வர்த்தகர்கள் அடிக்கடி எளிதாக சென்று வரும் வகையிலான விசாக்களை வழங்க இந்தியாவும், சவுதி அரேபியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.இந்திய - சவுதி கூட்டுக் கமிஷனின் எட்டாவது கூட்டம் ரியாத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் இந்திய தரப்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழுவினரும், சவுதி அரேபியா தரப்பில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் அப்துல்லா ஜெய்னால் அலிரெசா தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
அப்போது, "இந்திய - சவுதி அரேபிய வர்த்தகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எளிதாக சென்று வரும் வகையிலான நீண்ட காலத்திற்கு பயன்படக்கூடிய விசாக்களை வழங்குவது' என, இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.அதேபோல், சுங்கத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எண் ணெய், காஸ் மற்றும் தாதுக்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள், முதலீடு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, சமுதாய நலன் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment