மெரினா கடற்கரையில் கிடந்த 5 கிலோ கஞ்சா
மெரினா காவல்துறை ஆய்வாளர் முகமது நாசர் தலைமையில் காவலர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது காந்தி சிலை பின்புறம் கடற்ரை மணலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பொட்டலம் கிடந்ததை காவல்துறையினர் கண்டெடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் 5 கிலோ கஞ்சா இருந்ததை தொடர்ந்து அதனை அவர்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: அன்பழகன் அறிவிப்பு
அலுவலகங்களுக்கு ஒரு வாரம் லீவு… செலவைக் குறைக்க யாஹூவின் புதுமுயற்சி!
வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை உலகெங்கும் உள்ள தங்களின் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் சமயங்களில் பாதிப்பில் இருந்து தப்ப, யாஹூ மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை, செலவு குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்த கட்டாய விடுமுறை திட்டம்.
யாஹூ மட்டுமல்லாது, அடோப், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை கட்டாய விடுப்பு அறிவித்துள்ளன.
‘மந்தமான சமயங்களில் அலுவலகத்தை மூடி, பணியாளர்களையும் சுதந்திரமாக விடுவதன் மூலம், அலுவலக நடைமுறை செலவுகள் குறைவதோடு, பணியாளர்களை ரீ-சார்ஜ் செய்தது போலவும் ஆகும்’ என்று யாஹூ செய்தித் தொடர்பாளர் டானா லெங்கீக் விளக்கம் தந்துள்ளார்.
இந்த ஒரு வார கால விடுமுறையை அமெரிக்காவில் உள்ள யாஹூ பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தங்களின் சம்பளமில்லா விடுமுறை நாள்களை கழித்துக் கொள்ள இது உதவும் என்றும், நடைமுறையில் நிறுவனத்துக்கும் செலவு கணிசமாக குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருள் வழங்காத குடும்ப அட்டைகள்
தணிக்கையின்போது இல்லாத குடும்பங்கள் மற்றும் முகவரி மாறிய குடும்பங்களின் ரேஷன் கார்டுகளுக்கு பொருள் வழங்கல் நிறுத்தம் ஆணைகள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு அங்காடியில் 21-12-2009 அன்று முதல் விளம்பரப்படுத்தப்பட உள்ளது.
இந்த பொருள் நிறுத்தம் ஆணைகள் தொடர்பாக முறையீடு செய்ய ஏதுவாக இதுகாறும் பொருள் பெற்று வந்த ரேஷன் கடைகளிலேயே முறையீடு படிவம் அச்சடித்து இலவசமாக வழங்கப்படுகிறது.
அந்த படிவங்களை பெற்று அதில் விவரங்களை பூர்த்தி செய்து ரேஷன் கார்டு நகல் மற்றும் இருப்பிட ஆதாரம் (வாக்காளர் அடையாள அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், ஓட்டுநர் உரிம நகல், பாஸ்போர்ட் நகல், எரிவாயு சிலிண்டர் நிரப்பு ரசீது, அஞ்சல் துறை வழங்கும் இருப்பிட அடையாளஅட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல்) ஒன்றின் நகலை இணைத்து ரேஷன் கடையிலேயே கொடுத்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
முறையீடு மனுக்கள் 31-01-2010 தேதிக்குள் அங்காடியில் கொடுக்கப்பட வேண்டும். அங்காடியில் முறையீடு மனு அளித்த ரேஷன் கார்டுகளுக்கு அவர்களது முறையீடு மீதான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து பொருள் வழங்கப்படும்.
இந்த மனுக்கள் மீது நேரடி விசாரணை செய்து உண்மையில் வசிப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ரேஷன் கார்ட்டில் உரிய முகவரி மாற்றம் செய்து கொடுத்து தொடர்ந்து பொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தேதிக்குள் முறையீடு செய்யப்படாத ரேஷன் கார்டுகள் வசிக்காத போலி ரேஷன் கார்டுகள் என கருதி ரத்து செய்யப்படும். எனவே உண்மையான ரேஷன் கார்டுதாரர்கள் எவரும் இது தொடர்பாக கவலை அடையத் தேவையில்லை. மேலும் பொருள் நிறுத்தம் தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம் என ரேஷன் கார்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கார்டுதாரர்கள் வசதிக்காக பொருள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கார்டுகள் குறித்த விவரம் http://www.consumer.tn.gov.in/cardstatus இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது ரேஷன் கார்டு எண்ணை மட்டும் பதிவு செய்தால் அந்த ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றுள்ளதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். தங்களது ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றிருந்தால் இதே இணையதளத்தில் உள்ள முறையீட்டு மனுவின் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து மனுவினை பூர்த்தி செய்து இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் நேரில் கொடுத்து ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம்.
இது பற்றி சந்தேகங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
அதன் விவரம் வருமாறு:-
துணை ஆணையர் (நகரம்) தெற்கு, போன்: 28551026, செல்: 94450 00160.
தியாகராயநகர் போன்: 28156674, செல்: 94450 00161.
பரங்கிமலை, போன்: 22604411, செல்: 94450 00163.
சைதாப்பேட்டை, போன்: 24328198, செல்: 94450 00165.
சோழிங்கநல்லூர், போன்: 24502575, செல்: 94450 00402.
துணை ஆணையர் (நகரம்) வடக்கு, போன்: 28551028, செல்: 94450 00152.
பெரம்பூர், போன்: 25593050, செல்: 94450 00154.
வில்லிவாக்கம் போன்: 26171451, செல்: 94450 00157.
திருவொற்றியூர், போன்: 25992828, செல்: 94450 00159.
ஆவடி, போன்: 26375560, செல்: 94450 00403.
மாநில நுகர்வோர் சேவை மையத்தின் போன்: 28592828.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐ.... நாளைக்கும் லீவு !
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார். விடுமுறைக்கான மாற்று பணிநாள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (23.12.2009) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்
பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன், “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.
அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.
உடனே, ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.
செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்
விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை.
இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று சமரசம் செய்தனர். அந்த வாலிபரை கண்டிக்காமல் சென்றுவிட்டனர்.
சக பயணிகளும் யாரும் அந்த பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனால் தைரியமான அந்த வாலிபர் மீண்டும் சில் மிஷத்தில் ஈடுபட்டார்.
அதோடு அந்த பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டவும் செய்தார். பதிலுக்கு அந்த பெண்களும் திட்டினார்கள். அந்த வாலிபரிடம் நீ பேசியது தப்பு என்று மன்னிப்புக் கேள் என்றனர்.
திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதோடு அந்த பெண்களை மேலும் இழிவாகப் பேசினார். இது அந்த பெண்களை கொதித்தெழ வைத்தது. அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
வாலிபரை அவர்கள் சூழ்ந்து கொண்டு துவைத்து எடுத்தனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து அந்த வாலிபரை தாக்கினார்கள்.
“ஜெய்ப்பூரில் விமானம் இறங்கியதும் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று அந்த வாலிபர் மீசையை முறுக்கினார். அதற்கும் அந்த பெண்கள் பயப்படாமல் அடித்து உதைத்தனர்.
ஜெய்ப்பூரில் விமானம் தரை இறங்கிய பிறகும் அந்த பெண்களுக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு நீடித்தது. அந்த வாலிபர் மீது பெண்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த பெண்கள் புகாரை வாபஸ் பெற்றதால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகரை தூக்கில் போடக்கோரி ஆர்ப்பாட்டம்
இரானில் அயதுல்லாவின் உடலடக்கத்தின் போது மோதல்கள்
இரானில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மூத்த மதகுருக்களில் ஒருவரான கிராண்ட் அயதுல்லா ஹொஸைன் மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளில், நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.புனித நகரமான குவாமில் இடம் பெற்ற அவரது நல்லடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான மிர் ஹொஸைன் முசவியும், மெஹ்டி கரூபியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவரது நல்லடக்கத்தின் போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த்வர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்வானது எதிகட்சியினரின் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலை அளித்துள்ளது என்றும், இந்த வாரத்தில் அது மேலும் பரவலாம் என்றும் டெஹ்ரானில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
காவல் அதிகாரிகளை நான் சுடவில்லை:
மும்பையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது மும்பை காவல்துறை அதிகாரிகள் ஹேமந்த் கார்க்கரே, அசோக் காம்தே, விஜய் சலேஸ்கர் ஆகியோரை சுட்டுக் கொன்றது தான் அல்ல என்று அஜ்மல் கசாப் கூறியுள்ளார்.இந்தியாவில் முதலீடு வெளிநாட்டினர் அச்சம்
பிரிட்டனை சேர்ந்த மேப்பிள்கிராப்ட் என்ற நிறுவனம் மாறி வரும் அரசியல் அபாய குறியீட்டெண் பட்டியலை 196 நாடுகளுக்கு அவ்வப்பொழுது வெளியிடுகிறது.கோவை மாநகர் அழகுபடுத்தப்படும்!
உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் கோவை மாநகர் அழகுபடுத்தப்படும் என்று மேயர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரை அழகுபடுத்த 35 இடங்களில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 52வது வார்டு ஏ.கே. எஸ். நகரில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
கோவை மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உள்பட பலர் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர்
வெங்கடாசலம்,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் கோவை மாநகரை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பூங்காக்கள் அழகுபடுத்தி வர்ணம் பூசப்படும் என்றார்.
கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது,
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பூங்கா, நடைபாதைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். ரோடுகளின் சந்திப்புகள் அழகு படுத்தப்படும். சுகாதார வசதி, சாலை மேம்பாட்டு வசதி செய்யப்படும். தெரு விளக்குகள் முழுமையாக பராமரிக்கப்படும். விளக்குகள் இல்லாத இடத்தில் புதிதாக விளக்குகள் அமைக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்படும் என்றார்.
வெடி குண்டுகளுடன் வாலிபர் கைது
மத்திய பிரதேச மாநிலம் மகோபா நகரில் ஜான்சி நகருக்கு செல்லும் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இன்று காலையில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இருந்ததால் இந்த சோதனை நடந்தது. அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் திரிந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அவனிடம் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான வெடிபொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள நாளிதழைக் கன்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு?
தேஜஸ் என்ற மலையாள நாளிதழைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஒரே நாளில் ரூ.127 கோடி வசூல்
அவதார் ஹாலிவுட் திரைப்படம் வசூலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. வெளியிடப்பட்ட முதல் நாளில் மட்டும் ரூ.127 கோடி வசூலாகி உள்ளது.டைட்டானிக், டெர்மினேட்டர் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், அவதார் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.