மதநல்லிணக்க விருது

அமெரிக்க வாழ் இந்தியரான இபு பட்டேலுக்கு 2010ஆம் ஆண்டுக்கான லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 வயதாகும் இபு பட்டேலுக்கு விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும்.

இசை, அரசியல் விஞ்ஞானம், மனோதத்துவம், கல்வி, மதநல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் (Louisville Grawemeyer) சர்வதேச விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2010ஆம் ஆண்டுக்கான மதநல்லிணக்க விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இபு பட்டேல் தேர்வாகி உள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதிய ‘ஆக்ட்ஸ் ஆஃப் ஃபெய்த்’ (Acts of Faith: The Story of an American Muslim, the Struggle for the Soul of a Generation) என்னும் சுயசரிதை புத்தகத்திற்காக லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் முஸ்லிம் என்ற பெருமையையும் அபு படேல் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் மதநல்லிணக்க விருதுக்காக 67 பேர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிகாகோ நகரில் ‘இன்டர் ஃபெய்த் யூத் கோர்’ என்னும் இளைஞர் இயக்கத்தையும் அபு படேல் நடத்தி வருகிறார். அதிபர் ஒபாமாவின் மதநல்லிணக்க ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

0 comments: