சென்னையில் 7ஆ‌ம் தே‌தி முத‌ல் 'கால் ஆட்டோ' வசதி தொட‌க்க‌ம்

சென்னையில் தற்போது பல இடங்களில் கால் டாக்ஸி செயல்பட்டு வருகிறது. இதை போலவே போன் செய்தால் ஆட்டோக்களையும் வீடு தேடி வந்து அழைத்து செல்வதற்காக `கால்' ஆட்டோ வசதி வரு‌ம் 7ஆ‌ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

இது தொட‌ர்பாக சென்னை கால் ஆட்டோ என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் கே.நவநீதன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், 044-43444344 என்ற எண்ணுக்கு போன் செய்தால் வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பி பயணிகளை ஏற்றி செல்லும் முறையை தொடங்கியிருக்கிறோம்.

ஆட்டோவில் அமர்ந்த பிறகுதான் மீட்டர் போடப்படும். குறைந்தபட்சமாக, 2 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் மற்றும் 30 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.காலை 7 மணி முதல் 7 மணி வரை இந்த சேவை செயல்படும். பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆட்டோ எங்கே செல்கிறது என்பதை கண்காணிக்கிறோம் எ‌ன்று நவநீதன் தெரிவித்தார்.

0 comments: