நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் .ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், அலுவலகங்களில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை என மொத்தம் 3,080 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ் பயணிகள் கடுமையான சோதனை களுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் எல்லா பகுதிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர். நாளை வரை பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர்.மத்திய அரசு அலுவலகங்களான சென்னை தொலைபேசி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டன. இரண்டு வாயில்களில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் படுகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் போலீசார் மாறு வேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரி, நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் தங்கும் லாட்ஜ்களில், விவரங்களை சேகரித்தனர். பதற்றம் நிறைந்த கோவை, திருப்பூர், வேலூர் மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதநல்லிணக்க விருது

அமெரிக்க வாழ் இந்தியரான இபு பட்டேலுக்கு 2010ஆம் ஆண்டுக்கான லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 வயதாகும் இபு பட்டேலுக்கு விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும்.

இசை, அரசியல் விஞ்ஞானம், மனோதத்துவம், கல்வி, மதநல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் (Louisville Grawemeyer) சர்வதேச விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2010ஆம் ஆண்டுக்கான மதநல்லிணக்க விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இபு பட்டேல் தேர்வாகி உள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதிய ‘ஆக்ட்ஸ் ஆஃப் ஃபெய்த்’ (Acts of Faith: The Story of an American Muslim, the Struggle for the Soul of a Generation) என்னும் சுயசரிதை புத்தகத்திற்காக லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் முஸ்லிம் என்ற பெருமையையும் அபு படேல் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் மதநல்லிணக்க விருதுக்காக 67 பேர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிகாகோ நகரில் ‘இன்டர் ஃபெய்த் யூத் கோர்’ என்னும் இளைஞர் இயக்கத்தையும் அபு படேல் நடத்தி வருகிறார். அதிபர் ஒபாமாவின் மதநல்லிணக்க ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

சுவாதி ரகசிய திருமணம்

விஜய் ஜோடியாக ‘தேவா’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து விஜய்யுடன் ‘வசந்த வாசல்’, ‘செல்வா’ படங்களிலும், அஜீத் ஜோடியாக ‘வான்மதி’ படத் திலும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களில் சுவாதி நடித்துள்ளார். வர்ஜீனியாவில் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குனராக இருப்பவர் கிரண். இவரை ரகசிய திரு மணம் செய்துள்ளார் சுவாதி. இவர்களின் திருமணம், கடந்த நவம்பர் 22&ம் தேதி, ஐதராபாத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியிலுள்ள மாருதி கார்டனில் நடைபெற்றது.

இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். சுவாதி, கிரண் இருவரும் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின் ‘தினகரன்’ நிருபரிடம் சுவாதி கூறும்போது, இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திரும ணம் இது.

குறுகியகாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், திரையுலகை சேர்ந்தவர்களை திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை. ‘யோகி’ என்னுடைய கடைசி படம். இனி சினிமவில் நடிக்க மாட்டேன். கணவர் கிரணுடன் இம்மாத இறுதியில் வர்ஜீனியாவில் குடியேற உள்ளேன் என்றார்.

1,84,000 பேருக்கு எய்ட்ஸ்

தமிழகத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயாளிகள் மீது கவனம் செலுத்துதல் போன்ற பணிகளில், ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்‘ ஈடுபட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறை எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, தமிழகத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.

கோவையில் 6 ஆயிரம் பேர் உள்ளனர். அதே சமயம், எச்.ஐ.வி தடுப்பு, சிகிச்சை, ஆதரவு மற்றும் பராமரிப்பு சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. சென்டினல் கணக்கெடுப்பு, மத்திய சுகாதார துறையின் கணக்கெடுப்பு தகவலின்படி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. தாக்கத்தின் அளவு 2001ம் ஆண்டு 1.13 சதவீதமாக இருந்தது.

இது, 2007ம் ஆண்டு 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழக அரசின் தொடர் தடுப்பு பணிகளே இதற்கு காரணம்.
இளைஞர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 986 கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 57 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

எச்.ஐ.வி. உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் 36 ஏ.ஆர்.டி மையங்கள் உள்ளன. இவற்றில், கடந்த அக்டோபர் கணக்குப்படி 38,390 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் தாக்குதலில் லஷ்கர் இயக்கத்துக்கு தொடர்பு

பெங்களூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் லஷ்கர்&இ&தொய்பா இயக்கத்துக்கு தொடர்பு உள்ளது என்று கைதான தீவிரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து மேகலயா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்&இ& தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த நசீர் அவரது கூட்டாளி சிராஜ் சம்சுதீன் ஆகியோர் ஷில்லாங்கில் நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வெடிகுண்டு தயாரிப்பதில் நசீர் நிபுணர். இருவரிடமும் மேகாலயா போலீசாரும் எல்லை பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் 2005ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லி பேராசிரியர் பூரி பலியானார். இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று போலீசாரிடம் நசீர் ஒப்புக் கொண்டுள்ளார். ரகீம் என்பவருடன் சேர்ந்து வெடிகுண்டுகளை வைத்ததாக நசீர் தெரிவித்துள்ளார்.
நசீர், சிராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெங்களூர் போலீசார் ஷில்லாங் சென்றுள்ளனர்.

ரேஷன் கடைகளில் வெப் கேமரா

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் ஊழியர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் சென்னையில் 4 கடைகளில் இணையதள கண்காணிப்பு கேமரா (வெப் கேமரா) பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘‘இணையதள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை முறைப்படுத்த முடியும்; பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, மற்ற கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் பொருள் வாங்கச் செல்லும் பொதுமக்களிடம் ஊழியர்கள் மரியாதைக் குறைவாகப் பேசுகின்றனர் என்று நீண்ட காலமாகப் புகார் உண்டு.

ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு பல இடங்களில் ஊழியர்களும் உடந்தையாக இருக்கின்றர்.
வேலை நேரத்தின்போதே குறிப்பிட்ட ஆட்களுக்கு அதிக அளவு ரேஷன் பொருட்களைத் தருவதும், அவர்கள் அதை கள்ளச்சந்தையில் விற்பதும் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்க, ரேஷன் கடைகளில் 24 மணி நேரமும் இயங்கும் இணையதள கண்காணிப்பு கேமரா பொருத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, நேர்மையான ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இந்த கேமரா உதவுகிறது.

ஊழியர்கள் நேர்மையாக இருந்தாலும், சமூக விரோதிகளின் மிரட்டல் காரணமாக முறைகேடுகளுக்கு துணை போகிறார் கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த சமூக விரோதிகளை மேலதிகாரிகளே அடையாளம் கண்டு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். இதற்கு வசதியாக கடைகளில் நடக்கும் உரையாடலும் பதிவாகும் வசதி இந்த கேமராவில் உள்ளது.

இணையதள கண்காணிப்பு கேமரா திட்டம், முதல் கட்டமாக சென்னை அபிராமபுரம் 1, 2, ராஜா அண்ணாமலைபுரம் 5 மற்றும் ஓட்டேரி வள்ளுவன் 3 ஆகிய கடைகளில் சோதனை அடிப்படையில் வைக்கப்படுகிறது; ஷ்ஷ்ஷ்.க்ஷீமீனீஷீtமீபீணீtணீநீமீஸீtக்ஷீமீ.நீஷீனீ என்ற இணையதளத்தின் மூலம் கடைகளில் நடப்பதை பொதுமக்களும் பார்வையிடலாம்ÕÕ என்று கூட்டுறவுத் துறையின் பொது விநியோகப் பிரிவு கூடுதல் பதிவாளர் எல்.சித்திரசேனன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்றுமுதல் அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம் ரேஷன் கடைகளில் இணையதளக் கண்காணிப்பு கேமரா இயக்கம் தொடங்கியது. கண்காணிப்பு கேமரா அமைக்க, ஒரு கடைக்கு 23 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எல்லா கடைகளுக்கும் இந்த வசதி ஏற்படுத்தும்போது, செலவுத் தொகை கணிசமாக குறையும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

கொள்ளையர் நடத்தும் பங்கு சந்தை

சோமாலிய கடல் கொள்ளையர்கள், தங்களுக்கென தனி நிறுவனங்களை தொடங்கி பங்குச் சந்தையே நடத்தி வருகின்றனர்.ஆசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள், வழியில் செங்கடல் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

அந்த பகுதியில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் கப்பலை வழிமறிக்கும் சோமாலிய கடல் கொள்ளையர்கள், பயணிகளிடம் நகை, பணம் மற்றும் சரக்கு கப்பலில் இருந்து சரக்குகளை கொள்ளை அடிக்கின்றனர். அதோடு சரக்குக் கப்பல்களை கடத்திவைத்துக் கொண்டு, பல லட்சம் டாலர் பிணைத் தொகை பெற்றுக்கொண்டு கப்பலை விடுவிக்கின்றனர். இந்தத் தொழிலில் பல கோடி டாலர் புழங்குகிறது.சர்வதேச அளவில் கடல் கொள்ளையர்களின் அட்டகாசம், பல நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், கொள்ளையர்களோ, நிம்மதியாக தங்கள் தொழிலை தொடர்கின்றனர். அதை அமைப்பு சார்ந்த தொழிலாக தங்களுக்குள் உருவாக்கி வருகின்றனர். கொள்ளை அடிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சோமாலிய கடலோர மக்களுக்கு அளித்து அவர்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். கொள்ளைத் தொழிலில் புதிதாக பலரை சேர்க்கின்றனர். ஆயிரக்கணக்கான டாலர்கள், பொருட்கள் கிடைப்பதால் இளைஞர்கள் பலரும் தினசரி கடல் கொள்ளையராக மாறத் தொடங்கி உள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தை பல மடங்காக்கவும் அவர்கள் தவறவில்லை. 15 கம்பெனிகளாக கொள்ளையடிக்கும் தொழிலைப் பிரித்து, ஒரு பங்குச் சந்தையை சமீபத்தில் தொடங்கினர். அந்நிறுவனங்களின் பங்குகளை பணம் அல்லது ஆயுதங்களை கொடுத்து மக்கள் வாங்கலாம்.முதலீடு இல்லாத, அதேநேரம் லாபகரமான தொழில் (!) என்பதால் அந்நிறுவனங்களின் பங்குகளை மக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.
விளைவு... குறுகிய காலத்தில் 15 நிறுவனங்கள் இப்போது 72 ஆக அதிகரித்து விட்டன.கடற் கொள்ளையராக தீவிரமாக பணியாற்றி(!) இப்போது நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்ற முகமது என்பவர் கூறுகையில், ÔÔகடற் கொள்ளைத் தொழிலுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற வேறு வழியில்லை. அவர்களையும் எங்கள் நிறுவன பங்குதாரர்களாக மாற்றி விட்டோம்.

எங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 72 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் கடற் கொள்ளையில் வெற்றிகரமாக செயல்படுகின்றனÕÕ என்றார்.கடற் கொள்ளைக்கு பயன்படும் வகையில் பணம், ஆயுதம், பொருட்கள் கொடுத்து பங்குகளை வாங்கலாம். இப்படிச் செய்வதால், எங்கள் தொழிலுக்கு சமூக அந்தஸ்து பெற்று விட்டோம் என்றும் அவர் கூறினார்.

லண்டன் பாலம் இன்று

தனியார் வசம் இருந்து வரும் 242 ஆண்டு பழமையான லண்டன் பாலம், இன்று விற்பனைக்கு வருகிறது. தொடக்க விலை ரூ.9.87 கோடி.இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஸ்வின்போர்டு என்ற இடத்தில் பழமையான பாலம் உள்ளது.

அது 1767ம் ஆண்டு தனியாரால் கட்டப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்து செல்ல பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.இதனால், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் வாகனங்கள் அந்த வழியா போய், வருகின்றன. கட்டப்பட்டது முதல் தனியார் வசம் இருக்க பார்லிமென்ட்டில் சட்டம் இயற்றப்பட்டது.

அத்துடன், அந்த பாலத்தைக் கடக்கும் வாகனங்களிடம் சுங்கம் வசூலிக்கவும், அந்த தொகைக்கு முழு வரி விலக்கும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பழமையான அந்த பாலத்தை அதன் இப்போதைய உரிமையாளர் விற்க முன்வந்துள்ளார்.அதற்கான ஏலம் இன்று தொடங்குகிறது. பாலத்துக்கு தொடக்க விலையாக ரூ.9.87 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுங்க வசூல் மூலம் லாபத்தை அள்ளித் தரும் இந்த பாலத்தை வாங்க உள்நாட்டினர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜமைக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுபற்றி ஆஸி. தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், ÔÔஇது நல்ல வாய்ப்பு. பாலத்தில் வசூலாகும் சுங்கத்துக்கு வருமான வரியோ, வர்த்தக வரியோ கிடையாது. எனவே, முழுவதும் லாபம்தான்.
நமது முதலீடுக்கு அதிக லாபம் பார்க்கலாம்ÕÕ என்றார்.எனினும், இது வழிப்பறி கொள்ளை என ஸ்வின்போர்டு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பழைய சட்டத்தை திருத்தி, சுங்கம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு, பாலத்தை யாராவது விற்கட்டும், வாங்கட்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக அலுவலக வாடகை உலக நகரங்களில் டெல்லி

அதிக அலுவலக இட வாடகை கொண்ட உலகின் முதல் 10 நகரங்கள் பட்டியலில் டெல்லி இடம் பிடித்துள்ளது. மும்பைக்கு 7ம் இடம் கிடைத்துள்ளது.சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் சிபி ரிச்சர்ட்ஸ் எல்லிஸ்.

அது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அதிக அலுவலக இட வாடகை கொண்ட முக்கிய நகரங்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிடுகிறது.அதன் இந்த ஆண்டு பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டியலில் இருந்து வெளியேறிய டெல்லி, மீண்டும் இப்போது 10வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 6ம் இடத்தில் இருந்த மும்பை, இந்த முறை 7ம் இடத்தில் உள்ளது. டெல்லியின் வர்த்தக பகுதிகளில் இட வாடகை கடந்த 6 மாதங்களாக நிலையாக உள்ளது. எனினும், சில சர்வதேச நகரங்களில் அலுவலக இட வாடகை சிறிது குறைந்திருப்பதால், டாப் 10 பட்டியலில் டெல்லிக்கு இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அது 12ம் இடத்தில் இருந்தது. அதிக அலுவலக வாடகை உள்ள நகராக லண்டன் முதலிடம் பிடித்தது.

சுகாய் போர் விமானங்கள் பறப்பதற்கு திடீர் தடை

ராஜஸ்தானில் சுகாய் ரக போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து விமானப்படையில் உள்ள 100 சுகாய் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து சுகாய்&30 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கியது. கடந்த 8 மாதங்களில் 2 சுகாய் போர் விமானங்கள் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பலியானார். மற்றொருவர் காயத்துடன் தப்பினார். கடந்த ஞாயிறன்று நடந்த விபத்தில் விமானம் தரையில் விழுவதற்கு முன்பே அதில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினர்.

1996ம் ஆண்டு முதல் சுகாய் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை சுகாய் ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில்லை. இப்போது 8 மாதத்துக்குள் 2 சுகாய் விமானங்கள் விழுந்து நொறுங்கியது விமானப்படை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து, விமானப்படையிடம் உள்ள 100 சுகாய் ரக போர் விமானங்கள் பறக்க நேற்று திடீரென தடை விதிக்கப்பட்டது. எல்லா விமானங் களிலும் சோதனை நடத்த விமானப்படை முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

77வது பிறந்த நாள் கி.வீரமணிக்கு முதல்வர் வாழ்த்து

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:தி.க. தலைவர் கி.வீரமணியின் 77வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர் சென்னையில் இருந்தால், 2 நாட்களுக்கு ஒருமுறை என்னைச் சந்திக்கத் தவறமாட்டார். ஆனால், இப்போது வெளிநாடு சென்றிருப்பதால், கடந்த பத்து நாட்களாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

வீரமணி எங்கிருந்தாலும் நாட்டில் நடைபெறும் எந்த சம்பவம் குறித்தும், ‘விடுதலை’ நாளேட் டில் அவரின் கருத்து இடம்பெறத் தவறாது. அன்றாடம் அதைப் படிக்காவிட்டால் எனக்கும் ஏடுகளைப் படித்த நிறைவு ஏற்படாது. பெரியாரின் எண்ணங்களை, பரப்பும் தூதுவராக , சுயமரியாதைச் சுடரொளியாக பணியாற்றும், என் இளவலை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். நிதி அமைச்சர் அன்பழகனும் கி.வீரமணியை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார்

இட்லி ஆராய்ச்சிக்கு ரூ.2 கோடி நிதி

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் அமைச்சகம், தூய்மையான மற்றும¢ சுவை மிகுந்த இட்லி உணவு வகைகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

எனவே இட்லியை பயன்படுத்தி எத்தனை வகையான உணவு தயாரிக்கலாம் என்பதை அறிய தஞ்சையில் செயல்படும் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தில் நேற்று இட்லி மேளா நடத்தப்பட்டது.

இதில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட இட்லி உணவு வகைகளை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சக இணை செயலாளர் அஜீத்குமார் பேசியது: நம் நாட்டில் 11 ஆயிரம் உணவு பண்டங்கள் உள்ளன.

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இட்லி உணவு பழக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் இட்லிக்கு அளவு, சுவை, நிறம், தரம் என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நாம் விரும்பி உண்ணும் இட்லியை, உலகத் தரத்தில் தயாரித்து அதை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நாட்டின் அன்னிய செலாவாணி அதிகரிக்கும்.

இட்லி உணவு வகை ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் இட்லி உணவு வகைகளை தயார் செய்து அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதே திட்டத்தின் நோக்கம் என்றார்

சென்னையில் 7ஆ‌ம் தே‌தி முத‌ல் 'கால் ஆட்டோ' வசதி தொட‌க்க‌ம்

சென்னையில் தற்போது பல இடங்களில் கால் டாக்ஸி செயல்பட்டு வருகிறது. இதை போலவே போன் செய்தால் ஆட்டோக்களையும் வீடு தேடி வந்து அழைத்து செல்வதற்காக `கால்' ஆட்டோ வசதி வரு‌ம் 7ஆ‌ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

இது தொட‌ர்பாக சென்னை கால் ஆட்டோ என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் கே.நவநீதன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், 044-43444344 என்ற எண்ணுக்கு போன் செய்தால் வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பி பயணிகளை ஏற்றி செல்லும் முறையை தொடங்கியிருக்கிறோம்.

ஆட்டோவில் அமர்ந்த பிறகுதான் மீட்டர் போடப்படும். குறைந்தபட்சமாக, 2 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் மற்றும் 30 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.காலை 7 மணி முதல் 7 மணி வரை இந்த சேவை செயல்படும். பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆட்டோ எங்கே செல்கிறது என்பதை கண்காணிக்கிறோம் எ‌ன்று நவநீதன் தெரிவித்தார்.

யு.எஸ். படை 2011 லிருந்து வெளியேறும்'

ஆப்கானிலிருந்து அமெரிக்க படை படிப்படியாக வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வருகிற 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கலாம் என அதிபர் பராக் ஒபாமா கருதுவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் அடிப்படையில் அமெரிக்க படை 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆப்கானிலிருந்து வெளியேறத் தொடங்கலாம் என ஒபாமா கருதுகிறார்.அவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேறும்போது ஆப்கானின் பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு படைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறகத் தொடங்கும்.

ஆப்கான் படைகளுக்கு கடந்த 18 முதல் 24 மாதங்களாக நாங்கள் உரிய பயிற்சியை அளித்துள்ளதால், நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் அளிப்போம் என கிப்ஸ் மேலும் தெரிவித்தார்.

ர‌ஜி‌‌‌னிகா‌ந்‌த் மக‌ள் பட‌த்து‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் செள‌ந்த‌ர்யா தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வரும் 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் ரஜினியின் மகளுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

WDநந்தனம் என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் மணியன் என்பவர் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு எதிராக தன்னுடைய சார்பிலும், தன்னுடைய நிறுவனத்தின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், 2007ஆம் ஆண்டு என்னை சந்தித்து 'கோவா' படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, என்னுடைய நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்ச ரூபாயும், 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்ச ரூபாயும் கடனாக கொடுத்தேன்.இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு பிராமிசரி நோட் எழுதி தந்தார். 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த கடனை திரும்ப செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்ச ரூபாய் தந்தேன். ஆனால் இதுநாள் வரை இந்த கடனை அவர் திரும்ப தரவில்லை.எனவே, கடனை திரும்பக் கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன். இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார். ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த 'கோவா' படம் வெளியிடப் படவிருப்பதாக கூறப்படுகிறது.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் நான் பெரிதும் பாதிக்கப்படுவேன். எனவே, என்னுடைய கடன் தொகை திரும்ப செலுத்தப்படும் வரை 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த நீதிபதி ஜி.ராஜசூர்யா, 'கோவா' படத்தை டிசம்பர் 11ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த மனுவுக்கு அன்றைய தினத்திற்குள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளிக்க தா‌க்‌கீது அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.