தூத்துக்குடி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடிக்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், திருச்செந்தூருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடிக்கு சேலம், ஈரோடு, மதுரை வழியாக, வரும் நவம்பர் 4ம் தேதியிலிருந்து டிசம்பர் 2ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0611) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடியிலிருந்து நவம்பர் 5ம் தேதியிலிருந்து டிசம்பர் 3ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0612) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.



சென்னை சென்ட்ரல் - திருச்செந்தூர் இடையே சேலம், ஈரோடு , மதுரை வழியாக 31-10-2009 முதல் 05-12-2009 வரை வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் (எண்.0659) சென்ட்ரலிலிருந்து வாரத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 1ம் தேதியிலிருந்து டிசம்பர் 6ம் தேதி வரை வாரத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0660) பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இச்சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய, இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0 comments: