உ.பி.யில் லாரி மீது இரயில் மோ‌தி 14 ப‌ய‌ணிக‌ள் ப‌லி

உத்தரபிரதேசத்தில் ஆளில்லாத இரயில்வே கிராசிங்கை கட‌க்க முய‌ன்ற மணல் லாரி மீது பயணிகள் இரயில் மோதி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் இர‌யி‌ல் படி‌க்க‌ட்டி‌ல் பயண‌ம் செ‌ய்த 14 பேர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். 30 பே‌ர் பல‌த்த காயம் அடைந்தன‌ர். மங்காபூர், நவாப்கஞ்ஜ் இரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள சாக் ரசூல்பூர் கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. மணல் லாரி மீது மோதிய பயணிகள் இரயில் கோரக்பூரில் இருந்து அயோத்தி நோக்கி செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. விபத்தில் லாரியின் ஓ‌ட்டுன‌ர், இரயிலின் மேற்கூரை, வாசல்களில் அமர்ந்து பயணம் செய்த 13 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பெய்‌ஸாபாத் மற்றும் அயோத்தியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த இரயிலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அயோத்தியில் இ‌ன்று நடைபெற இருந்த பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் என்று மாவட்ட ஆட்சியர் சுக்லால் பாரதி தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தகவலறிந்ததும், இரயில்வே உயர்அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக இரயில்வே அதிகாரி தெரிவித்தார.

0 comments: