சென்னையில் தனியார் விமானத்தில் விமானியாக பணிபுரிந்த ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தவர் கிருஷ்ண நாராயணன் (28).
இவர் கடந்த ஒரு வருடமாக கிங்பிஷ்சர் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணி புரிந்து வந்தார். இவரது பெற்றோர் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.கடந்த மாதம் 22 ஆம் தேதி விமானி கிருஷ்ண நாராயணன், காவலாளியிடம் 5 நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தனது வீட்டில் உள்ள கதவில் அக்டோபர் 30ஆம் தேதி வரை நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்றும் எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு விமானி கிருஷ்ண நாராயணன் வீட்டில் தூர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் தூக்க மாத்திரை இருந்த அட்டையை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காதல் தோல்வியால் விமானி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment