கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த நான்காம ஆண்டு பயிலும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 4ம் ஆண்டு மாணவர்கள் முத்துக்குமார், ரமணன், லோகேஷ் மற்றும் கார்த்திக்.
இரு தினங்களுக்கு முன் 4 பேரும் சேர்ந்து, 2ம் ஆண்டு மாணவர்கள் 14 பேரை மிகக் கொடூரமாக ராகிங் செய்துள்ளனர்.
அவர்களை உடைகளைக் களையச் செய்து நிர்வாணப்படுத்தி தரையில் நீந்தச் செய்துள்ளனர்.
இதையடுத்து 2ம் ஆண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரி டீன் குமரனிடம் புகார் கொடுத்தனர். குமரன் இது குறித்து 4ம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அதில் ராகிங் செய்தது உறுதியானதையடுத்து இது குறித்து புகார் அறிக்கையை பீளமேடு காவல் நிலையத்துக்கு அனுப்பினார்.
இதன் அடிப்படையில் முத்துக்குமார், ரமணன், லோகேஷ், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும் டீன் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment