லண்டன் பாலம் இன்று

தனியார் வசம் இருந்து வரும் 242 ஆண்டு பழமையான லண்டன் பாலம், இன்று விற்பனைக்கு வருகிறது. தொடக்க விலை ரூ.9.87 கோடி.இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஸ்வின்போர்டு என்ற இடத்தில் பழமையான பாலம் உள்ளது.

அது 1767ம் ஆண்டு தனியாரால் கட்டப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்து செல்ல பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.இதனால், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் வாகனங்கள் அந்த வழியா போய், வருகின்றன. கட்டப்பட்டது முதல் தனியார் வசம் இருக்க பார்லிமென்ட்டில் சட்டம் இயற்றப்பட்டது.

அத்துடன், அந்த பாலத்தைக் கடக்கும் வாகனங்களிடம் சுங்கம் வசூலிக்கவும், அந்த தொகைக்கு முழு வரி விலக்கும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பழமையான அந்த பாலத்தை அதன் இப்போதைய உரிமையாளர் விற்க முன்வந்துள்ளார்.அதற்கான ஏலம் இன்று தொடங்குகிறது. பாலத்துக்கு தொடக்க விலையாக ரூ.9.87 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுங்க வசூல் மூலம் லாபத்தை அள்ளித் தரும் இந்த பாலத்தை வாங்க உள்நாட்டினர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜமைக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுபற்றி ஆஸி. தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், ÔÔஇது நல்ல வாய்ப்பு. பாலத்தில் வசூலாகும் சுங்கத்துக்கு வருமான வரியோ, வர்த்தக வரியோ கிடையாது. எனவே, முழுவதும் லாபம்தான்.
நமது முதலீடுக்கு அதிக லாபம் பார்க்கலாம்ÕÕ என்றார்.எனினும், இது வழிப்பறி கொள்ளை என ஸ்வின்போர்டு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பழைய சட்டத்தை திருத்தி, சுங்கம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு, பாலத்தை யாராவது விற்கட்டும், வாங்கட்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments: