எனவே இட்லியை பயன்படுத்தி எத்தனை வகையான உணவு தயாரிக்கலாம் என்பதை அறிய தஞ்சையில் செயல்படும் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தில் நேற்று இட்லி மேளா நடத்தப்பட்டது.
இதில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட இட்லி உணவு வகைகளை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சக இணை செயலாளர் அஜீத்குமார் பேசியது: நம் நாட்டில் 11 ஆயிரம் உணவு பண்டங்கள் உள்ளன.
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இட்லி உணவு பழக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் இட்லிக்கு அளவு, சுவை, நிறம், தரம் என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நாம் விரும்பி உண்ணும் இட்லியை, உலகத் தரத்தில் தயாரித்து அதை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நாட்டின் அன்னிய செலாவாணி அதிகரிக்கும்.
இட்லி உணவு வகை ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் இட்லி உணவு வகைகளை தயார் செய்து அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதே திட்டத்தின் நோக்கம் என்றார்
0 comments:
Post a Comment