நம்பர் 1 வாய்ப்பு நழுவியது

மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நடந்தது.

டாஸ் வென்ற டோணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஏகப்பட்ட ரன் அவுட்களுக்கு மத்தியில் தட்டுத் தடுமாறி ஆடி 250 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

வாட்சன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பான்டிங் 52 ரன்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக ஆடி துரிதமாக 40 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் ஸ்கோரை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான சொதப்பல் ஆட்டம் வெளிப்பட்டது.

ஷேவாக் அதிரடியாக ஆடி 30 ரன்கள் கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். ஏன் இப்படி வேகம் வேகமாக ஆடி விரைவிலேயே இவர் ஆட்டமிழக்கிறார் என்று தெரியவில்லை.

டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த அத்தனை பேரும் சொதப்பினார்கள். விராத் கோலி 10, யுவராஜ் சிங் 12, டோணி 26 என சரிந்தனர்.

சுரேஷ் ரெய்னா 17 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சற்று பொறுப்புடன் ஆடி ஏதாவது செய்யலாம் என்று பார்த்தார். ஆனாலும், அவராலும் 31 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இப்படியாக சொதப்பிய இந்தியா 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 226 ரன்களில் சுருண்டது.

மொஹாலி மைதானத்தில் மிகவும் குறைவான ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் அசத்திய ஷான் வாட்சன் பவுலிங்கிலும் பிரமிக்க வைத்தார். 3 விக்கெட்களை வீழ்த்தி, 49 ரன்களையும் எடுத்த இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் அது நழுவிப் போய் விட்டது.

அந்தமான்-கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

கால் 3.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. போர்ட்பிளேருக்கு 266 கிமீ வடக்கே கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.

கலிபோர்னியாவிலும்..

அதே போல அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் அந் நாட்டு நேரப்படி காலை 11.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பஜா கலிபோர்னியா-தென் கிழக்கு கலிபோர்னியா ஆகிய பகுதிகளி்ல் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.0 புள்ளிகளாகப் பதிவானது.

பூமிக்கடியில் 4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

படகு விபத்தில் பலியான 12 பேரும் இலங்கைத் தமிழர்கள்

ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய 11 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஓஷன் வைகிங் என்ற இந்தப் படகில் வந்தவர்கள் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் ஆவர்.

கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும், அகதிகளை வர விடாமல் தடுப்பது தொடர்பாகவும், ஜான் மெக்கார்த்தி என்ற அதிகாரியை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் ரூட் முடிவு செய்துள்ளார்.

கடலில் மூழ்கிய இலங்கைப் படகு, காக்கஸ் தீவுக்கு அருகே தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இதையடுத்து அவசர கால செய்தியை படகின் ஓட்டுநர் அனுப்பினார். இதைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய விமானக் கண்காணிப்புப் பிரிவினர் கடற்படைக்குத் தெரிவித்து மீட்புக் கப்பலை விரைந்து போகச் செய்தனர். மீட்புக் கப்பல் வந்த பின்னரே கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

மீட்கப்பட்டவர்கள் பெரும் குரலில் கதறி அழுததாகவும், அது மனதை இளகச் செய்வதாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

இந்தப் படகில் 39 பேர் இருந்ததாக தெரிகிறது.

இதுவரை ஒரு தமிழரின் மரணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரைக் காணவில்லை என்று ஆஸ்திரேலிய உளதுறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 16 மணி நேரம் படகின் உடைந்த பாகங்களைப் பிடித்தபடி கடல் நீரில் தத்தளித்துள்ளனர்.

படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர் பமீலா கர் கூறுகையில், இவர்கள் அனைவரும் நேரடியாக இலங்கையிலிருந்து வந்ததவர்கள் என்றும், மலேசியா அல்லது இந்தோனேசியாவின் பிடியில் சிக்கி விடாமல் இருப்பதற்காக நேரடியாக வந்ததாகவும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

சிலோன் தமிழர்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவர் ராமலிங்கம் விக்கிரமசிங்கம் கூறுகையில், படகு மூழ்கிய தகவல் பரவியதும் கொழும்பில் உள்ள தமிழர்கள் படகில் இருந்தவர்கள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.

படகு விபத்தில் சிக்கியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம் என்றார்.

அகதிகளை காப்பது நமது பொறுப்பு- ஆஸி. முதல்வர்:

இந் நிலையில் இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் கெவின் ரூட் மேற்கொண்டு வரும் நிலை சரியல்ல என்று மேற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் காலின் பர்னெட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தோனேசிய துறைமுகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி அவர்களின் புகலிட கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நிலை சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலை நீடிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டு கப்பலில் அந்த 78 உயிர்களும் இன்று தவித்துக் கொண்டுள்ளன. எனவே அவர்களின் உயிரைக் காப்பதும் நமது பொறுப்பேயாகும்.

எனவே அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு வந்து பரிசீலிப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் பர்னெட்.

காவலாளி கைது

நில‌ப்‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ‌சிவபாலனை தா‌க்‌கிய வழ‌க்‌கி‌ல் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா‌வி‌ன் ப‌ண்ணை ‌வீ‌ட்டு காவலா‌ளியை ‌சி.‌பி.‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கும், கல்லாங்குத்து தோட்டம் சிவபாலனுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோப‌ர் 21ஆம் தேதி நள்ளிரவு காஞ்சிகோயில் பண்ணை வீட்டில் இருந்த தன்னையும் மனைவி உமா மகேஸ்வரியையும் சிவபாலன் அரிவாளால் வெட்டியதாக ராஜாவும், தன்னை தாக்கியதாக சிவபாலனும் புகார் தெரிவித்தனர். இ‌ந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகு, ராஜாவின் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த, பண்ணை வீட்டு காவலாளி காளியப்பனை (55) சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காளியப்பனை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து அவர் கோவை சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். தலைமறைவாக உள்ள ராஜாவும், உமாமகேஸ்வரியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவ‌ர்களது கடவு‌சீ‌ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சாம்பசிவம் தெரிவித்தார்.

செ‌ன்னை‌யி‌ல் இடை‌விடாது மழை

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்‌றிரவு பெ‌‌ய்த மழை த‌ற்போது வரை பெ‌‌ய்து வரு‌‌கிறது. இதனா‌ல் சாலைக‌ளி‌ல் மழை ‌நீ‌ர் பெரு‌க்கெடு‌த்து ஓடுவதா‌ல் கடுமையான போ‌க்குவர‌த்து நெ‌ரிச‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வட‌கிழ‌க்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. செ‌ன்னை, புறநக‌ர் பகு‌தி ம‌ற்று‌ம் த‌மிழக‌ம் முழுவது‌ம் நே‌ற்‌றிரவு பல‌‌த்த மழை பெ‌ய்தது. இரவு 10‌ ம‌ணி‌க்கு பெ‌ய்த மழை தொட‌ர்‌ந்து ‌விடாம‌ல் பெ‌ய்தது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி வரை மழை பெ‌ய்து கொ‌ண்டுதா‌ன் இரு‌ந்தது. சாலைக‌ளி‌ல் மழை ‌நீ‌ர் வெ‌ள்ள‌ம் போ‌ல் பெரு‌க்கெடு‌த்து ஓடு‌கிறது. செ‌ன்னை‌யி‌ல் தா‌ழ்வான பகு‌திக‌ளி‌ல் மழை ‌நீ‌ர் தே‌ங்‌கி ‌கிட‌க்‌கிறது. இதனா‌ல் பொதும‌க்க‌ள், அலுவல‌க‌ங்களு‌க்கு செ‌ல்வோ‌ர், மாணவ, மா‌‌ண‌விக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இத‌னிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யு‌ம் எ‌ன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூ‌றியு‌ள்ளா‌ர். தமிழகத்தின் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அவ‌ர், சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். வரும் நாட்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ரமணன் கூறினார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்வு நட‌த்த அரசு முடிவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த அரசுத் தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை அரசு தேர்வுத்துறை த‌னி‌த்த‌னியாக நடத்துகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் முதல் வாரத்தில் முடியும்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி, அந்தமாத இறுதியில் முடியும். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் தனித்தனியே தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியில் அதிக அளவில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மே முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதற்கு பிறகு 2 வாரம் கழித்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியாகும்.
பின்னர் விடைத்தாள் நகல் வழங்குதல், மறு மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளில் மீண்டும் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் கோடை விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போகிறது. மேலும், கோடை விடுமுறைக்காக, அவசரம் அவசரமாக விடைத்தாள்களை திருத்துகின்றனர். இதனால் பிழை ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது குறித்து, அதிகாரிகள், ஆசிரியர்கள் கூட்டத்தை அரசு தேர்வுத்துறை கடந்த மாதம் நடத்தியது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தினால் இந்தப் பிரச்சனைகள் எழாது; ஆசிரியர்கள் நிதானமாக விடைத்தாள்களை திருத்த முடியும் கோடை விடுமுறையும் அதிகம் கெடாது என்று, கூட்டத்தில் யோசனை கூறப்பட்டது. இதை அரசு தேர்வுத்துறை தீவிரமாக பரிசீலித்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத் தேர்வை நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, விரைவில் இறுதிமுடிவு எடுத்து அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வுடன் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வசதியாக தேர்வுப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் பட்டியலை அரசு தேர்வுத் துறை வழக்கமாக ஜனவரி மாதத்தில் கேட்டு வாங்கும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே மாணவ, மாணவியர் பட்டியலை தேர்வுத்துறை கேட்டு வாங்கியுள்ளது.
இந்த பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு திரும்பவும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு முழுமையான பட்டியல், தேர்வு துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், தேர்வு பதிவு எண்கள் வழங்கப்படும். இப்படி பெயர் பட்டியல் மூன்று முறை ஆய்வு செய்யப்படும். இதில் இப்போது முதல்கட்ட பணி தொடங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்த வசதியாகவே, தேர்வு எழுது உள்ள மாணவர்கள் பட்டியலை முன்கூட்டியே வாங்கியுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரவித்தன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் ஒரே நடத்தி, விடைத்தாள் திருத்தும் பணியையும் ஒரே நேரத்தில் தொடங்கி, மே மாதத்துக்குள் தேர்வு முடிகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம் இம்மாதம் 5, 6ஆம் தேதிகளில் நடக்கிறது.

படகு கவிழ்ந்து 23 பேர் பலி


ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் காகஸ் தீவுகளுக்கு அருகே நேற்று வாழ்விடம் தேடி சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எல்.என்.ஜி பயனியர் கப்பல் மற்றும் தைவான் நாட்டின் மீன்பிடி படகுகள், ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீட்புப் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், படகில் வந்து உயிருக்குப் போராடி வருபவர்களைத் தேடி வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.17 பேர் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.ஆஸ்திரேலியாவிற்குள் புகலிடம் தேடிச் செல்லும் நோக்கில் அவர்கள் படகில் சென்றதாகக் கூறப்படுகிறது.மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்

‌விமா‌னி ம‌ர்‌ம‌ச் சாவு

செ‌ன்னை‌யி‌ல் த‌னியா‌ர் ‌விமான‌த்த‌ி‌ல் ‌விமா‌னியாக ப‌ணிபு‌ரி‌ந்த ஒருவ‌ர் ம‌ர்மமான முறை‌யி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இற‌ந்து ‌கிட‌ந்தா‌ர்.செ‌ன்னை ‌திருவா‌ன்‌மியூ‌‌ரி‌ல் உ‌ள்ள அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்‌பி‌ல் த‌னியாக வ‌சி‌த்து வ‌ந்தவ‌ர் ‌கிரு‌ஷ்ண நாராயண‌ன் (28).
இவ‌ர் கட‌ந்த ஒரு வருடமாக ‌கி‌ங்‌பி‌‌‌ஷ்ச‌ர் ‌ஏ‌‌ர்லை‌ன்‌ஸ் விமான‌த்த‌ி‌ல் ‌விமா‌னியாக ப‌ணி பு‌ரி‌ந்து வ‌ந்தா‌ர். இவரது பெ‌ற்றோ‌ர் மலே‌சியா‌வி‌ல் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.கட‌‌ந்த மாத‌ம் 22 ஆ‌ம் தே‌தி ‌விமா‌னி ‌‌கிரு‌ஷ்ண நாராயண‌ன், காவலா‌ளி‌யிட‌ம் 5 நா‌ட்க‌ள் ஊ‌‌ரி‌ல் இரு‌க்க ம‌ா‌ட்டே‌ன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். மேலு‌ம் தனது ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள கத‌வி‌ல் அ‌க்டோப‌ர் 30ஆ‌ம் தே‌‌தி வரை நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்க மா‌ட்டே‌ன் எ‌ன்று‌ம் எழு‌தி வை‌த்து‌ள்ளா‌ர்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நே‌ற்‌றிரவு ‌‌விமா‌னி கிரு‌ஷ்ண நாராயண‌ன் ‌வீ‌ட்டி‌ல் தூ‌ர்நா‌ற்ற‌ம் ‌வீ‌சியு‌ள்ளது. இது கு‌றி‌த்து உடனடியாக காவ‌ல்துறை‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து ‌வீ‌ட்டி‌ன் கதவை உடை‌த்து உ‌ள்ளே செ‌ன்றன‌ர். அ‌ப்போது ‌வீ‌ட்டி‌ல் தூ‌க்க மா‌த்‌திரை இரு‌ந்த அ‌ட்டையை காவ‌‌ல்துறை‌யின‌ர் க‌ண்டு‌பி‌டி‌த்தன‌ர்.
‌பி‌ன்ன‌ர் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக உடலை ராய‌ப்பே‌ட்டை அரசு மரு‌‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌‌பி வை‌த்தன‌ர்.காத‌ல் தோ‌ல்‌வியா‌ல் ‌விமா‌னி த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டாரா எ‌ன்பது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

தொலைத் தொடர்புத் உழல் ஜெ குற்றச்சாட்டு

''பா.ஜ.க ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் 1.6 லட்சம் கோடி ஊழல் நடந்தபோது தி.மு.க அமைச்சர்கள் அதை ஏன் எதிர்க்கவில்லை'' எ‌ன்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். இந்தக் குற்றச் சா‌‌ற்றை உறுதி செய்வதும் அல்லது மறுப்பதும் பார‌தீய ஜனதா கட்சியின் தலைமையைப் பொறுத்தது.ஆனால், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது.

ஒரு கொலையாளிதான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் என்ற காரணத்தைக் காட்டி தன்னுடைய கொலை வழக்கிலிருந்து விடுபட முடியாது. ஆனால், இது போன்ற காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா.நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்த போது, முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ராசா உட்பட இதர தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை? குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை? மௌனமாக இருந்ததன் விளைவாக, நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்தை இவர்கள் புரிந்ததாக ஆகாதா?2003 டிசம்பர் வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக தான் ராசா சார்ந்த தி.மு.க. இருந்து வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து, அதாவது மே 2004-லிருந்து, முதலில் தயாநிதி மாறன், பின்னர் ராசா என தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் தான் தொலைத் தொடர்புத்துறையை வைத்திருந்தனர்.
5 ஆண்டு காலம் இந்தப் பதவியை வகித்த இந்த இருவரும் ஏன் இந்தப் பிரச்சனையை ஐந்து வருட காலத்தில் எழுப்பவில்லை?இந்த ஊழலை இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருப்பதன் மூலம், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றத்திற்கு இவர்கள் ஆளாக மாட்டார்களா?


இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தாவிட்டால் தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா? எ‌ன்று ஜெயலலிதா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

உ.பி.யில் லாரி மீது இரயில் மோ‌தி 14 ப‌ய‌ணிக‌ள் ப‌லி

உத்தரபிரதேசத்தில் ஆளில்லாத இரயில்வே கிராசிங்கை கட‌க்க முய‌ன்ற மணல் லாரி மீது பயணிகள் இரயில் மோதி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் இர‌யி‌ல் படி‌க்க‌ட்டி‌ல் பயண‌ம் செ‌ய்த 14 பேர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். 30 பே‌ர் பல‌த்த காயம் அடைந்தன‌ர். மங்காபூர், நவாப்கஞ்ஜ் இரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள சாக் ரசூல்பூர் கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. மணல் லாரி மீது மோதிய பயணிகள் இரயில் கோரக்பூரில் இருந்து அயோத்தி நோக்கி செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. விபத்தில் லாரியின் ஓ‌ட்டுன‌ர், இரயிலின் மேற்கூரை, வாசல்களில் அமர்ந்து பயணம் செய்த 13 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பெய்‌ஸாபாத் மற்றும் அயோத்தியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த இரயிலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அயோத்தியில் இ‌ன்று நடைபெற இருந்த பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் என்று மாவட்ட ஆட்சியர் சுக்லால் பாரதி தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தகவலறிந்ததும், இரயில்வே உயர்அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக இரயில்வே அதிகாரி தெரிவித்தார.

வ‌ந்தவா‌சி ‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ ஜெயரா‌ம‌ன் மரண‌ம்


புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வந்தவாசி தொகுதி தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெயராமன் இ‌ன்று மரண‌ம் அடை‌ந்தா‌ர். அவரு‌க்கு வயது (60). திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எஸ்.பி.ஜெயராமன். தி.மு.க.வை சேர்ந்த இவர் சுமார் 8 மாதங்களாக இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, சென்னையில் உள்ள அ‌ப்ப‌ல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவரது உடல் நிலை ‌மிகவு‌ம் மோசமானதால் செ‌ன்னை அடையா‌றி‌ல் உ‌ள்ள பு‌ற்றுநோ‌ய் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கு அவரு‌க்கு தீவிர சிகிச்சை அளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்தது. இந்த நிலையில் இ‌ன்று காலை ஜெயராமன் மரண‌ம் அடை‌ந்தா‌ர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, அமை‌ச்ச‌ர்க‌ள் நே‌ரி‌ல் செ‌ன்று அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர். ஜெயராமனு‌க்கு மனை‌வியு‌ம், 4 மக‌ன்க‌ள், ஒரு மகளு‌ம் உ‌ள்ளன‌ர். அவரது இறு‌தி‌ச் சட‌ங்கு சொ‌ந்த ஊரான செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் நடைபெறு‌கிறது.

எடியூர‌ப்பாவை மா‌ற்று‌ம் எ‌‌ண்ண‌ம் இ‌ல்லை: பா.ஜ.க. தலைமை



முதலமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்
இரு‌ந்து எடியூர‌ப்பாவை மா‌ற்று‌ம் எ‌ண்ண‌ம் இ‌‌ல்லை என பா.ஜ.க. தலைமை ‌தீ‌ர்மா‌னி‌த்‌திரு‌ப்பதாக க‌ர்நாடக உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ச்சா‌‌ர்யா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். கர்நாடக முதலமை‌ச்ச‌ர் எடியூரப்பாவுக்கு எதிராக, அவரது அமை‌ச்சரவையில் இடம் பெற்றுள்ள சுற்றுலா துறை அமை‌ச்ச‌ர் ஜனார்த்தன ரெட்டி, வருவாய் துறைஅமை‌ச்ச‌ர் ஜி.கருணாகர ரெட்டி, சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஸ்ரீராமுலு ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி உ‌ள்ளன‌ர். மேலும் ஆளும் பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்க‌ளி‌ல் 60 பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அவரது அரசுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் டெல்லியில் பா.ஜ.க மே‌லிட‌ம்மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இ‌ந்‌நிலை‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் எடியூரப்பா ஆதரவாளர்களான முன்னாள்நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தனஞ்செய் குமார், கர்நாடகா உள்துறை அமை‌ச்ச‌ர்வி.எஸ்.ஆச்சாரியா ஆகியோர் டெல்லியில் இன்று பா.ஜ.க தலைவ‌ர் ரா‌ஜ்நா‌‌த் ச‌ி‌ங், அ‌த்வா‌‌னி ஆ‌கியோரை சந்தித்து பேசின‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆ‌ச்சா‌‌ர்யா, க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து எடியூர‌ப்பாவை ‌மா‌ற்ற வே‌ண்டு‌ம் என ர‌ெ‌ட்டி சகோதர‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தன‌ர். ஆனா‌ல் முதலமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து எடியூர‌ப்பாவை மா‌ற்று‌ம் எ‌ண்ண‌ம் இ‌‌ல்லை என பா.ஜ.க. தலைமை ‌தீ‌ர்மா‌னி‌த்‌திரு‌ப்பதாக ஆ‌ச்சா‌‌ர்யா கூ‌றினா‌ர்.

வர்த்தகர்களுக்கு வசதியாக விசா தர சவுதி உடன்பாடு


வர்த்தகர்கள் அடிக்கடி எளிதாக சென்று வரும் வகையிலான விசாக்களை வழங்க இந்தியாவும், சவுதி அரேபியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.இந்திய - சவுதி கூட்டுக் கமிஷனின் எட்டாவது கூட்டம் ரியாத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் இந்திய தரப்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழுவினரும், சவுதி அரேபியா தரப்பில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் அப்துல்லா ஜெய்னால் அலிரெசா தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

அப்போது, "இந்திய - சவுதி அரேபிய வர்த்தகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எளிதாக சென்று வரும் வகையிலான நீண்ட காலத்திற்கு பயன்படக்கூடிய விசாக்களை வழங்குவது' என, இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.அதேபோல், சுங்கத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எண் ணெய், காஸ் மற்றும் தாதுக்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.



இதுதவிர, பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள், முதலீடு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, சமுதாய நலன் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மழைநீர் சென்றதில் தகராறு

மழைநீர் சென்றதால் ஏற்பட்ட தகராறில் ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வேதாரண்யம் கைலவனம் பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (35). விவசாயி. இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன் (45). இவர் முத்துப்பேட்டையில் போலீஸ்காரராக பணி செய்கிறார். அக்டோபர் 29ம் தேதி பெய்த மழையில் குமார் வீட்டு மழைநீர் முத்துகிருஷ்ணன் வீட்டு வழியாக சென்றது. ச்இதனால், ஏற்பட்ட வாய்தகராறில் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். இதில், குமார் மனைவி மாலதி (25), முத்துகிருஷ்ணன் மனைவி சாந்தி (38), மகன் வெற்றிச்செல்வன் (23) ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் ஐந்து பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், வேதாரண்யம் போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக குமாரை கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சங்கர் வழக்கை ஏற்று குமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ரூ.30 மானியம் திடீர் ரத்து-தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது

பொது மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த ரூ.30 மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டரின் ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

2008ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து சமையல் கேஸ் விலையும் உயர்த்தப்படும். சிலிண்டர் விலையை ரூ.288ல் இருந்து ரூ.339 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

இதையடுத்து பொது மக்களுக்கு சுமைமையக் குறைக்க டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் சமையல் எரிவாயுக்கு ரூ.50 மானியம் அளித்தன. இதனால் இந்த மாநில மக்களுக்கு ரூ. 289க்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாநிலங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.30 மானியம் அளித்தது. ஒரு சிலிண்டருக்கு மட்டும் இந்த மானியம் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 286 ஆக இருந்து வந்தது.

இந்நிலையில் சிலிண்டருக்கான உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன் விலையை ரூ.339ல் இருந்து ரூ.314 ஆக மத்திய அரசு குறைத்தது.

ஆனாலும் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த மானியம் தொடர்ந்தது. இதனால் நிறுத்தாமல் அளித்துவந்தது.

இப்போது மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மானியம் ரத்து மூலம் தமிழக அரசுக்கு மாதம் ரூ. 7 கோடி மிச்சமாகும்.