செப்., மாதத்துக்கான மின்தடை நேரம் : தஞ்சாவூர் மின் அதிகாரி அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மின்தடை செய்யப்படும் நேரங்களை தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தங்கராஜு அறிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: துணை மின்பாதை பகுதியில் பாபநாசம் நகர், கும்பகோணம் மகாமகம், திருக்காட்டுப்பள்ளி, திருக்கானூர்பட்டி இன்டஸ்டிரியல், திருவையாறு நகர், செங்கிப்பட்டி நகர் பகுதியில் காலை ஆறு முதல் எட்டு மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


கும்பகோணம் மேலக்காவரி மின்பாதை, ஆடுதுறை நகர், பட்டுக்கோட்டை நகர் 1, 2, ஒரத்தநாடு நகர், தஞ்சை கீழவாசல், தஞ்சை ஆய்வு மாளிகை, சுந்தரபெருமாள் கோவில் மின்பாதையில் காலை எட்டு முதல் பத்து மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


கும்பகோணம் நகர், திருபுவனம், காந்தி நகர், அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை நகர், வ.உ.சி., நகர், மதுக்கூர் நகர், கும்பகோணம் பெரிய தெரு மின்பாதைகளில் காலை பத்து முதல் 12 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


தஞ்சை கரந்தை மின்பாதை, கரந்தை பூக்குளம், தஞ்சை கிரிட் துணை மின்நிலையம் இண்டஸ்டிரியல், வல்லம், விளார், தஞ்சை கிரிட் துணை மின்நிலையம் முனிசிபல் மின்பாதையில் மதியம் 12 முதல் இரண்டு மணி வரையும் மின்தடை செய்யப்படும்.


பேராவூரணி நகர், தஞ்சை ஸ்டேடியம், வண்டிக்காரத்தெரு மின்பாதையில் மதியம் இரண்டு முதல் நான்கு மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

0 comments: