ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை உயர்வு

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களின் எண்ணிக்கை 53,906 ஆக இருந்தது. இது, சென்ற ஆகஸ்டு மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து 61,702 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கிகளின் சூஏ.டி.எம்' மையங்களையும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது.

இதனையடுத்து, இதர ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.


இது, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 5.68 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், பல வங்கிகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிதாக கிளைகளை தொடங்குவதுடன், ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றன.

நன்றி : நக்கீரன்


நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்

நாகூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் நீடாமங்லத்தில் நின்று சென்னை செல்லும் பயணிகளை ஏற்றி சென்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.நாகூரில் இருந்து சென்னைக்கு தினமும் கம்பன் எக்ஸ்பிரஸ் சென்று வருகிறது. நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பெரிய நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல தஞ்சை சென்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.


நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.

முத்துப்பேட்டையில் செப். 18-ல் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் செப். 18-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.


விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடத்தப்பட்டது. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு குறித்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஊர்வலம் செல்லும் பாதை, எழுப்பப்படும் கோஷங்கள் குறித்து இருதரப்பிடமும் சுமூகமான கருத்துகள் கேட்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிற்பகல் 4 மணிக்குள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6 மணிக்குள் பாமணி ஆற்றில் கரைக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஊர்வலம் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டவுள்ளது. விழா நடைபெறும் போது நடமாடும் மருத்துவக் குழுக்கள் உடன் செல்லவும், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி பேசியது:


கடந்த காலங்களில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்களின் போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 600 காவலர்கள் நிகழாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், இந்து அமைப்புகள் சார்பில் முருகானந்தம், கண்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அகமது பாசித், முகமது இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு விருது

பொது மக்களின் குறைகளை சிறப்பான வகையில் தீர்வு காண்பதை பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு "ஸ்காட்ச்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்களின் குறைகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தீர்வு காண 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க 97899-51111 என்ற எண்ணும் உள்ளது.மேலும், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தை பயன்படுத்தியும் பொதுமக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகிறது.குப்பைகள் அகற்றுதல், தெரு நாய்கள் பிடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், சொத்து வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு எரியாதது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சரி செய்யப்படுகின்றன.இந்த சிறப்பான பணிக்காக, அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் (ண்டுணிஞிட) நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு 2010ம் ஆண்டிற்கான "ஸ்காட்ச்' விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. வரும் 22ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

20,000 தமிழ் இளைஞர்களை காணவில்லை!

இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற விடுதலைபுலிகளுடனான இறுதிப் போரின்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அமைப்புகள் ராஜபக்சேவின் கைக்கூலிகளாக மாறி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. தற்போது இலங்கையில் போர் முடிந்த பின்னர் தமிழர் பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

தமி‌ழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவா‌ய்ப்பு அலுவலகங்களையும் வலைப்பின்னல் மூலம் ஒருங்கிணைத்து வேலைவா‌ய்ப்பு பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவு செ‌ய்து கொள்ளும் வசதியினையும், எம்பவர் என்ற புதிய இணையதளத்தினையும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலஇதுவரவேலைவாய்ப்பஅலுவலகங்களுக்கநேரிலசென்றுதானகல்விததகுதியைபபதிவசெய்முடியுமஎன்நிலஇருந்தவந்தது. தற்போதவேலைவாய்ப்புக்காபதிவசெய்தல், புதுப்பித்தலபோன்அனைத்துபபணிகளையுமவீட்டிலிருந்தபடியஆன்லைனிலசெய்தகொள்முடியும்.

இதற்காவேலைவாய்ப்புத்துறதனி இணையதளத்தஉருவாக்கியுள்ளது. இந்இணைதளத்ததுணமுதலமை‌ச்சரு.க.ஸ்டாலினஇன்றதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கதொழிலாளரநலத்துறஅமைச்சர் த.ோ. அன்பரசனதலைமவகித்தார்.

ஏற்கனவவேலவாய்ப்பஅலுவலகங்களிலபதிவசெய்தவர்கள், இந்இணைதளத்திலதங்களதபதிவஎண்ணஉள்ளிட்டதங்களதகல்வி விவரங்களசரிபார்த்துககொள்முடியும். இதற்கமூன்றமாகாஅவகாசமவழங்கப்பட்டிருக்கிறது. பதிவிலமாறுபாடஏதேனுமஇருப்பினஅதனஉரிசான்றிதழ்களுடனவேலைவாய்ப்பகத்தநேரிலஅணுகி சரிபார்த்துககொள்ளலாம்.

புதிதாபதிவசெய்தகொள்விரும்புவோரதங்களதகல்விததகுதி, பிறப்பு, ஜாதிசசான்றிதழ்களஸ்கேனசெய்தஇந்இணையதளத்திலபதிவேற்றமசெய்வேண்டும். இணையதமுகவரி www.tnvelaivaaippu.gov.in

ஆன்லைனிலபதிவசெய்வதஎப்படி: இணையதளத்திலுள்படிவத்திலவிவரங்களநிரப்பி சான்றிதழ்களஸ்கேனசெய்தபடிவத்திலவிண்ணப்பித்தவுடனஒரதற்காலிபயனாளி அடையாளமமற்றுமஏற்புச்சொலவரும். தங்களவிண்ணப்பத்தினவிவரங்களசரியானவஎனில் 7 நாட்களுக்குளவிண்ணப்பமவேலைவாய்ப்பஅலுவலகத்திலஏற்கப்படும். பதிவஅடையாஅட்டையதாங்களஉருவாக்கி, தாங்களஅச்சிட்டவெளியஎடுத்துககொள்ளலாம்.

கூடுதலபதிவசெய்வதஎப்படி: ஆன்லைனகூடுதலதகுதிகளபகுதியகிளிகசெய்வேண்டும். தங்களகோரிக்கையவேலைவாய்ப்பஅலுவலகமஏற்றபினபுதிஅடையாஅட்டையஎடுக்கலாம்.

ஆன்லைனிலபுதுப்பிக்இயலுமா: ஆம். ஆன்லைனிலபுதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கஒரமுறபதிவாமாதத்திலுமதொடர்ந்தவருமஇரமாதங்களுக்குள்ளுமபுதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்காலத்தபுதுப்பிக்காதவர்கள் 18 மாதசசலுகையிலபுதுப்பிக்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பமஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதஎப்படி அறிவது: தற்காலிகபபதிவஎண்ணை "பயன்படுத்துவோரஅடையாளமாகவும்" (username), பிறந்தேதியை, ஏற்புசசொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவினநிலையஅறியலாம்.

ஆன்லைனிலமுகவரி மாற்முடியுமா: ஆம். பதிவசெய்தவர்களதாங்களமுகவரியமாற்றிககொள்ளலாம்.

ஆன்லைனிலமுன்னுரிமைசசான்றினை (priority certificate) பதிஇயலுமா: முன்னுரிமைசசான்றுகள், எடுத்துக்காட்டாக, நிஎடுப்பபாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றிலமெய்த்தன்மஉறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகமுன்னுரிமைசசான்றுகளையுமஆன்லைனிலபதிஇயலாது. சான்றினநகல்களவிண்ணப்பத்துடனஅஞ்சலில/நேரிலவேலைவாய்ப்பகத்திற்கஅனுப்வேண்டும்.

இத்தளத்திலபதிவசெய்தகுதியானவரயார்: இத்தளத்திலதமிழ்நாட்டிலவசித்தவருபவரபதியலாம்.

இத்தளமமூலமபணி நாடுவோர்களுக்கஉள்வசதிகளயாவை: நேரிலபதிவு, நேரிலபதிவபுதுப்பித்தல், தகுதிகளஅதிகப்படுத்தல், அனுப்பப்பட்பதிவுக்காபதிவட்டஎடுத்தல், வேலைவாய்ப்பவிவரங்கள், பல்வேறதகுதிகளுக்காபரிந்துரவரம்புகளஅளித்தலஆகியவஉள்ளன.
நன்றி :வெப் துன்யா

பேச்சுவார்த்தைக்கு தயார்!

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எந்த அமைப்பினருடனும் அல்லது தனிநபர் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக விவாதிக்க இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மன்மோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்முறையாளர்கள், போலீசார், பாதுகாப்புப் படையினரால் பலர் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், ஆனால் வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் இல்லாத சூழ்நிலையில் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் உண்மை என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மலேசியாவில் கொல்லப்பட்டார் சென்னை பைனான்சியர்

சென்னையில் சினிமா பைனான்சியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டார். ஜனவரியில் மலேசியா சென்ற முத்துராஜா காணாமல் போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கணவர் திரும்பாததை அடுத்து மனைவி உஷாராணி மலேசிய போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் முத்துராஜாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று நண்பர்கள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து முத்துராஜா கொலை வழக்கில் மலேசியாவில் வழக்கறிஞர்கள் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட வக்கீல்கள் சுரேந்திரன், பத்மநாபன் இருவரும் சகோதரர்கள் ஆவர். எனவே இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே மலேசியாவில் 4 பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை

மதுரை புதிய விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கவேண்டும் என்று மத்திய அமை‌ச்ச‌ர் மு.க.அழகிரி ‌விடு‌த்த கோரிக்கையை அடு‌த்து விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவி‌த்துள்ளா‌ர்.


மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீடிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 128 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்பிலான இந்த கட்டிடம் 17 ஆயிரத்து 700 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான நிலைய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.


சிங்கப்பூர், இலங்கை, துபாய் போன்ற அய‌‌ல்நாடுகளுக்கு நேரடியாக மதுரையில் இருந்து செல்வதற்கு விமான சேவை இல்லை. சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று தான் அந்த நாடுகளுக்கு செல்லவேண்டி உள்ளது. அவ்வாறு இல்லாமல் நேரடியாக விமான சேவை இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மிக விரைவில், மதுரை விமான நிலையத்தில் இருந்து அய‌ல்நாட்டிற்கு விமானம் இயக்கப்படும். அது பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்குகள் போக்குவரத்தும் தொடங்கப்படும் எ‌ன்று ‌பிரபு‌ல் ப‌ட்டே‌ல் தெரிவித்துள்ளார்.

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: ஜனவரி 31-க்குள் வீடுகள் ஒப்படைப்பு


கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியது:

குடிசைகளை அகற்றி, கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் உலக அளவில் பாராட்டப்படுகிறது. 6 ஆண்டு கால திட்டமான இதன் மூலம், மொத்தத்தில் 21 லட்சம் பேர் பயன் அடையவுள்ளனர். முதற்கட்டமாக 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.

வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 6-வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பார். எனவே, அடுத்த 6 ஆண்டு காலத்துக்குள் கலைஞர் வீட்டு வசதித் திட்ட வீடுகள் கட்டும் பணி முடிóவடையும்.சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் 1967-க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் அங்கீகாரம் பெறாத நிலை இருந்தது.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், இதற்கான சட்டத்தை இயற்றினார். அன்று முதல் தமிழை செம்மொழியாக்கியது வரை திமுக அரசுதான் அனைத்தையும் செய்துள்ளது.தேர்தல் அறிக்கைகளை புத்தகமாக்கி, திமுக வெளியிட்டது. தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளர்கள் அல்ல. திமுகவின் தேர்தல் வாக்குறுதி புத்தகம்தான் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார் என்றார்.

செப். 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.


இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வீடு வீடாக நடத்தப்பட்டதால் ஜனவரியில் வெளியிடப்பட வேண்டிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ம் தேதி தான் வெளியிடப்பட்டது.


மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் அவகாசம் தரப்பட்டது. ஜூலை 1-ந்தேதி முதல் 16-ந்தேதிவரை இந்த பணிகள் நடந்தன.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகம் பேர் மனு செய்ததால் இறுதி பட்டியல் தயாரிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.


தற்போது புதிதாக சேர்க்க வந்த வாக்காளர் மனுக்கள் மீது வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.


இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வருகிற 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.


இந்த பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர்கள்தான் தேர்தலில் ஓட்டு போட முடியும். இனி 2011 ஜனவரியில்தான் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றார்.

என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும்


நான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை
சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.
தயாரிப்பாளர் கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின்
இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ட்ரைலரை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியது:

"எந்திரன்' சம்பந்தமாக இன்னும் நிறைய விழாக்கள் நடக்கப் போகிறது. அவற்றில் நான் பேச வேண்டும். அதனால் இங்கே கொஞ்சமாக பேசுகிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே. இந்த டிரெய்லரை மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே திரையிடுவதாக இருந்தோம். 'ரிலீசுக்கு இன்னும் நாள் இருக்கிறது பின்னர் வெளியிடலாமே' என்று ஷங்கர் கேட்டார். கலாநிதி மாறனும் அதற்கு சம்மதித்தார். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.

ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கிஇருக்கிறார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. 'படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்' என்று சொன்னோம்.

'அப்படியா… உங்களுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும்' என கலாநிதி கேட்டார். சொன்னோம். ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கிக் கொடுத்தார்.
இரண்டு வருஷம் முன்பு இந்த படம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, 'தென்னிந்தியாவில் பட புரமோஷனை நான் பார்த்துக் கொள்கிறேன். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்', என்று கலாநிதி மாறன் சொன்னார்.
'என் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் இவ்வளவு பெரிய படத்தை தயாரிக்கிறீர்கள். கண்டிப்பாக அதை செய்வேன்' என்று சொன்னேன்.

இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள்.

'ஒரே படத்தை பற்றி திரும்பத் திரும்ப நான் என்ன பேட்டி கொடுப்பது' என்று கலாநிதி மாறனிடம் கேட்டேன்.

அதற்கு அவர் 'நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால் போதும். ரெட் கார்பெட் எப்போதும் உங்களுக்காக விரிக்கப்பட்டிருக்கும்' என்று பதில் சொன்னார்.

படம் பற்றி முதலில் பேச்சு வந்தபோது, 'நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர்தான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன்?' என ஷங்கரிடம் கேட்டேன். நாலு நாள் செட்டுக்குப் போனேன். அதன்பின் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்.

அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு இயந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம் வொர்க் செய்து என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான்.

எளிமை ஏன்?

இங்கே வைரமுத்து பேசும்போது, 'நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன?’ என்று கேட்டார்.

அடுத்த படம் பற்றி நான் சிந்திப்பது என் வேலையில்லை. திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து எனக்கு தரும் வேலையைச் செய்வேன்.

என் எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் என்னை பெரிய சிகரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். இங்கிருந்து விழுந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும்.

இளமையாக இருக்க…

ஸ்டைலாக இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடல்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என்று இருந்தால் இளமையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் அது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமாகவே இருக்கும். ‘எந்திரன்’ அத்தகைய படம்தான்…" என்றார் ரஜினி.

விநாயகனை கைது செய்து சிறைவைத்த தமிழக காவல்துறையினர்!

மூலக்கடவுளாம், முழு முதற்கடவுளாம், எதையும் விக்னம் இல்லாமல் நிறைவேற்றுப வன் எனக் கூறப்படும். விநாயகன் கடவுள் - சிவ பெருமானின் மூத்த மகன் என்று ஆத்திகர் களால் அழைக்கப்படும் விநாயக கடவுளை கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி காவல்துறையினர் கைது செய்து சிறை வைத்தனர்.


விநாயகனை கூண் டோடு தூக்கும் பொழுது தடுத்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 146 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதுபற்றிய செய்தி வரு மாறு:


கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன் னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. மூன்றரை அடி உயர விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் வைத் தனர். சதுர்த்தி விழாவை யொட்டி, 20 ஆண்டு களாக அந்த இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைப் பது வழக்கமாம். கடந்த ஆண்டு இந்து முன்ன ணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை வைக்கவில்லையாம்.


இந்த ஆண்டு வழக் கம் போல் சிலை வைப்பதற்கு காவல்துறை யினரிடம் இந்து முன்ன ணியினர் அனுமதி கோரினர். சிலை வைக்கக் கூடாது காவல்துறை எதிர்ப்பு


வேண்டுகோளை நிராகரித்த காவல்துறை யினர் , பிள்ளையார் பொம்மையை வைக்கக் கூடாது என தடை விதித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர், பொறுப்பாளர் குணசே கரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் இரவு அங்கே வைத்தனர். தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் நாகராஜன், உதவி ஆணையாளர்கள் குமாரசாமி, பாலாஜி சரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித் தனர். காவல்துறையினரிடம், முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்ற னர். இதை கவனித்த பெண்கள், விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப் படுத்தவிடாமல் தடுத் தனர்.


இதையடுத்து, காவல் துறையினரால் அங் கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி னர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண் களை தவிர்த்து, விநாய கர் சிலையை காவல் துறையினரால் கைப் பற்ற முடியவில்லை. விநாயகன் கைது!


அதனால், கடவுள் விநாயகனையும், பெண் களையும் சேர்த்து கைது செய்து காவல்துறை யினர் வேனில் ஏற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை பாது காப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங் களை காவல்துறையினர் தேடி அலைந்தனர். விசேச நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த தால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண் ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர் களை இறங்க அறிவுறுத் தினர். ஒருவரும் இறங்கா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


காவல்துறையினர், கைது செய்தவர்களை காவல் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர். விநாயகனையும் இறக்கி வைத்தனர். இதை யடுத்து, கைது செய்யப் பட்டவர்களுக்கு மதிய உணவு காவல்துறையின ரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனை வரும் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனராம்.


நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய் யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் காவல் பயிற்சி மைதானத் திலேயே வைக்கப்பட் டனர். இதனிடையே இந்து முன்னணி நிரு வாகிகள் மற்றும் காவல் துறையினருக்குமிடையே சிலை வைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடந்ததாம். இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்பட வில்லையாம்.

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்


ஈத் முபாரக், உள்ளம்கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள், அன்புடன் அதிரை தமீம் & அதிரை பதுருதீன்

பெருநாள் தொழுகை

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.


நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.


கடமையான ஃபித்ரா

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

நோன்பில் நகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு "சாவு" ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93

நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

பெருநாள் தொழுகையின் நேரங்கள்
ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.

நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நபி அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி


மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி

தக்பீர்

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.

பெருநாள் வந்துவிட்டால் நபி அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி


நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.
இப்னு உமர்(ரலி), புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள்.
இப்னு உமர்(ரலி), புகாரி

திடலில் பெருநாள் தொழுகை

பெரும்பாலும் நபி அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா


நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை

நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்

நபி அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். புகாரி, திர்மிதீ

பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

ஓதிய வசனங்கள்

நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிரார்த்தனை

பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபி அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.

நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த