வ‌ந்தவா‌சி ‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ ஜெயரா‌ம‌ன் மரண‌ம்


புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வந்தவாசி தொகுதி தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெயராமன் இ‌ன்று மரண‌ம் அடை‌ந்தா‌ர். அவரு‌க்கு வயது (60). திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எஸ்.பி.ஜெயராமன். தி.மு.க.வை சேர்ந்த இவர் சுமார் 8 மாதங்களாக இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, சென்னையில் உள்ள அ‌ப்ப‌ல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவரது உடல் நிலை ‌மிகவு‌ம் மோசமானதால் செ‌ன்னை அடையா‌றி‌ல் உ‌ள்ள பு‌ற்றுநோ‌ய் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கு அவரு‌க்கு தீவிர சிகிச்சை அளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்தது. இந்த நிலையில் இ‌ன்று காலை ஜெயராமன் மரண‌ம் அடை‌ந்தா‌ர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, அமை‌ச்ச‌ர்க‌ள் நே‌ரி‌ல் செ‌ன்று அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர். ஜெயராமனு‌க்கு மனை‌வியு‌ம், 4 மக‌ன்க‌ள், ஒரு மகளு‌ம் உ‌ள்ளன‌ர். அவரது இறு‌தி‌ச் சட‌ங்கு சொ‌ந்த ஊரான செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் நடைபெறு‌கிறது.

0 comments: