்டானிக்கை இன்று வெளியிட்டாலும் காதல் ஜோடிகள் திரையரங்கை ஹவுஸ்ஃபுல்லாக்க காத்திருக்கிறார்கள். நமக்கே இது தெ‌ரியும் போது தயா‌ரிப்பாளருக்கு‌த் தெ‌ரியாமல் இருக்குமா.

தயா‌ரிப்பாளர் Jon Landu டைட்டானிக்கை 3டி-யில் வெளியிடுகிறார். அடுத்த மாதம் இப்படம் அமெ‌ரிக்காவில் 3டி யில் வெளியாகிறது. இது பற்றி குறிப்பிட்ட Jon Landu அவதார் படம்தான் எங்களுக்கு டைட்டானிக்கை 3டி-யில் உருவாக்கும் ஐடியாவையும், நம்பிக்கையும் தந்தது என்றார். அவதாருக்குப் பிறகு 3டி-யில் படத்தை எடுக்க இயக்குனர்களைவிட தயா‌ரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் ஒரு மோசமான படத்தை 3டி எந்தவிதத்திலும் காப்பாற்றப் போவதில்லை என்று மேலும் அவர் தெ‌ரிவித்தார்.

டைட்டானிக் 3டி ஆக மாற்றம் பெற 18 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் இதனை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை Jon Landu-க்கு இருக்கிறது.

தமிழகத்தில் பொதுத் தேர்வு: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

IPL Season 5

சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது 2ம் பட்சமாக கருதப்படுகிறது. வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியாதாக உள்ளது.

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார ஆஇஇஐஐ, மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தையும் அவர்கள் பொதுத்தேர்வில் பெரும் மதிப்பெண்ணையும் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை (ஏப்ரல் 23 ஆம் தேதி) நடத்த அனுமதிக்க கூடாது.

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'நடிகை அனுஷ்காவுடன் கல்யாணமா...

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தனக்கும் காதல் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், "அனுஷ்கா சர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தியை சமீபத்தில் படித்தபோது ஷாக்காக இருந்தது.

அனுஷ்கா சர்மாவை லண்டனில் சந்தித்தேன். அங்கு கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தார். ஒரு பிரபலம் என்ற முறையில் அறிமுகமாகி ஹாய் சொல்லிக் கொண்டோம். அவ்வளவுதான். அவருடன் எந்த தொடர்பும் இல்லை.

இந்த வதந்திகள் எங்கிருந்து, எப்படி கிளம்பின என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்களிலோ திருமணம் நடக்கும். ஆனால் உறுதியாக ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். அனுஷ்கா சர்மா போன்ற நடிகையை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

என்னுடையது நடுத்தர குடும்பம். என்னையும் எங்கள் குடும்பத்தையும் புரிந்து கொண்ட பெண்ணைத்தான் மணப்பேன். எனது வருங்கால மனைவி புத்தி கூர்மை உள்ளவராகவும் எனக்கு நல்ல துணையாகவும் இருக்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்து ஆதமார்த்தமாக அன்பு செலுத்துபவராகவும் விளங்க வேண்டும்.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளை காண ஆர்வமாக இருக்கிறேன்," என்றார்.

போலீஸ் குறை தீர்ப்பு கூட்டம் ஒரே நாளில் 850 மனுக்கள் குவிந்தன

போலீஸ் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒரே நாளில் 850 பேர் கோரிக்கை மனுக் களை கமிஷனர் திரிபாதியிடம் வழங்கினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பொது மக்கள் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கமிஷனர் திரிபாதி அல்லது கூடுதல் கமிஷனர்கள் மனுக்களை பெறுகின்றனர். சென்னை புறநகர் போலீசாரை சென்னை போலீசுடன் இணைத்த பிறகு 18 ஆயிரமாக போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. அவர்களின் குறைகளை கேட்க அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, வாரத்தில் சனிக்கிழமைதோறும் போலீசார் தங்களது குறைகளை புகாராக தெரிவிக்கலாம். அதனை தன்னிடமே நேரில் வழங்கலாம் என்று அறிவித்தார்.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததது. கமிஷனர் திரிபாதி அறிவித்தபடி நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசாரின் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக பிரத்யேகமாக சாமியானா பந்தலஅமைக்கப்பட்டிருந்தது. போலீஸ் குடியிருப்பு கோரு தல், பணி இடமாற்றம், நிலுவை தொகை வழங்க கோருதல், ஊதிய உயர்வு முரண்பாட்டை நீக்க கோருதல், உயர் அதிகாரிக ளால் ஏற்படும் இடையூறு உள்ளிட்ட பல்வேறு மனுக் களை போலீசார் கொடுத்தனர். ஆயுதப்படை போலீஸ், சட்டம் ஒழுங்கு போலீஸ், குற்றப்பிரிவு போலீஸ், போக்குவரத்து போலீஸ், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் என மொத்தம் 850 பேர் தங்களது குறைகளை புகாராக தெரிவித்தனர். அனைத்தையும் கமிஷனர் திரிபாதி பெற்றுக் கொண்டார்.

நாகையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியதுள்ளதாக இன்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறு மீனவர்கள் ‌கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர்.

பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மித்து தாக்கியுள்ளனர்.

இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீனவர்களும் கடலோர போலீசாரிடம் மேற்‌கண்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.

நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்-விஜயகாந்த், டி.ஆர்.பாலு மகன் வர முடியாது!

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தடை உத்தரவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், திமுக எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நாளைய பட்ஜெட் தாக்கலின்போதும், விவாதத்தின்போதும் வர முடியாது.

தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும்.

பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். இதைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டம் ஒரு மாதத்துக்கு மேல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ள சங்கரன்கோவில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

அதேசமயம், வழக்கம் போல பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் ஆயத்தமாக உள்ளன. மின்வெட்டை முக்கியப் பிரச்சினையாக எழுப்பலாம் என்று தெரிகிறது. அதேபோல சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழுப்பபப்படும் என்று தெரிகிறது.

விஜயகாந்த் வர முடியாது

கடந்த சட்டசபைத் தொடரின்போது நாகைக் துருத்தி, கையை உயர்த்தி, விரல்களை நீட்டிப் பேசியதால் 10 நாட்களுக்கு விஜயகாந்த் தடை செய்யப்பட்டுள்ளார். அதேபோல அவைக் கூட்டத்தை செல்போனில் வீடியோ படம் எடுத்ததாக டி.ஆர்.பாலு மகன் ராஜாவும் தடை செய்யப்பட்டுள்ளார். எனவே இவர்கள் இருவரும் பட்ஜெட் தாக்கலின்போதும், பின்னர் நடைபெறும் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியாது.

கனமழை பெய்வதால் பள்ளிகள் செயல்படக்கூடாது

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகள் கட்டாயமாக செயல்படக்கூடாது, என கலெக்டர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 25ம் தேதி பலத்த மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்யாத போதிலும், பெரும்பாலான பள்ளிகள் மதியத்துக்கு மேல் விடுமுறை விடுக்கப்பட்டது. நேற்று கடும் மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுக்கப்படுவதாக கலெக்டர் சண்முகம் அறிவித்தார். இருப்பினும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், சில அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு வகுப்பு நேற்று நடந்தது. நேற்று கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""கனமழை தொடர்வதால் கட்டாயமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27, 28ம் தேதி விடுமுறை விடுக்கப்படுகிறது. அன்றைய தேதியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் எந்த கல்வி நிறுவனமும் வகுப்புகள் நடத்தக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

வயல்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.


இந்த மழை காரணமாக திருவாரூரில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.


நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


மேலும் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி குளிர் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையூர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி,


’’இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’’என்று தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீசினால், ஆயுள் தண்டனை!

ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முகத்தில் திராவகம் (`ஆசிட்') வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற இளம்பெண், இந்த குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். லட்சுமி சிறுமியாக இருந்த போது நடந்த இந்த தாக்குதலில் அவருடைய முகம் சிதைந்ததுடன், கண் பார்வையும் பறி போனது.


பெரும்பாலும் இளம்பெண்கள்தான் இந்த குற்றத்தினால் பாதிக்கப்படுவதால், அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சட்ட விதிகளில் வகை செய்ய வேண்டும் என்றும் லட்சுமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, `ஆசிட் 'வீச்சு குற்றத்துக்கு தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தரப்பில் மெத்தனமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.


இது கொலை குற்றத்தை விட மோசமானது என்பதால், இந்திய தண்டனை சட்டம் 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கொண்டு வரும் படியும் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவதற்காக, நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.


மத்திய உள் துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான அந்த குழு, `ஆசிட்' வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல், அதிக பட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.


அத்துடன் குற்றவாளிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவி தொகையாக வழங்கலாம் என்றும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, சுப்ரீம் கோர்ட்டு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.