கொள்ளையர் நடத்தும் பங்கு சந்தை

சோமாலிய கடல் கொள்ளையர்கள், தங்களுக்கென தனி நிறுவனங்களை தொடங்கி பங்குச் சந்தையே நடத்தி வருகின்றனர்.ஆசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள், வழியில் செங்கடல் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

அந்த பகுதியில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் கப்பலை வழிமறிக்கும் சோமாலிய கடல் கொள்ளையர்கள், பயணிகளிடம் நகை, பணம் மற்றும் சரக்கு கப்பலில் இருந்து சரக்குகளை கொள்ளை அடிக்கின்றனர். அதோடு சரக்குக் கப்பல்களை கடத்திவைத்துக் கொண்டு, பல லட்சம் டாலர் பிணைத் தொகை பெற்றுக்கொண்டு கப்பலை விடுவிக்கின்றனர். இந்தத் தொழிலில் பல கோடி டாலர் புழங்குகிறது.சர்வதேச அளவில் கடல் கொள்ளையர்களின் அட்டகாசம், பல நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், கொள்ளையர்களோ, நிம்மதியாக தங்கள் தொழிலை தொடர்கின்றனர். அதை அமைப்பு சார்ந்த தொழிலாக தங்களுக்குள் உருவாக்கி வருகின்றனர். கொள்ளை அடிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சோமாலிய கடலோர மக்களுக்கு அளித்து அவர்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். கொள்ளைத் தொழிலில் புதிதாக பலரை சேர்க்கின்றனர். ஆயிரக்கணக்கான டாலர்கள், பொருட்கள் கிடைப்பதால் இளைஞர்கள் பலரும் தினசரி கடல் கொள்ளையராக மாறத் தொடங்கி உள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தை பல மடங்காக்கவும் அவர்கள் தவறவில்லை. 15 கம்பெனிகளாக கொள்ளையடிக்கும் தொழிலைப் பிரித்து, ஒரு பங்குச் சந்தையை சமீபத்தில் தொடங்கினர். அந்நிறுவனங்களின் பங்குகளை பணம் அல்லது ஆயுதங்களை கொடுத்து மக்கள் வாங்கலாம்.முதலீடு இல்லாத, அதேநேரம் லாபகரமான தொழில் (!) என்பதால் அந்நிறுவனங்களின் பங்குகளை மக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.
விளைவு... குறுகிய காலத்தில் 15 நிறுவனங்கள் இப்போது 72 ஆக அதிகரித்து விட்டன.கடற் கொள்ளையராக தீவிரமாக பணியாற்றி(!) இப்போது நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்ற முகமது என்பவர் கூறுகையில், ÔÔகடற் கொள்ளைத் தொழிலுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற வேறு வழியில்லை. அவர்களையும் எங்கள் நிறுவன பங்குதாரர்களாக மாற்றி விட்டோம்.

எங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 72 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் கடற் கொள்ளையில் வெற்றிகரமாக செயல்படுகின்றனÕÕ என்றார்.கடற் கொள்ளைக்கு பயன்படும் வகையில் பணம், ஆயுதம், பொருட்கள் கொடுத்து பங்குகளை வாங்கலாம். இப்படிச் செய்வதால், எங்கள் தொழிலுக்கு சமூக அந்தஸ்து பெற்று விட்டோம் என்றும் அவர் கூறினார்.

0 comments: