பொது மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த ரூ.30 மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டரின் ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
2008ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து சமையல் கேஸ் விலையும் உயர்த்தப்படும். சிலிண்டர் விலையை ரூ.288ல் இருந்து ரூ.339 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இதையடுத்து பொது மக்களுக்கு சுமைமையக் குறைக்க டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் சமையல் எரிவாயுக்கு ரூ.50 மானியம் அளித்தன. இதனால் இந்த மாநில மக்களுக்கு ரூ. 289க்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மாநிலங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.30 மானியம் அளித்தது. ஒரு சிலிண்டருக்கு மட்டும் இந்த மானியம் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 286 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில் சிலிண்டருக்கான உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன் விலையை ரூ.339ல் இருந்து ரூ.314 ஆக மத்திய அரசு குறைத்தது.
ஆனாலும் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த மானியம் தொடர்ந்தது. இதனால் நிறுத்தாமல் அளித்துவந்தது.
இப்போது மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மானியம் ரத்து மூலம் தமிழக அரசுக்கு மாதம் ரூ. 7 கோடி மிச்சமாகும்.
0 comments:
Post a Comment