"முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்'

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தமிழ் மாநில தேசிய லீக் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த 1969ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தான் முதல் முதலாக மிலாடிநபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்கிறார். இஸ்லாமியர் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சியாக இருப்பதால், இது மைனாரிட்டி ஆட்சி தான்.


தற்போதைய தமிழக அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் முதல்வர் கருணாநிதிக்கு இஸ்லாமிய மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலர் திருப்பூர் அல்தாப், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: