முதலமைச்சர் பதவியில்
இருந்து எடியூரப்பாவை மாற்றும் எண்ணம் இல்லை என பா.ஜ.க. தலைமை தீர்மானித்திருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சுற்றுலா துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, வருவாய் துறைஅமைச்சர் ஜி.கருணாகர ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மேலும் ஆளும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 60 பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அவரது அரசுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் டெல்லியில் பா.ஜ.க மேலிடம்மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா ஆதரவாளர்களான முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் தனஞ்செய் குமார், கர்நாடகா உள்துறை அமைச்சர்வி.எஸ்.ஆச்சாரியா ஆகியோர் டெல்லியில் இன்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானி ஆகியோரை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சார்யா, கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என ரெட்டி சகோதரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் எண்ணம் இல்லை என பா.ஜ.க. தலைமை தீர்மானித்திருப்பதாக ஆச்சார்யா கூறினார்.
0 comments:
Post a Comment