ஜான்சன் & ஜான்சன் நிறுவனர் பேத்தி மர்ம சாவு

லாஸ் ஏஞ்சலெஸ் ஜான்சன்-ஜான்சன் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான முதலாம் ராபர்ட் உட் ஜான்சனின் கொள்ளுப் பேத்தியான கேசி ஜான்சன் தனது வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இறந்து பல நாட்களான நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படுக்கை அறையில் அவர் பிணமாகக் கிடந்ததை வேலைக்காரப் பெண் பார்த்து போலீஸாருக்குத் தெரிவித்த பின்னர்தான் அவரது மரணம் குறித்த தகவல் வெளியானது.30 வயதாகும் கேசி ஜான்சன், ராபர்ட் ஜான்சனின் கொள்ளுப் பேத்திகளில் ஒருவர். ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையவர்.
கடந்த டிசம்பர் மாதம் டிவி நடிகையான டிலா டெக்யூலாவுக்கும், தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அறிவித்தார்.அவருக்கு முன்பு, கர்ட்னி செமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். கர்ட்னிக்கும், கேசிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கர்ட்னி, கேசியின் தலைமுடிக்குத் தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.2006ம் ஆண்டு கேசிக்கும், அவரது உறவினரான எலிசபெத் ராஸ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எலிசபெத், தனது காதலர் ஜான் டீயை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார் கேசி.2007ம் ஆண்டு கஸகஸ்தான் நாட்டிலிருந்து ஏவா என்ற குழந்தையை மகளாக தத்தெடுத்தார். அக்குழந்தைக்கு மர்லின் மன்றோ நினைவாக ஏவா மன்றோ என பெயர் சூட்டினார்.கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருட்டு வழக்கில் கைதானார் கேசி. முன்னாள் காதலியான கர்ட்னியின் தோழியான ஜாஸ்மின் என்பவரின் நகை, ஷூக்கள், ஆடைகள், ஜட்டிகள் உள்ளிட்டவற்றை திருடியதாக வந்த புகாரின் பேரில் கேசி கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜாஸ்மின் வீட்டில் பயன்படுத்திய வைப்ரேட்டரை விட்டுச் சென்றதாகவும், கேசி மீது புகார் கூறப்பட்டது. கேசியின் வாழ்க்கை முழுவதும் பரபரப்பானதாகவே இருந்தது. 8 வயதில் அவருக்கு சர்க்கரை வியாதி தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய தந்தை நான்காம் ராபர்ட் உட் ஜான்சன், சர்க்கரை வியாதியை எதிர்த்துப் போராடும் அமைப்பை உருவாக்கினார்.கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று ட்வீட்டர் மூலம், அனைவருக்கும் இனிய கனவுகள் அமையட்டும், நான் ஒரு புதிய காரை வாங்கியுள்ளேன் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் கேசி.
அதன் பின்னர் அவருடனான தொடர்பு இல்லாமல் போனது. காதலி கர்ட்னி, பலமுறை கேசியைத் தொடர்பு கொள்ள முயன்றும் போனில் அவரைப் பிடிக்கவில்லை. இந்த நிலையில்தான் வீட்டு வேலைக்காரப் பெண் கேசி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பது தெரியவில்லை. ஆனால் கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்

ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் தீ வைத்து எரிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் கடும் தாக்குதல்களில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய வம்சவாளி இளைஞர் ஒருவர் தீவைத்துக் கொளுத்தப்பட்டார். கடும் தீக்காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த இளைஞருக்கு வயது 29. அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு மெல்போர்ன் நகரின் எஸ்ஸன்டன் என்ற பகுதியில் அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி தீவைத்தது.எஸ்ஸன்டன் பகுதியில் நடந்த டின்னர் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் அவர் கலந்து கொள்ள வந்தார். டின்னரை முடித்து விட்டு கிரிஸ் கிரசன்ட் பகுதியில் உள்ள தங்களது வீட்டுக்குத் திரும்பினர்.
மனைவியை இறக்கி விட்டு காரை பார்க் செய்ய அந்த இந்திய இளைஞர் முயன்றபோது திடீரென ஒரு கும்பல் வந்து தாக்கியுள்ளது. பின்னர் அவருக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.இதில் அந்த இளைஞரின் தோள்பட்டை, மார்பு, முகம் ஆகியவை கருகிப் போய் விட்டது. துடிதுடித்த அவரை மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு ஆல்பிரட் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.அவருக்கு 20 சதவீத அளவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தப் புதிய சம்பவத்தால் இந்தியர்களிடையே மேலும் பீதி ஏற்பட்டுள்ளது.

நாகை அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம் சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் இறந்த டால்பின் குட்டி கரை ஒதுங்கியது.

டால்பின் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து இது இறந்திருக்கலாம் என மீனவர்கள் கூறினர். டால்பின் குட்டியின் உடலில் எந்தக் காயமும் இல்லை.

கடற்கரைக்கு வந்தபோது நீந்திச் செல்ல முடியாமல் அது இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இது நீண்ட மூக்குடைய டால்பின் வகையைச் சேர்ந்ததாகும். இந்த வகை டால்பின்கள் பசிபிக் பெருங்கடலிலும், மன்னார் வளைகுடாவிலும் அதிகம் காணப்படுகிறது.

இது ஒரு அரிய வகை டால்பின் ஆகும். இதன் காரணமாக மன்னார் வளைகுடாப் பகுதியில் இந்த வகை டால்பின்களைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மதத்தை விமர்சிக்கலாம்-அவதூறு கூடாது-நீதிமன்றம்

எந்த மதத்தையும் விமர்சிக்கத் தடை கிடையாது. ஆனால் அவதூறான விமர்சனமோ, துவேஷமான பிரசாரமோ கூடாது, அதை ஏற்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கறிஞர் ஆர்.வி.பாசின் என்பவர் 'Islam - A concept of Political World Invasion By Muslims' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்திற்கு மகாராஷ்டிர அரசு 2007ம் ஆண்டு தடை விதித்தது.

இதை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், இஸ்லாம் என்றில்லை, எந்த மதத்தையும் விமர்சிக்கலாம். ஆனால் மதத்தை அவதூறு செய்வதோ, ஒட்டுமொத்த மதத்தையும் வில்லன் போல காட்டுவதோ, துவேஷமாக பிரசாரம் செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்குரானின் பொருளை சரியான முறையில் புரிந்து கொண்டு, அதன் வரலாற்றுத் தன்மையை மனதில் கொண்டு அதுகுறித்து விவாதிக்கலாம். அதேசமயம், அதை தவறான கோணத்தில் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

வெடிபொருள்கள் பறிமுதல்; முன்னாள் இராணுவ வீரர் கைது!

முன்னாள் இராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் லால்கஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். ஷ்யாம் சுந்தர் பட்டேல் என்ற அந்த இராணுவ வீரரும் ராம்ஜி பட்டேல் என்பவரும் மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடமிருந்து சுமார் 4,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 4,000 எலெக்ட்ரானிக் டெடனேட்டர் ஆகியவை மிர்சாபூர் மாவட்டத்தில கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருள்கள் 9 சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன..

ஈரானில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது

ஈராக் எல்லையில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்க குடிமகன்களின் நோக்கம் உளவு வேலைப்பார்ப்பதுதான் என்று ஈரான் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஷைன் போவர், ஸாரா சுர்த், ஜோஷ் பட்டல் ஆகியோர் ஈரான் போலீசிடம் சிக்கினர். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று விட்டுத்தான் இம்மூவரும் ஈரான் வந்துள்ளனர்.

உளவு பார்ப்பதற்காகத்தான் இவர்கள் ஈரான் வந்துள்ளதாக ஈரானின் அரசு தரப்பு வழக்கறிஞர் அப்பாஸ் ஜஃபரி தவுலத்தாபாதி கூறினார். விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், "இவர்கள் நிரபராதிகள். தெரியாமல் ஈரான் எல்லையில் வந்து மாட்டியுள்ளனர். எனவே அவர்களே விடுவிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

எச்1பி விசா... விப்ரோ முதலிடம்

அமெரிக்காவில் பணியாற்ற அவசியமான எச்1பி விசா பெற்றதில் 2009-ம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய நிறுவனமான விப்ரோ.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1964 எச்1பி விசாவை பெற்று பணியாளர்களை அனுப்பியுள்ளது விப்ரோ. இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக எச்1பி விசா பெற்றதில் முதலிடம் வகிக்கிறது விப்ரோ.

இதற்கடுத்துதான் மைக்ரோசாப்ட் நிறுவனமே வருகிறது. அந்த நிறுவனம் 1318 விசாக்களைப் பெற்றுள்ளது. இன்டெல் 723 விசாக்களையும், கூகுள் 211 விசாக்களையும் பெற்றுள்ளன.

ஐபிஎம் இந்தியா 695 விசாக்களையும், இன்போஸிஸ் 440 விசாக்களையும், போலாரிஸ் 254 விசாக்களையும், சத்யம் நிறுவனம் 219 விசாக்களையும் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் எச்1பி விசா பெறுவதில் ஒபாமா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்திய நிறுவனம் ஒன்று டாப் இடத்தைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல என்று இ வீக் மீடியா தெரிவித்துள்ளது.

விரும்பிய நெட்வொர்க்கில் ஒரே எண்ணில் பேச இன்னும் லேட்டாகும்

விரும்பிய நெட்வொர்க்கில் ஒரே எண்ணில் பேசும் வசதியை அமலுக்குக் கொண்டுவர மேலும் மூன்று மாதங்கள் தாமதமாகும்.

இப்போதைய நிலவரப்படி வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவோம் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய தொலைபேசித் துறை அறிவித்திருந்தது. ஆனால் மொபைல் சேவை வழங்கும் சில நிறுவனங்கள், இவ்வசதியை அறிமுகப்படுத்த தேவையான நெட்வொர்க்குகள் தயாராக இல்லை என கைவிரித்துவிட்டன.

இன்னும் சில நிறுவனங்களோ, இப்போதுதான் தங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

எனவே, இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கால கெடுவை வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இதுகூட சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளுக்கு மட்டுமே. கிராமப் புறங்களில் இன்னும் லேட்டாகுமாம்.

வாகுபெற்றவுடன் வாக்கு மாறிய MP

ராமநாதபுரம்: "சேதமடைந்த வீடுகளுக்கு தீர்வளிப்பதாக,' நன்றி அறிவிப்பின் போது ரித்தீஷ்குமார் எம்.பி.,கூறி சென்றும், நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் கலெக்டரிம் மனு அளித்தனர். திருப்புல்லாணி ஒன்றியம் நல்லான்குடியிருப்பு காலனியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு தரப் பட்ட வீடுகள், எந்நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கவேலன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், ரித்தீஷ்குமார் எம்.பி., வெற்றி பெற்று நன்றி அறிவிப்புக்கு செல்லும் போது, இப்பகுதி மக்கள் தங்கள் நிலை குறித்து முறையிட்டுள்ளனர். ""நடவடிக்கை எடுப்பதாக, '' எம்.பி.,யும் உறுதியளித்து சென்றுள்ளார்.

அதன் பின் அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து மழை, புயல் என அபாயகரமான வீட்டில் வசித்து வெறுத்து போன மக்கள், வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தனர்.

ராமவள்ளி: எங்கள் வீட்டின் நிலையை பார்த்தால் யாரும் வசிக்க முன்வரமாட்டார் கள். முறையிடாத ஆட்கள் இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை.
சாந்த்தா : தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற வந்த ரித்தீஷ்குமார் எம்.பி., யிடம் இது குறித்து முறையிட்டோம். அவரும் செய்து தருவதாக கூறி சென்றார். அதன் பின் எந்த தகவலும் இல்லை.

சரஸ்வதி : வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தோம். ஆனால் கலெக் டரோ, ரித்தீஷ் எம்.பி.,யிடம் செல்லுமாறு கூறியுள்ளார். அவர் இங்கு இல்லை, எப்படி முறையிடுவது என்பதும் தெரியவில்லை, என்றனர்.

ஹேமந்த் கர்காரே கொலைக்கு காரணம் ஐ.பி!


மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்புப்படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்காரே மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்டதன் பின்னணியிலிருப்பது இந்திய உளவுத்துறையான .பி யின் கரங்கள் உள்ளன என்று முன்னாள் காவல்துறை .ஜியான எஸ்.எம்.முஷ்ரிஃப் கூறியுள்ளார்.கர்காரேயை கொன்றது யார்? என்ற தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் இப்பொழுது தெளிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாக்பூரிலிலுள்ள
தாவந்தே தேசிய கல்லூரியில் உரையாற்றும்பொழுது அவர் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது,”மும்பைத்தாக்குதலைக்குறித்து விசாரணை மேற்கொண்ட பிரதான் கமிசன் அளித்த அறிக்கையானது பரிபூரணமில்லாத ஜோடிக்கப்பட்ட அறிக்கையாகும்.ஹிந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகளை வெளிக்கொண்டுவந்த கர்காரேயை ஒழித்துவிட்டு தங்களது ஆதரவாளரான கெ.பி.ரகுவன்சியை .டி.எஸ்ஸின் தலைமைப்பதவிக்கு கொண்டுவருவதற்கான சதித்திட்டத்தின் பலன் தான் கர்காரேயின் படுகொலை.தாஜ், ட்ரைடண்ட் ஹோட்டல்களிலும், சி.எஸ்.டியிலும் நடந்த தாக்குதலுக்கு சமமாகவே காமா மருத்துவமனைக்கு சமீபமாக கர்காரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும்.சி.எஸ்.டியிலும், காமா மருத்துவமனைக்கு வெளியேயுள்ள ரங்க் பவன் வீதியிலும் ஒரே சமயம் துப்பாக்கிச்சூடு நடந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.சி.எஸ்.டியில் தாக்குதல் நடத்தியவர்கள் தான் இத்தாக்குதலையும் நடத்தினார்கள் என்றால் இரண்டு நிகழ்வும் ஒரே சமயத்தில் எவ்வாறு நிகழ முடியும்?காமா மருத்துவமனைக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் மராத்தி மொழியில் பேசினார்கள் என்ற சாட்சிகள் உள்ளிட்ட 11 ஆதாரங்கள் என் வசம் உள்ளது.

ஹிந்துத்துவ
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் வெளிவருவதை தடுப்பதை .பி யின் நோக்கம்.பிரதான் கமிட்டியுடன் .பி ஒத்துழைக்கவில்லை.

போலீஸ்
கட்டுப்பாட்டு அறையின் மூலம் நிகழ்ந்த உரையாடலின் பதிவும் கமிட்டிக்கு கிடைக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.எஸ்.எம்.முஷ்ரிஃப் காவல்துறையிலிருந்து சுயமாக ஓய்வுபெற்ற அதிகாரியாவார்.

பாலஸ்தீன் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்க தடை

தமது குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ரமொன் பாலைவனச் சிறைச்சாலையில்

இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் கைதிகள்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெரூசலவாசிகள் பத்துப்பேருக்கு இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அக் கைதிகளில் ஒருவர் கண்பார்வையற்றவர் என்பதோடு, இந்தத் தடையுத்தரவு குறித்து இதுவரை எந்தவொரு நியாயமான காரணமும் முன்வைக்கப்படவில்லை.

சில தினங்களுக்கு முன்பு இதே சிறை நிர்வாகம் ஜெரூசலத்தைச் சேர்ந்த கைதி ஒருவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததோடு, அவரது தனிப்பட்ட விபரங்கள், புகைப்படம் உட்பட அவர் தொடர்பான சகல தகவல்களையும் உரிய கோவைகளிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் எழுத்தாளர் இப்றாஹீம் அப்துல் ஹெய்ஜாவின் தண்டனைக்காலத்தை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிக்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை ஐந்தாவது முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த இரண்டு வருட காலமாக எவ்விதக் குற்றமும் சுமத்தப்படாத நிலையில், எத்தகைய விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அப்துல் ஹெய்ஜாவின் விடுதலைக்காகப் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் நலன்கள் தொடர்பான நிபுணர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இது பற்றிக் கருத்துரைக்கையில்,ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் அப்துல் ஹெய்ஜா என்ற பெயர் மிகப் பிரபலமானது. அவர் நிறைய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள ஒருவர் என்று தெரிவித்தார்.


அப்துல் ஹெய்ஜா பல்வேறு சமூக சேவைகளிலும் நன்கொடை நிதியங்களிலும் பெரும் பங்காற்றிய ஒருவராவார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நன்கொடை நிதியத்தின் தலைவராக இருந்து பலஸ்தீனில் பாடசாலைகளும் அனாதை இல்லங்களும் நிறுவப்படுவதற்காக முன்னின்று உழைத்துள்ளார். மேலும், ஜெனினின் அகதி முகாம் புனருத்தாபனப் பணிகளிலும், பலஸ்தீன் கைதிகளுக்கு உணவு, உடை முதலான அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதிலும் முனைப்பாகச் செயற்பட்டுள்ளார்.

மூன்று ஆண் குழந்தைகளின் தந்தையான 35 வயதான அப்துல் ஹெய்ஜா, நப்லஸிலுள்ள அல் நஜாஹ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: PIC


மெர்சிடஸை முந்தியதுமெர்சிடஸை முந்தியது பிஎம்டபிள்யூ

மெர்சிடஸ் சொகுசு கார் விற்பனை இந்தியாவில் கடந்த ஆண்டு 10.4 சதவீதம் சரிந்தது. அதனால், இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்தது.டெல்லியில் மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் வில்பிரட் ஆல்பர் கூறுகையில், ÔÔ2009ல் 3,247 கார் விற்றோம். 2008ல் அது 3,625. கடந்த ஆண்டில் பிஎம்டபிள்யூ 3,619 கார் விற்று முந்தி விட்டதுÕÕ என்றார். எனினும், 2010ல் மெர்சிடஸ் பென்ஸ் கார் விற்பனையை அதிகரிக்க அதிக தள்ளுபடி அளிக்கப்படும் என்றார் அவர்.

பைபர்கிளாஸ் சிலிண்டர் ஏப்ரல் முதல் கிடைக்கும்

ஏப்ரல் மாதம் முதல் பைபர்கிளாசில் தயாரான, துல்லியமாக காஸ் அளவு தெரியக்கூடிய கண்ணைக் கவரும் சிலிண்டர்கள் விற்பனைக்கு வருகின்றன.இப்போது பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள் இரும்பில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சிலிண்டர் தயாரிக்க எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் தொகை ரூ.1,050. வெளிநாடுகளில் பைபர்கிளாசில் (கண்ணாடி இழை) சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலிண்டர் விலை ரூ.3,200.செலவு அதிகம் என்ற போதிலும் சிலிண்டர்களில் காஸ் எடைக் குறைவு புகார்களைத் தவிர்க்க, துல்லியமாக காஸ் அளவு தெரியக் கூடிய பைபர்கிளாஸ் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. அதற்கு வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுக்கான தலைமை அதிகாரி சமீபத்தில் அனுமதி அளித்தார்.இதையடுத்து, முதல் கட்டமாக ஒரு லட்சம் பைபர்கிளாஸ் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சாதாரண சிலிண்டரைவிட அழகிய வடிவிலும், காஸ் அளவு துல்லியமாகத் தெரியும்படி இருப்பதாலும், இறக்குமதி விலை அதிகம் என்பதாலும், அந்த சிலிண்டர்கள் மீது வழக்கமான மானியம் கிடையாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளன.அதனால் வழக்கமான காஸ் விலையைவிட ரூ.300 கூடுதலாக தந்து மட்டுமே பைபர்கிளாஸ் சிலிண்டரைப் பெற முடியும்.

ஹெட்லியின் பாலிவுட் தொடர்புகள்

பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மொராக்கோவைச் சேர்ந்த அவரது முன்னாள் மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.அவரது பெயர் பைய்ஸா அவுட்டால்ஹா. இவர் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் ஹெட்லிக்கும் திருமணமானது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து விட்டோம்.
பல்வேறு பெண்களுடன் ஹெட்லிக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன்.
ஹெட்லிக்கு மும்பை யில் உள்ள பல்வேறு பிரபல பெண்மணிகளுடனும், பாலிவுட் நடிகர்கள்,நடிகைகளுடனும் நல்ல தொடர்பு உள்ளது.நாங்கள் மும்பையில் தங்கியிருந்தபோது ஹெட்டலில், ஹெட்லியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தது.
நானும் அவரும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.இவர் இப்படிக் கூறியுள்ளபோதிலும் ஹெட்லியின் முன்னாள் மனைவி மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது. ஹெட்லியின் முன்னாள் மனைவி கொடுத்த தகவலின் பேரில் கோவாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர் அவ்வப்போது இந்தியாவை விட்டு வெளியே சென்று திரும்பி வருவது தெரிய வந்துள்ளது.
மணாலி, கோவா ஆகிய நகரங்களில் தனது ரஷ்ய தோழியோடு அவர் தங்கியிருந்துள்ளார்.
இருப்பினும் இவர் எந்தவித விசா முறைகேட்டிலும் ஈடுபடாமல் முறையாக வந்து போயுள்ளது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகின் மிக உயரமான ‘புர்ஜ் துபாய்’ கட்டிடம் இன்று திறப்பு

உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘புர்ஜ் துபாய்’ இன்று திறக்கப்படுகிறது. இதன் உயரம் 2,683 அடி என்று கூறப்பட்டாலும், துல்லியமான உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தைவானில் உள்ள தைபே-101 கட்டிடம்தான் உலகிலேயே உயரமான கட்டிடம் (1,671 அடி) என்ற பெருமையை பெற்றிருந்தது.

இன்று முதல் புர்ஜ் துபாய் கட்டிடம் அந்தப் பெருமையைப் பெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் அரபு எமிரேட்ஸ் அரசர் மொஹம்மது பின் ரஷித் அல்-மக்டோம், புர்ஜ் துபாய் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.


எமார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவில் வண்ணமிகு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புர்ஜ் துபாய் கட்டிடத்தின் உயரம் 2,683 அடி இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அதன் உண்மையான உயரம் 2,700 அடிகளைத் தாண்டும் என அதனை வடிவமைத்த வல்லுனர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.