பெங்களூர் தாக்குதலில் லஷ்கர் இயக்கத்துக்கு தொடர்பு

பெங்களூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் லஷ்கர்&இ&தொய்பா இயக்கத்துக்கு தொடர்பு உள்ளது என்று கைதான தீவிரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து மேகலயா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்&இ& தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த நசீர் அவரது கூட்டாளி சிராஜ் சம்சுதீன் ஆகியோர் ஷில்லாங்கில் நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வெடிகுண்டு தயாரிப்பதில் நசீர் நிபுணர். இருவரிடமும் மேகாலயா போலீசாரும் எல்லை பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் 2005ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லி பேராசிரியர் பூரி பலியானார். இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று போலீசாரிடம் நசீர் ஒப்புக் கொண்டுள்ளார். ரகீம் என்பவருடன் சேர்ந்து வெடிகுண்டுகளை வைத்ததாக நசீர் தெரிவித்துள்ளார்.
நசீர், சிராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெங்களூர் போலீசார் ஷில்லாங் சென்றுள்ளனர்.

0 comments: