ரமணா பட பாணியில் இறந்து 2 நாட்களான பிணத்துக்கு சிகிச்சை; ரூ.1 1/2 லட்சம் கேட்டதால் ஆஸ்பத்திரி மீது கல்வீச்சு

திருச்சி, மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). வேன் டிரைவர். இவர்கள் மோட்டார் சைக்கிள் மோதி காயம் அடைந்தனர். பிரபாகரனை உறவினர்கள் திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 24-ந் தேதி முதல் பிரபாகரன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு பிரபாகரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 3 நாட்கள் சிகிச்சை அளித்த வகையில் கட்டணம் ரூ. 1 1/2 லட்சம் கொடுக்குமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.


பணம் கொடுத்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை பிரபாகரனின் உறவினர்கள் 50 பேர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும். பிரபாகரன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

24-ந்தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரபாகரனை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்றும் மறுநாளே (25-ந் தேதி) பிரபாகரன் இறந்து விட்ட நிலையில் ரமணா படபாணியில் பணத்துக்காக பிணத்துக்கு சிகிச்சை அளித்து உள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது திடீர் என ஆஸ்பத்திரி மீது கல் வீசப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி கண்ணாடி உடைந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்தது.

ஆஸ்பத்திரி மீது கல் வீசி ரகளை செய்ததாக பிரபாகரனின் உறவினர்கள் 25 பேரை போலீசார் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பிரபாகரனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

தீபாவளிக்கு அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பஸ்களில், 30 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு, அக்., 3ம் தேதி முதல் துவங்கவுள்ளது.ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோர் அனைவரும், அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியுள்ளனர்.

ஆம்னி பஸ்களில் இஷ்டம் போல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதால், நடுத்தர மக்கள் அனைவரும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 30 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுள்ளது. அதன் அடிப்படையில் தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்கூட்டியே வெளியூர் செல்பவர்கள், பயணம் செய்யப்போகும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 3ம் தேதி முதல் தீபாவளி முன்பதிவு துவங்குவதாக, முன்பதிவு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் 456 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 80க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளனர். மேலும், விழுப்புரம், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மாதங்களில் அடுத்தடுத்து கிடைத்த அரசு விடுமுறை நாட்களில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.ஆகையால், மற்ற கோட்டங்களில் இருந்து அதிகளவிலான கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, நவம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க, முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு கூடுதல் செலவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கான சிறப்புப் படியும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைக்காமலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு, "லக்' அடித்துள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்துள்ள தமிழக அரசு, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தியதோடு, அந்த சம்பளத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இதே போல, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதும், எந்த சங்கமும் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த, சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் ஏதும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. எனினும், முதல்வர் கருணாநிதியாக முன்வந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 35 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வந்த ஊழியர்கள், இனி 45 சதவீதம் அகவிலைப்படியாக பெறுவர். இதனால், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்கும். உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி, ஜூலை 1ம் தேதியில் இருந்து நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும். இந்த உயர்வு, பகுதி நேர ஊழியர்களுக்கு பொருந்தாது. "அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு 2,190 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்' என, அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மதிப்பூதியம், நிலையான ஊதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை பெறுவோருக்கும் ஜூலை 1ம் தேதியில் இருந்து சிறப்புப் படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 600 ரூபாய்க்குள் சம்பளம் பெறுவோருக்கு மாதம் 20 ரூபாயும், 600 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு 40 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும். இந்த சிறப்பு படி, உள்ளாட்சி பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொருந்தும். முதல்வர் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை பாராட்டி, அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தாங்கள் கேட்காமலேயே அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.

கலைஞர் இன்று தஞ்சை பயணம்

தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


முதலமைச்சர் கருணாநிதி பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.


விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் போகிறார். இன்று மாலை நடைபெறும் விழாவிலும், நாளை மாலையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் நிறைவுவிழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசுகிறார்.


விழாவின் 4-வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு பெரியகோவில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். கவிஞர் கனிமொழி எம்.பி. வரவேற்றுப்பேசுகிறார்.

மாலை 5.45 மணிக்கு திருமுறை இன்னிசை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது. 7.30 மணிக்கு இசை மற்றும் நடனக்கலைஞர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிரபல நடன கலைஞர் பத்மாசுப்பிரமணியம் குழுவினரின் 1000 நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் புகழேந்தி, கலைவாணன் குழுவினரின் ராஜராஜசோழன் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவு விழா பேருரை ஆற்றுகிறார்.

மத்திய மந்திரி ஆ.ராசா, பெரியகோவில் மற்றும் ராஜராஜசோழன் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொள்கிறார். மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆயிரம் ஆண்டு நினைவு 10 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார்.

முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்கும் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பெரியகோவில் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் 21 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரின் எங்கு பார்த்தாலும் மின் விளக்கு அலங்காரமாக காட்சி அளிக்கிறது. பெரியகோவில் மற்றும் தஞ்சையில் உள்ள கோபுரங்கள், அரண்மனை, மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், கோவில்கள், அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

அமைதி காக்க வேண்டுகோள்

அயோத்தி நிலம் தொடர்பாக வரும் 24-ம் தேதி வெளியாக உள்ள தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.எம்.சையத் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு இந்த கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு 24-ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி வாசல்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் அக். 3-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர், மாவட்டத் தலைவர் முஹம்மது ஹூஸைன், துணைத் தலைவர் இமாம்தீன், செயலர் பக்கீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

sourse: intjonlin.in

பன்றிக்காய்ச்சளுக்கு பலி !


செ‌ன்னை‌யி‌ல் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு க‌‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் ப‌‌லியா‌‌கியு‌ள்ளா‌ர். இதனா‌‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் 11 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை தேனா‌‌ம்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள எ‌ஸ்.ஐ.ஈ.டி. கலை ம‌ற்று‌ம் அ‌றி‌வி‌யிய‌ல் ‌க‌ல்லூ‌ரி‌‌யி‌ல் ப‌‌ணியா‌ற்‌றி வ‌ந்தவ‌ர் ஆ‌‌சி‌ரிய‌ர் பவு‌‌சியா பானு.

இவ‌ர் ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு செ‌ன்னை அ‌ண்ணாநக‌‌ரி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்ற வ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி ஆ‌சி‌ரிய‌ர் பவு‌சியா பானு இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

ஆ‌சி‌ரிய‌ர் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து க‌ல்லூ‌ரி‌க்கு ஒருநா‌ள் ‌விடுமுறை அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

lமாபெரும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் !

கடந்த (19.09.2010)காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா சங்கத்தில் நடைப்பெற்றது இதை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் PS ஹமீத் தலைமை வகித்தார் .இந்த முகாமை பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜன் துவக்கி வைத்தார் . இந்த முகாமில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட வியாதியஸ்தர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன .இந்த முகாமில் 300 க்கும் மேற்ப்பட்ட பயானாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் மன்ற தலைவர் MMS அப்துல் வகாப் ,நகர முஸ்லிம் லீக் தலைவர் KK .ஹாஜா நஜ்முதீன் ,நகர முன்னாள் செயலாளர் Dr ஹாஜி MA முகமத்ஸாலிஹ். பொருளாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் வக்கீல் A முனாப் BABL , நகர இ அணி தலைவர் . MA ஷாகுல் ஹமீத், நகர மாணவர் அணி அமைப்பாளர் இதிரிஸ் அஹமது , மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முகம்மத் .உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பாக வழிநடத்தினர் .

முகாமில் பணியாற்றிய ஸ்ரீ ஜெயேந்திராள் ஜனகல்யான் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .

இம்முகாமில் சகோதரர் மகிழங்கோட்டை மாரிமுத்து அவர்கள் தானாக முன்வந்து இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி தனது சமய நல்லிணக்கத்தை வெளிக்காட்டினார் .

இந்த முகாமை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

படம் :ஜேப்பி

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் பிச்சைக்காரர் ஒருவர் தங்கியிருந்தார். வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. சுற்றுலா விசாவில் வரும் உடல் ஊன முற்றவர்கள் மற்றும் சிலர் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஏனெனில் வசதி படைத்த இந்த நாடுகளில் பிச்சைக்காரர்களுக்கு தாரளமாக பணம் கிடைக்கிறது.

எனவே, இங்கு அதிக அளவில் குவிகின்றனர். இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி துபாய் நாட்டில் ரோட்டில் சுற்றித்திரிந்த 360 பிச்சைக்காரர்களை அந்நாட்டு சுற்றுலா துறை கைது செய்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு நபர் துபாயில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. இது விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாக அவர் கூறினார். இந்த தகவலை துபாய் சுற்றுலா பாதுகாப்பு துறை இயக்குனர் மேஜர் முகமது ரஷீத் அல் முனகரி தெரிவித்தார்.

பிச்சை எடுப்பதற்காக தற்போது 5-வது தடவையாக அங்கு சுற்றுலா விசாவில் வந்திருப்பதாக உடல் உறுப்பை இழந்த பிச்சைக்காரர் ஒருவர் கூறினார். ஆனால், அவர்களின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

ரமலான் பண்டிகையின் போது மசூதிக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.

பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா

தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழாவையொட்டி தஞ்சையில் வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் மாதிரி வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அரங்கம், பெரியகோவிலில் கருத்தரங்கம், தஞ்சையில் 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு, ,பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர்கள் கருணாகரன், மூர்த்தி, கலெக்டர் சண்முகம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வி சிவஞானம், மற்றும அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.


விழா பற்றி கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். வருகிற 24-ந்தேதி தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி தொடங்குகிறது. மேலும் தஞ்சையில் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-


பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி ¢உள்ளார். சோழர்களின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெறும். மேலும் சோழர்களின் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலையை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும்.


ராஜராஜனின் சிலை குஜராத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இந்த சிலையை மீட்க சுற்றுலா துறை செயலாளர், தொல்லியல்துறை செயலாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குஜராத் சென்று பேச்சு நடத்தினார்கள். அவர்கள் இது பற்றி ஆ¢ய்வு செய்து தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

ஜமாத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).
பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குத்புதீனுக்கும், இதயதுல்லாவுக்கும், தொழுகை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக விசாரிக்க குத்புதீன் உறவினர் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருமங்கலகுடியை சேர்ந்த ஹாஜ்முகமது(40). தனது ஆதரவாளர்கள் சுமார் 15 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருவிடைச்சேரிக்கு வந்தார். அப்போது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயிலுக்கும் ஹாஜ் முகமதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த ஹாஜ் முகமது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில், மற்றும் அருகே நின்ற அஜீத் முகமது ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் திருவிடைச்சேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் பெயர் வருமாறு:-
1. முகமது குத்புதீன், 2. அப்துல் மாலிக், 3. சேத்தப்பா, 4. சலாவுதீன், 5. முகமது இலியாஸ், 6. பசீர் மைதீன், 7. அப்துல் ரகீம், 8. ஜமீல், 9. முஜிபுர் ரகுமான், 10.முகமது அன்சாரி. 11. ஹபீப் ரகுமான், 12. அன்வர்தீன், 13. பசீர் முகமது, 14. ரவி, 15.ஜியாவுதீன்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஏதேனும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்றும் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
திருவிடைச்சேரி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலெக்டர் சந்திரசேகரன் விசாரித்த காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்ளார்.

வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில், சர்வதேச அளவில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனரக வாகனங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் பீ.எஸ்.மீனா கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும்.

கடந்த 2005-06ஆம் நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி 97.44 லட்சம் எண்ணிக்கைகளாக இருந்தது. இது, சென்ற 2009-10ஆம் நிதி ஆண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து, 1.41 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது, 25 சதவீதம் (1.12 கோடி வாகனங்கள்) அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் விற்பனை நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆண்டிற்கு பயணிகள் வாகனங்கள் விற்பனை 90 லட்சம் எண்ணிக்கையாகவும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 3 கோடியாகவும் உயரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஐந்து நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மீனா மேலும் தெரிவித்தார்.

ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை உயர்வு

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களின் எண்ணிக்கை 53,906 ஆக இருந்தது. இது, சென்ற ஆகஸ்டு மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து 61,702 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கிகளின் சூஏ.டி.எம்' மையங்களையும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது.

இதனையடுத்து, இதர ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.


இது, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 5.68 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், பல வங்கிகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிதாக கிளைகளை தொடங்குவதுடன், ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றன.

நன்றி : நக்கீரன்


நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்

நாகூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் நீடாமங்லத்தில் நின்று சென்னை செல்லும் பயணிகளை ஏற்றி சென்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.நாகூரில் இருந்து சென்னைக்கு தினமும் கம்பன் எக்ஸ்பிரஸ் சென்று வருகிறது. நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பெரிய நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல தஞ்சை சென்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.


நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.

முத்துப்பேட்டையில் செப். 18-ல் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் செப். 18-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.


விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடத்தப்பட்டது. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு குறித்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஊர்வலம் செல்லும் பாதை, எழுப்பப்படும் கோஷங்கள் குறித்து இருதரப்பிடமும் சுமூகமான கருத்துகள் கேட்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிற்பகல் 4 மணிக்குள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6 மணிக்குள் பாமணி ஆற்றில் கரைக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஊர்வலம் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டவுள்ளது. விழா நடைபெறும் போது நடமாடும் மருத்துவக் குழுக்கள் உடன் செல்லவும், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி பேசியது:


கடந்த காலங்களில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்களின் போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 600 காவலர்கள் நிகழாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், இந்து அமைப்புகள் சார்பில் முருகானந்தம், கண்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அகமது பாசித், முகமது இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு விருது

பொது மக்களின் குறைகளை சிறப்பான வகையில் தீர்வு காண்பதை பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு "ஸ்காட்ச்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்களின் குறைகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தீர்வு காண 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க 97899-51111 என்ற எண்ணும் உள்ளது.மேலும், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தை பயன்படுத்தியும் பொதுமக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகிறது.குப்பைகள் அகற்றுதல், தெரு நாய்கள் பிடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், சொத்து வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு எரியாதது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சரி செய்யப்படுகின்றன.இந்த சிறப்பான பணிக்காக, அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் (ண்டுணிஞிட) நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு 2010ம் ஆண்டிற்கான "ஸ்காட்ச்' விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. வரும் 22ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.