ரேஷன் கடைகளில் வெப் கேமரா

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் ஊழியர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் சென்னையில் 4 கடைகளில் இணையதள கண்காணிப்பு கேமரா (வெப் கேமரா) பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘‘இணையதள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை முறைப்படுத்த முடியும்; பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, மற்ற கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் பொருள் வாங்கச் செல்லும் பொதுமக்களிடம் ஊழியர்கள் மரியாதைக் குறைவாகப் பேசுகின்றனர் என்று நீண்ட காலமாகப் புகார் உண்டு.

ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு பல இடங்களில் ஊழியர்களும் உடந்தையாக இருக்கின்றர்.
வேலை நேரத்தின்போதே குறிப்பிட்ட ஆட்களுக்கு அதிக அளவு ரேஷன் பொருட்களைத் தருவதும், அவர்கள் அதை கள்ளச்சந்தையில் விற்பதும் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்க, ரேஷன் கடைகளில் 24 மணி நேரமும் இயங்கும் இணையதள கண்காணிப்பு கேமரா பொருத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, நேர்மையான ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இந்த கேமரா உதவுகிறது.

ஊழியர்கள் நேர்மையாக இருந்தாலும், சமூக விரோதிகளின் மிரட்டல் காரணமாக முறைகேடுகளுக்கு துணை போகிறார் கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த சமூக விரோதிகளை மேலதிகாரிகளே அடையாளம் கண்டு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். இதற்கு வசதியாக கடைகளில் நடக்கும் உரையாடலும் பதிவாகும் வசதி இந்த கேமராவில் உள்ளது.

இணையதள கண்காணிப்பு கேமரா திட்டம், முதல் கட்டமாக சென்னை அபிராமபுரம் 1, 2, ராஜா அண்ணாமலைபுரம் 5 மற்றும் ஓட்டேரி வள்ளுவன் 3 ஆகிய கடைகளில் சோதனை அடிப்படையில் வைக்கப்படுகிறது; ஷ்ஷ்ஷ்.க்ஷீமீனீஷீtமீபீணீtணீநீமீஸீtக்ஷீமீ.நீஷீனீ என்ற இணையதளத்தின் மூலம் கடைகளில் நடப்பதை பொதுமக்களும் பார்வையிடலாம்ÕÕ என்று கூட்டுறவுத் துறையின் பொது விநியோகப் பிரிவு கூடுதல் பதிவாளர் எல்.சித்திரசேனன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்றுமுதல் அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம் ரேஷன் கடைகளில் இணையதளக் கண்காணிப்பு கேமரா இயக்கம் தொடங்கியது. கண்காணிப்பு கேமரா அமைக்க, ஒரு கடைக்கு 23 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எல்லா கடைகளுக்கும் இந்த வசதி ஏற்படுத்தும்போது, செலவுத் தொகை கணிசமாக குறையும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments: