பாபநாசம் சுகாதார விழாவில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்த இந்த மருத்துவ முகாமில் கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 127 பேருக்கு ரூபாய் 22 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 இடங்களில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 433 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். பாபநாசத்தில் நடந்த முகாமில் 4 ஆயிரம் பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த 200 டாக்டர்கள், 400 சுகாதாரப் பணியாளர்கள்
பங்கேற்று பரிசோதனை செய்தனர். மாற்று திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
கண் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உயர் அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்து உள்ள 2 ஆயிரத்து 740 பேரில் இதுவரை 2 ஆயிரத்து 436 பேருக்கு ரூபாய் 7 கோடியே 26 லட்சம் மதிப்பில் உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சண்முகம் கூறினார்.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது, ஒன்றியக்குழு தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் தாமரைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் சுலைமான் பாட்சா, துணைத் தலைவர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பின்னர் சரபோஜிராஜபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் வழுத்தூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு நடத்தினார்.
தொண்டியில் மேடான பகுதிக்கு குடிநீர் சப்ளை: கலெக்டர் உறுதி
தொண்டியில் நேற்று முன்தினம் கலெக்டர் ஹரிஹரன் குடிநீர் சம்பந்தமாக ஆய்வு செய்தார். தொண்டியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் காவிரி நீர் ஏற்றுவது குறித்தும் கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி தலைவர் பாலுச்சாமி கலெக்டரிடம் ,''தொண்டியில் மகாசக்திபுரம், பயணியர் விடுதி போன்ற இடங்கள் மேடான பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு தண்ணீர் சீராக செல்வதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிபடுகிறார்கள். இப்பகுதிக்கு தனியாக பைப் லைன் பதித்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் ,''என்றார். ''இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கபடும்,'' என, கலெக்டர் உறுதியளித்தார்.
சென்னை சுற்றுலா
புலிக்காடு:
வேடந்தாங்கல்:
முதலைப்பண்ணை:
முட்டுக்காடு:
கோவளம்:
மாமல்லபுரம்:
கடைவீதி:
கலாஷேத்திரா:
தியாசோபிகல் சொசைட்டி:
தோட்டக்கலை தோட்டம்:
தியாகிகள் மணி மண்டபம்:
ராஜாஜி மண்டபம்:
ராஜாஜி நினைவகம்:
பெரியார் நினைவகம்:
பிராந்திய ரயில் அருங்காட்சியகம்:
ரிப்பன் பில்டிங்:
திரைப்பட நகரம்:
மொழிப்போர்த் தியாகிகள் மண்டபம்:
அவெல்லா தெரசா தேவாலயம்:
ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில்:
பார்த்தசாரதி கோயில்:
மத்ய கைலாஷ்:
காளிகாம்பாள் கோயில்:
அய்யப்பன் கோயில்:
மருந்தீஸ்வரர் கோயில்:
கபாலீஸ்வரர் கோயில்:
அம்பேத்கார் மணி மண்டபம்:
அஷ்டலட்சுமி கோயில்:
குதிரை பந்தயம் ஒழிப்பு:
கிண்டி தேசிய பூங்கா:
விவேகானந்தர் இல்லம்:
போர் நினைவுச் சின்னம்:
இயேசு ராஜா தேவாலயம்:
சாந்தோம் பாசிலிகா:
டைடல் பார்க்:
வள்ளுவர் கோட்டம்:
எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
கொடிமரம்:
காந்தி நினைவகம்:
பாரதியார் நினைவகம்:
பகத்வத்சலம் நினைவகம்:
அண்ணா சதுக்கம்:
ஐகோர்ட்:
கோட்டை அருங்காட்சியகம்:
செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
சென்னை பல்கலைக்கழகம்:
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
அமீர் மகால்:
இந்திய குடியரசு பொன்விழா தூண்:
காந்தியின் கனவு: மகாத்மா காந்தியின் அகிம்சா நடைமுறை உருவான இடம். திலக் பவன் என்று தற்போது அழைக்கப்படும் இந்த இடத்தில் மகாத்மா தங்கி இருந்தபோது தான், பிரிட்டிஷ் அரசின் ரவுலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சா முறையில் போராட முடிவெடுத்தார். இதை ஒட்டி சோழா ஷெரட்டான் ஓட்டல் முன்பாக நினைவுத் தூண்
கலங்கரை விளக்கம்:
நேப்பியர் பாலம்:
எலியட்ஸ் கடற்கரை:
அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன
தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
கன்னிமாரா பொது நூலகம்:
பிர்லா கோளரங்கம்:
கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு
அண்ணா நகர் கோபுரம்:
சென்னை வரலாறு
ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.
சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.
செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.
1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.
இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்ற�ப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.
சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.
டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.
இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.
சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்�யை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.
பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.
கப்பலில் வேலைக்கு சென்ற இன்ஜினியர் மாயம்
இது குறித்து கூறப்படுவதாவது: கிழக்கு தாம்பரம், வாசுகி தெருவைச் சேர்ந்தவர் ஜூலியஸ் சிரோன் பெர்னாண்டோ. இவர், சோத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி டெனி. இவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் நிக்சன் (24). பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
அந்த நிறுவனம், கடந்த 9ம் தேதி நிக்சனை நெதர்லாந்தில் உள்ள தங்களின் நிறுவனத் துக்கு அனுப்பியது. நெதர்லாந் துக்கு சென்ற நிக்சன், கடந்த 11ம் தேதி பணியில் சேர்ந்துவிட்டதாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பினார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி நிக்சனின் பெற்றோருக்கு, சென்னையில் உள்ள கப்பல் நிறுவனம் மூலமாக, நிக்சன் நெதர்லாந் தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த நிக்சனின் பெற்றோர், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு, 'நெதர்லாந்தில் இருந்து கொலம்பியா புறப்பட்ட கப்பலில் நிக்சன் பணியில் இருந்தார். கப்பல் புறப்படும் போது இருந்த நிக்சன், அதன் பின் மாயமாகிவிட்டார்,' என்று கூறிய அந்நிறுவனத்தினர், வேலை பிடிக்காமல் தற்கொலை செய்வதாக நிக்சன் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தின் நகலை நிக்சனின் பெற்றோரிடம் கொடுத்தனர்.
நிக்சன் கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடியதாகவும், இது தொடர்பாக பெல்ஜியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி, நிக்சனின் உடைமைகளை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, நிக்சனின் பெற்றோர் சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த நிக்சனின் தந்தை ஜூலியஸ் சிரோன் பெர்னாண்டோவிடம் கேட்டபோது, 'என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
'எனவே, மகனை மீட்டுத் தருமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க சென் றோம். ஆனால், வெளிநாடுகளில் காணாமல் போனால் நாங்கள் புகார் வாங்கக்கூடாது என போலீசார் தெரிவித்துவிட் டனர். 'இதனால், சென்னையிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலகத்தில் புகார் கொடுத் துள்ளோம்' என்றார்.
17,000 சர்வதேச விமானங்களின் சேவை பாதிப்பு
ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் நேற்றும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக, ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் 17 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐஸ்லாந்து நாட்டில் பனிமலை அடுக்குகளின் கீழ் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளன.எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது. இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.
எரிமலையில் நேற்றும் சீற்றம் இருந்தது. அதிலிருந்து அதிக அளவில் சாம்பல் தூசி வெளியேறி, வான்வெளியை சூழ்ந்தது. இதனால், நேற்றும் விமானங்கள் இயக்கப்படவில்லை. எரிமலை வெடிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 17 ஆயிரம் விமானங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு தினமும், பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள், தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
'எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் எப்போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, எரிமலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், விமானப் பயணிகளும், விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னையிலும் பாதிப்பு : சென்னையில் இருந்து புறப்படும் மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை - பிராங்பர்ட் செல்லும் லுப்தான்சா, சென்னை - லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சென்னை - பிரஸ்ஸல்ஸ் செல்லும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் பிரபாகரன் தாயார்
பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
மருத்துவ சிகிச்சைக்காகவே தான் சென்னை வந்திருப்பதாக பார்வதி அம்மாள் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டதோடு அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். தகவல் அறிந்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் அவர்களுக்கும் பார்வதி அம்மாளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
கலை விருதுகள் பெற 20 கலைஞர்கள் தேர்வு
நையாண்டிமேள தவில் கலைஞர் தேவர்கண்டநல்லூர் கலியமூர்த்தி நன்மணி விருதுக்கும், மேடை நாடக கலைஞர் மன்னார்குடி ராஜகோபாலன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் 2007–08ம் ஆண்டுக்கு பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் அபராஜிதா கலை இளமணி விருதுக்கும், குரலிசை மற்றும் வயலின் கலைஞர் மன்னார்குடி ஜெயந்தி மணிசங்கர் கலை வளர்மணி விருதுக்கும், சிலம்பாட்டம் மற்றும் கோலாட்ட கலைஞர் தப்பளாம்புலியூர் ஜெகன்நாதன் கலை சுடர்மணி விருதுக்கும், நாடக நடிகர் சேங்காலிபுரம் சிவாஜி ராகவன் கலை நன்மணி விருதுக்கும், நாடகக்கலைஞர் பருத்திக்கோட்டை ராமையா கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2008–09ம் ஆண்டிற்கு கிராமிய கலைஞர் தப்பளாம்புலியூர் குளுந்தாயி கலை இளமணி விருதுக்கும், மிருதங்க கலைஞர் அம்மையப்பன் முருகன் கலை வளர்மணி விருதுக்கும், பவளக்காளியாட்ட கலைஞர் புதுப்பத்தூர் பாலகிருஷ்ணன் கலை சுடர்மணி விருதுக்கும், தவில் கலைஞர் இடும்பாவனம் பாஸ்கரன் கலை நன்மணி விருதுக்கும், அருட்பா கலைஞர் அன்னியூர் சீனிவாசன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2009–10ம் ஆண்டிற்கு பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் சண்முகபிரியா கலை இளமணி விருதுக்கும், பரதநாட்டிய கலைஞர் குளிக்கரை யமுனா கலை வளர்மணி விருதுக்கும், மேடை நாடகக்கலைஞர் மன்னார்குடி சண்முகசுந்தரம் கலை சுடர்மணி விருதுக்கும், நாதஸ்வர கலைஞர் கோவிலூர் சோமநாதன் கலை நன்மணி விருதுக்கும், நாடகக்கலைஞர் வடுவூர் கலைபித்தன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 20 கலைஞர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். இவர்களுக்கு நாளை (18ம் தேதி) திருவாரூர் பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள மரினா மஹாலில் அமைச்சர் மதிவாணன் விருதுகளை வழங்குகிறார்.
ஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகை
கண்காட்சி ரயில் 3 கோச்களை கொண்டது. கிழக்கு ரயில்வேயில் பணியாற்றும் அலுவலர் முகமதுமுஜிபுல்லா சேகரித்த அரிய வகை தபால் ஸ்டாம்ப்கள், கவர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ரயில்வே துறையின் வளர்ச்சியை குறிப்பிடும் வகையில் ரயில்பாதை, குதிரைகள் இழுக்கும் ரயில் இன்ஜின், நீராவி இன்ஜின் அறிமுகம், மெட்ரோ ரயில்கள், மோனோ ரயில்கள், சூப்பர் ஸ்பீடு ரயில்கள், ரோலிங் ஸ்டாக்ஸ், ஸ்டேஷன்கள், சிக்னல்கள், பாலங்கள், தண்டவாளங்கள், மலைவழிப்பாதை, மெயில் ரயில்கள், ரயில்வே மெயில் சர்வீஸ் தொடர்பான ஏராளமான ஸ்டாம்ப்கள், கவர்கள் ரயிலில் இடம் பெற்றுள்ளன.
இன்று நெல்லை வருகை:ஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகிறது. நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டிருக்கும். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை துவக்கிவைக்கிறார். அனுமதி இலவசம். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சி ரயிலை பார்வையிட்டு பயன் பெற வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சையில் ஏப்., 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஐம்பொன் சிலை திருட்டு மன்னை அருகே பரபரப்பு மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள இளவனூர் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மகாமாரியம்மன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். 1992ல் இங்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், கிராமத்தில் உள்ள மின்வசதியை துண்டித்துவிட்டு கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்றனர்.
இக்கோவிலில் பூசாரியாக அகோரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சித்ரா தினமும் கோவிலுக்குச் சென்று சுத்தம் செய்வது வழக்கம். அதுபோல, நேற்று காலை கோவிலுக்கு சென்றபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று ஊர்மக்களுக்கு தெரிவித்தார். தகவலறிந்த திருமக்கோட்டை போலீஸார் சம்பவ இடம் சென்று டி.எஸ்.பி., குணசேகரன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சிலையின் மதிப்பு ஐந்து லட்சமாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷனில் கூடுதல் கோதுமை
இந்நிலையில் 2010 ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் கூடுதலாக 30 டன் கோதுமை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூடுதல் கோதுமை அனைத்து தாலுகாவிற்கும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கோதுமையை கார்டு ஒன்றுக்கு 5 கிலோ வீதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்று பயன்பெறலாம்.
வருமானவரித்துறை திடீர் கிடுக்கப்பிடி: சிக்குகின்றன ஐ.பி.எல்., அணிகள்
இதனால், பல புதிய தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல்., கொச்சி அணியை, 'ரெண்டவூ ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு' என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை தனது தோழியும், எதிர்கால மனைவியுமான சுனந்தா புஷ்கருக்கு மத்திய இணை அமைச்சர் சசி தரூர் இலவசமாக வாங்கிக் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அணியின் பங்குதாரர்கள் விவரத்தை வெளியிடக் கூடாது என, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியை, அமைச்சர் தரூர் மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.பி.எல்., அணிகள் பல நூறு கோடிக்கு ஏலம் போவது பற்றியும், அவற்றுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றியும் அறியும் வேலையில் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஐ.பி. எல்., தலைமையகம் மற்றும் வோர்லியில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சோதனையிட்டனர்.
சோதனை பற்றி நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கொச்சி அணி ஏல பிரச்னை எழும் முன்னரே, ஐ.பி.எல்., அமைப்பு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில், ஐ.பி.எல்., அணிகளின் ஏலம், அவற்றை எடுத்தவர்கள், அதன்மூலம் கிடைக்கும் வருவாய், ஐ.பி.எல்., மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடையே வருவாயை பகிர்ந்து கொள்ளும் முறை உட்பட பல விவரங்களை தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அதை செய்ய ஐ.பி.எல்., அமைப்பும், லலித் மோடியும் தவறி விட்டதால், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் கிரிக்கெட் அணிகள் தொடர்பான பல ரகசிய தகவல்கள் அம்பலமாகும்.இவ்வாறு நிதி அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
மேலும், ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் நிதி விவகாரங்கள் மற்றும் பங்கு முறைகள் குறித்து, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் ஏல நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை கண்டறிய மும்பையில் பல இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.இதுமட்டுமின்றி, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களிடமும் விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது அவர்கள் செய்துள்ள முதலீடு, அவை கிடைத்ததற்கான நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்கப்படும். இந்த விசாரணை இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், நேற்று தர்மஸ்தலா வந்த லலித் மோடி, நிருபர்களிடம், 'ஐ.பி.எல்., போட்டிகள் தொடரும். இங்கு கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு மீட்டிங் ஏதும் இல்லை' என்றார். அதே சமயம் கொச்சி விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
வரித்துறையினர் கேள்விக்கு பதிலளித்தோம்: லலித் மோடி : வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின், நிருபர்களிடம்பேசிய லலித் மோடி கூறியதாவது: ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகள் தொடர்பான ஆவண விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஏல நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் கேட்ட விவரங்களை அளித்தோம்.
கேள்விகள் சில நிமிடங்களில் முடிந்து விட்டாலும், அதுதொடர்பான ஆவணங்களை பரிசீலிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.ஆவணங்களை பரிசீலித்ததிலும், விசாரணை நடத்தியதிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். எங்கள் அமைப்பு ஒரு பொது அமைப்பு. அவர்கள் மேலும் ஏதாவது கேள்விகள் கேட்டாலும், அதற்கும் நாங்கள் பதில் அளிப்போம். என்னுடைய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், என் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவறு. ஐ.பி.எல்., அணிகள் தொடர்பாக நகரில் உள்ள பல அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் விஜயம் செய்ததும், எனது அலுவலகத்திற்கும் வரும்படி அழைப்பு விடுத்தேன்.இவ்வாறு லலித் மோடி கூறினார்.மேலும், லலித் மோடிக்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அகமது மரணம்
மாரடைப்பால் அவர் மரணமடைந்த்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது . தன்ஸீன் இ இஸ்லாமி அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார் அகமது. பாகிஸ்தான் , இந்தியா, வளைகுடா நாடுகளில் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு சவுதி அரேபியாவில் இவைர் பின்பற்றுபவர்கள் அதிகம்.
அடிப்படையில் மருத்துவரான இஸ்ரார், பாகிஸ்தானிய அரசியல் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
சொற்பொழிவுகள், டிவி விவாதங்களில் புகழ் பெற்றவர் இஸ்ரார். இஸ்லாமிய வரலாறு குறித்த செறிந்த ஞானம் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிக்கும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்!
விஜய் நடிக்கும் படப்பிடிப்பில் அசின் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்கண்டிஷன் கேஸ் கசிந்ததால் அசினுக்கு இந்த மயக்கம் ஏற்பட்டது.மலையாளப் படமான பாடிகார்டை ரீமேக் செய்கிறார் விஜய் . இது விஜய் நடிக்கும் 51வது படமாகும். இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அது தற்காலிக தலைப்புதான் என்றும் பொருத்தமான ஒரு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். ராஜ்கிரண், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் நடிக்கிறார்.
பிரபல மலையாள இயக்குநர் சித்திக், இந்த படத்தை இயக்குகிறார். திருவிடைமருதூரில் துவங்கிய படப்பிடிப்பு , காரைக்குடி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், நடிகை அசின் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேரவனில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, கேரவனில் பொருத்தப்பட்டிருந்த ஏர்கண்டிஷன் மெஷினில் இருந்து கேஸ் கசிந்தது.
இதனால் அசினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபிறகுதான் அசினுக்கு மயக்கம் தெளிந்தது.
அசின் மயங்கி விழுந்ததால், படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அசின் நலமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகே படப்பிடிப்பு தொடர்ந்தது. அசின் சம்பந்தப்படாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டன. இப்போது காரைக்குடி மலர் லாட்ஜில் ஓய்விலிருக்கிறார் அசின்.
குண்டாக இருப்பதால் முதலிரவைக் கூட நடத்தாமல் ஓடி விட்டார் கணவர்- பெண் புகார்
தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார்.
இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.