மழைநீர் சென்றதில் தகராறு

மழைநீர் சென்றதால் ஏற்பட்ட தகராறில் ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வேதாரண்யம் கைலவனம் பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (35). விவசாயி. இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன் (45). இவர் முத்துப்பேட்டையில் போலீஸ்காரராக பணி செய்கிறார். அக்டோபர் 29ம் தேதி பெய்த மழையில் குமார் வீட்டு மழைநீர் முத்துகிருஷ்ணன் வீட்டு வழியாக சென்றது. ச்இதனால், ஏற்பட்ட வாய்தகராறில் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். இதில், குமார் மனைவி மாலதி (25), முத்துகிருஷ்ணன் மனைவி சாந்தி (38), மகன் வெற்றிச்செல்வன் (23) ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் ஐந்து பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், வேதாரண்யம் போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக குமாரை கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சங்கர் வழக்கை ஏற்று குமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

0 comments: