பிரதமர் அஞ்சலி

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தி உள்ளார்.


அஞ்சலியின் போது அவர், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களை பாகிஸ்தான் அரசு தண்டிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை தாக்குதலுக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு 68 பேர் பொறுப்பு,

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதற்கு 68 பேர் பொறுப்பு என்று நடவடிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தகர்க்கப்பட்ட பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.“லிபரான் ஆணையத்தின் எந்தப் பரிந்துரையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.
அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “ விசாரணை ஆணையம் பரிந்துரைகளையும் தாண்டி அரசு செல்லும்” என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.
“பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உண்மைகளை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அவைகள் மீது ஒவ்வொரு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில் தான் நடவடிக்கை தொடர்பான விவர அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய மொய்லி.
“நடவடிக்கை அறிக்கையில் 68 பேர் பாபர் மசூதி இடிப்பிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பது குறித்தும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது, இவைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

ரயிலில் பிறந்த குழந்தைக்கு பெயர் லாலு !!!

பீகார் மாநிலம் வழியே செல்லும் லோகித் எக்ஸ்பிரசில் நிறைமாத கர்ப்பிணி பெண் காயத்ரி (20) பயணம் செய்தார்.

ரயில் தேசிரி நிலையம் அருகே காசிபூர் பசாபர் இடையே வரும் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு அந்த பெண் லாலுபிரசாத் என பெயர் சூட்டுவேன் என கூறினார்.
ஏழைகள் மீதான அவரது அக்கறையான பேச்சு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.


காய்த்ரி லாலுபிரசாத் வெற்றிபெற்ற பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். தனது கணவர் வேலைபார்க்கும் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

அதிக மாணவர்களை ஏற்றினால் உ‌ரிம‌ம் ரத்து: த‌மிழக அரசு எச்சரிக்கை

பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனங்களின் உ‌ரிம‌ம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான மச்சேந்திரநாதன் எச்சரித்துள்ளா‌ர்.


இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படவேண்டுமென்று பலமுறை அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 2006ஆம் ஆண்டு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு தொடர்ந்து, அனைத்து பள்ளி வாகனங்கள் மேற்கண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



இருப்பினும் மேற்கண்ட அறிவுரைகளுக்கு மாறாக, சில பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தபடி உள்ளது. இத்தகைய செயல், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிராக இருப்பதுடன் விபத்துகள் நடக்க வழிவகை செய்கிறது.



எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகை வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வாகனத்தை கையகப்படுத்தி அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.



பள்ளிகள் தமக்கென்று சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்ளாமல், தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும்போது நல்ல திறமையான ஓட்டுனர்களை நியமித்து அவற்றை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.



பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை முறையாக தினசரி சோதனை செய்ய வேண்டுமென்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று மச்சேந்திரநாதன் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை சுற்றுலா நட்பு ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதி

செ‌ன்னை‌யி‌ல் சு‌ற்றுலா ந‌ட்பு ஆ‌ட்டோ வாகன ஓ‌ட்டுந‌ர்களு‌க்கு த‌மிழக அரசு அனும‌தி அ‌ளி‌த்து ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்து‌ள்ளது.


சென்னை மாநகரில் இயங்கும், 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்க
ு (Tourist Friendly Auto Drivers) நடைமுறையில் உள்ள தடை ஆணை, நிபந்தனைகளைத் தளர்த்தி ஆட்டோ ஓட்டுநர் அனுமதி ஆணை (Permit) வழங்குமாறு, சுற்றுலா பண்பாட்டுத் துறையின் கோரிக்கையின் பேரில் போக்குவரத்து ஆணையரஅரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.


இந்த 39 ஆட்டோ ஓட்டுநர்கள் நல்லமுறையில் பயிற்ச
ி பெற்றுள்ளார்கள் என்றும், கடந்த 11 மாதங்களாகத் தங்களது சுற்றுலா நட்பு ஆட்டவாகனம் மூலம் சிறப்பாகப் பணியாற்றி, சுற்றுலா பயணிகளிடம் நற்பெயரஎடுத்துள்ளதாகவும் அவர் தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தார்.


ஆட்டோ ர
ி‌க் ஷா அனுமதி ஆணை (Permit) மானியத் திட்டத்தின் ‌கீ‌ழ் அனுமதி வழங்க போதிய காலியிடம் இல்லாததால், மேற்காணும் 39 ஆட்டோ ரி‌க் ஷா ஓட்டுநர்களுக்கு மானியம் அல்லாத திட்டத்தின் கீ‌ழ் (Non Subsidy Scheme) பரிசீலனை செ‌ய்யலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.


போக்குவரத்து ஆணையரின் பரிந்துரையை அரசு ஏற்று, 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு (
Tourist Friendly Auto Drivers) தற்போது நடைமுறையில் உள்ள தடை ஆணையில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி போன்ற சில நிபந்தனைகளை, அவைகளை நிறைவு செ‌ய்யாத விண்ணப்பதாரர்கள் சார்பாக தளர்த்தி, அரசு மானியம் அல்லாத ஆட்டோ ரி‌க் ஷா அனுமதி ஆணை (Permit under Non-subsidy Scheme) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

கடலோர பகு‌தி‌க‌ளி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு

மு‌ம்பை‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளநட‌‌த்‌‌திதா‌க்குத‌ல் ‌தினமாநவ‌ம்ப‌ர் 26ஆ‌மதே‌‌தி வருவதையொ‌‌ட்டி த‌மிழக‌த்‌தி‌னதெ‌ன்‌கிழ‌க்ககடலோபகு‌தி‌யி‌லபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.


மு‌‌ம்பை‌யி‌ல் ‌
மீ‌‌ண்டு‌ம் தா‌க்குதலை நட‌த்த ‌‌தீவ‌ிரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு இரு‌ப்பதாக உள‌வு‌த்துறை‌யின‌ர் ‌ச‌மீப‌த்த‌ி‌ல் ‌விடு‌த்த எ‌ச்ச‌ரி‌க்கையை தொட‌ர்‌‌ந்து தெ‌ன் ‌கிழ‌க்கு கடலோர‌ப் பகு‌தி‌க‌ளி‌ல் இ‌ந்‌திய கட‌ற்படை‌யு‌ம், கடலோர காவ‌ல்படை‌யினரு‌ம் ‌தீ‌விர ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.


இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு உ‌ட்ப‌ட்ட பா‌க்ஜலச‌ந்‌தி‌யி‌ல் இ‌ந்‌திய கட‌ற்படை‌யினரு‌ம், கடலோர காவ‌ல்படை‌யினரு‌ம் ‌தீ‌விர க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல் ஈடுப‌ட்டு வரு‌‌கி‌ன்றன‌ர்.



உ‌ச்‌சிபு‌லி‌யி‌ல் உ‌ள்ள ‌விமான க‌ண்கா‌ணி‌ப்பு ‌நிலைய‌ம் உஷா‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. மேலு‌ம் பா‌க்ஜலச‌ந்‌தி, ம‌ன்னா‌ர் வளைகுடா பகு‌தி‌யிலு‌ம் க‌ண்கா‌‌ணி‌ப்பு ‌‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.



மீனவ‌ர்க‌ள
ச‌ர்வதேச ‌எ‌ல்லையை தா‌ண்ட வே‌ண்டு‌ம் என‌்று‌ம் த‌ங்களுடைய அடையாள அ‌ட்டைகளை வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மூ‌த்த அ‌‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடல்வழி ஊடுறுவலா?

கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் கடலோர காவல்படையை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.


இத்துடன், கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் சந்தேகப்படும் வகையில் யாரையாவது கண்டால் உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க தனி தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டுள்ளது.


1093 என்ற இந்த தொலைபேசி எண்ணை அழைக்க கட்டணம் கிடையாது. இவ்வசதியை தமிழக கடலோர காவல் படை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயராமன் கூறினார்.

வெள்ளை மாளிகை விருந்தில் ரஹ்மான்

வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த சிறப்பு இரவு விருந்தில் இந்திய வாசமே தூக்கலாக இருந்தது. மேலும் அனைவரும் வியக்கும் வகையில் மன்மோகன் சிங்கை இந்தியில் வரவேற்று அசத்தினார் ஒபாமா. ஒபாமாக அதிபரான பின்னர் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று ஒபாமாவை அவர் சந்தித்தார். அப்போது பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளிப் பகுதியில், பிரமாண்ட விருந்தளித்தார் ஒபாமா. பிரதமர் மன்மோகன் சிங் விருந்துக்கு வந்தபோது ஆப்கா ஸ்வாகத் ஹை என்று இந்தியில் கூறி அசத்தினார் ஒபாமா. பிரதமருடன் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் இந்திய வாசம் தூக்கலாக காணப்பட்டது. சாப்பாட்டில் மட்டுமல்லாமல் வந்திருந்த புள்ளிகளும் பெரும்பாலும் இந்தியப் பிரபலங்களாக இருந்தனர். விருந்தில் இடம் பெற்ற காய்கறிகளில் பல அதிபரின் மனைவி மிஷல் ஒபாமாவின் நேரடி மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளை மாளிகை தோட்டத்தில் வளர்ந்தவையாம். விருந்தின் முதல் சுற்றில் உருளைக்கிழங்கு மற்றும் எக்பிளான்ட் (கத்தரிக்காய்) சாலட், ஃபிரஷ் சீஸ் உடன் பருப்பு சூப் ஆகியவை பரிமாறப்பட்டன. அடுத்து, கிரீன் கறி ப்ரான், வறுத்த உருளைக்கிழங்கு, தக்காளி சட்னி, தேங்காயில் ஊறவைத்த பாசுமதி என களை கட்டியது. உணவு விருந்துக்கு பிறகு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை விருந்து அளிக்கப்பட்டது. இதனால் வயிறோடு, இதயமும் நிறைந்தது. ரஹ்மானின் இசையைத் தொடர்ந்து, கிராம்மி விருது வென்றவர்களான ஜெனிஃபர் ஹட்சனின் சொக்க வைக்கும் பாடல்கள் இடம் பெற்றன. கர்ட் எல்லிங்கின் ஜாஸ் இசையும் நிறைவு சேர்த்தது. விருந்தினர்கள் வரிசையில், இந்தியா வின் பவர்ஃபுல் முகங்களோடு, அமெரிக்கா வாழ் இந்தியர்களான பெப்சி தலைமை செயலதிகாரி இந்திரா நூயி, ஆன்மிக ஆலோசகர் தீபிகா சோப்ரா, பிரபல ஹாலிவுட் இயக்குனரும் தமிழருமான (சிக்ஸ்த் சென்ஸ், வில்லேஜ், அன்பிரக்கபிள், சைன்ஸ் உள்ளிட்ட அட்டகாச படங்களை இயக்கியவர்) மனோஜ் நைட் ஷியாமளன் மற்றும் சர்வதேச மீடியா பெரும் புள்ளிகளும் விருந்தி்ல் பங்கேற்றனர். ஹாலிவுட் ஜாம்பாவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க், டேவிட் ஜெஃபன், ஜெஃப்ரி கெட்சன்பர்க் மற்றும் ஆல்ஃப்ரே உடார்ட், பிளெய்ர் அண்டர்வுட் ஆகியோரும் வந்திருந்தனர். ரஹ்மான் நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு அவரை மிஷல் அறிமுகப்படுத்தினார். அப்போது மிஷல் கூறுகையில், இவர் ஆஸ்கர் விருது வென்றவர். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தவர். நீங்கள் எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகவும் அற்புதமான படம் என்றார் மிஷல்.

மத்திய சிறை மருத்துவக் கல்லூரியாக மாறுகிறது

மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முன்வந்துள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.


இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


சென்னை பூங்கா நகரில் மத்திய சிறைச் சாலை இருந்த இடத்தில் சென்னை மருத்துவ கல்லூரிக்கு சர்வதேச தரத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் இவ்வரிப்பை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.

84 கோடி செலவு !

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு (2010) அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு இதற்காக கோடிக்கான ரூபாயை செலவழிக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவுக்கு ரூ.84 கோடி செலவழிக்கப்படுகிறது. இதை மத்திய விளையாட்டு துறை இணை அமைச்சர் பிரதிக் பிரகாஷ்பாபு பாட்டீல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் மரணம் .

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் உச்சிகவுடர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த உச்சிகவுடர் கூடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறந்த முறையில் பணியாற்றி உள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

மார்ச் 1ல் பிளஸ்டூ தேர்வு தொடக்கம்- எஸ்.எஸ்.எல்.சிக்கு 10ம் தேதி முதல்

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 10ம் தேதி முதல் நடைபெறும்.


இதற்கான உத்தேசக் கால அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.


வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பிளஸ்டூ தேர்வும், ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்புத் தேர்வும் நடைபெறுவது வழக்கம்.


இந்த ஆண்டு இரு தேர்வுகளும் மார்ச் மாதத்திலேயே தொடங்கின.


அதேபோல அடுத்த ஆண்டு தேர்வும் மார்ச் மாதத்திலேயே தொடங்குகிறது.


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடங்கவுள்ளது. மார்ச் 10ம் தேதி எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இதற்கான கால அட்டவணை தயாராகியுள்ளது. இதை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அறியவுள்னர். அதன் பின்னர் இறுதி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

நர​சிம்​ம​ராவை ஏன் சேர்க்கவில்லை?-சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு தொடர்​பாக லிப​ரான் கமி​ஷன் வெளி​ட்டுள்ள அறிக்​கை​யில் முன்​னாள் பிர​த​மர் நர​சிம்மராவை​யும் சேர்க்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் பொதுச் செய​லாளர் ஏ.பி.பர​தன் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில்,


லிப​ரான் அறிக்​கை​யில் அப்​போது மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த நர​சிம்​ம​ராவ் அர​சை​யும் இணைத்​தி​ருக்க வேண்​டும். அவ்​வாறு சேர்க்​கா​தது அறிக்​கை​யில் பெரிய இடை​வெ​ளியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது. அந்த தவறை சரி​செய்ய வேண்​டும்.​


மசூதி இடிக்கப்படும் வரை ராவ் அமைதியாக இருந்தார். இதனால் குற்​றம் சுமத்​தப்​பட்​டுள்​ள​வர்​க​ளின் பட்​டிய​லில் அவ​ரது பெய​ரை​யும் சேர்க்க வேண்​டும்.


அதே நேரத்தில்​ பாபர் மசூதி இடிப்​பில் வாஜ்​பாய் குற்​ற​மற்​ற​வர் என்பது எனது தனிப்​பட்ட கருத்​து என்றார்.

ஒபாமா- நம்பலாமா?

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றம் தடைகள் நீக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.


ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அதை நிறைவேற்ற ஒபாமா அரசு வேகம் காட்டவில்லை. இதனால் மத்திய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.


இந் நிலையில் ஒபாமா அதிபரான பின்னர் அமெரிக்காவில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மன்மோகன் சிங்.


நேற்று வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு 19 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இரு தலைவர்களும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது ஒபாமாவின் மனைவி மிச்செல், மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கெளர் ஆகியோரும் உடனிருந்தனர்.


பின்னர் சம்பிரதாய முறைப்படி இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அதிபராக ஒபாமா பதவி ஏற்றபின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் முதல் வரவேற்பு நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.


மன்மோகன் சிங்கை வரவேற்ற ஒபாமா, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்காவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.


ஒபாமா பேசுகையில், எனது தலைமையிலான ஆட்சியின் முதல் அதிகாரபூர்வ விருந்தினர் நீங்கள்தான். இந்த அங்கீகாரத்துக்கு நீங்களும் இந்தியாவும் முழுத் தகுதி பெற்றவர்கள். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலகப் பொருளாதார சரிவை மீட்டு பலப்படுத்த முடியும். அமெரிக்கா திட்டமிட்டுள்ள வருங்கால உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.


அணுசக்தி நாடான இந்தியா 'ஆசியாவின் தலைவர்'. (இதன்மூலம் இந்தியாவை அணு சக்தி நாடு என அமெரிக்கா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது).


அணுசக்தி நாடுகள் என்ற முறையில் உலகின் அதிபயங்கர அணு ஆயுத பரவலை நாம் தடுக்க முடியும் என்றார்.

போக்குவரத்து மாற்றம்

வாகன நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை மயிலாப்பூர் லஸ் சாலையில் வரும் 28ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


லஸ் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 28ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு மிகா வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


லஸ் சர்ச் சாலையானது, லஸ் சந்திப்பில் இருந்து ஆழ்வார்பேட்டை சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. ராயப்பேட்டை நெடுஞ்சாலையானது, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி.எஸ்.சிவகாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.


கற்பகாம்மாள் நகர் மற்றும் பி.எஸ்.சிவகாமி சாலையானது லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர் சந்திப்பில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.


இந்த மாற்றங்களின் விளைவாக லஸ் சந்திப்பை சுற்றியுள்ள சாலைகளில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இது வரை ஆர்.கே.மடம் சாலையல் இருந்து லஸ் சந்திப்பு வழியாக நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் லஸ் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திருப்பி லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.


இதுவரை லஸ் அவென்யூ பகுதியில் இருந்து லஸ் சந்திப்பிற்கு, லஸ் சர்ச் சாலை வழியே சென்ற வாகனங்கள் இனிமேல் கற்பகாம்மாள்நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.இதுவரை ஆழ்வார்பேட்டையில் இருந்து ஆலிவர் ரோடு, கற்பகாம்மாள்நகர் லஸ் சர்ச் சாலை வழியாக லஸ் சந்திப்பு சென்ற வாகனங்கள் இனி மேல் ஆலிவர்ரோடு, பி.எஸ்.சிவசாமி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.


இதுவரை நீலகிரீஸ் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை, கற்பகாம்மாள்நகர் வழியாக லஸ் சர்ச்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு வழியாக லஸ் சர்ச் சாலை செல்லலாம்.சாந்தோம் பகுதியில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராயப்பேட்டை சென்ற வாகனங்கள் இனிமேல் கச்சேரி சாலை லஸ் சந்திப்பில் நேராக லஸ் சர்ச்சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.


ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, கற்பகாம்மாள் நகர் வழியாக லஸ் சர்ச் சாலை சென்ற வாகனங்கள் இனி மேல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி லஸ் சார்ச் சாலை செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.