சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 14 கூடுதல் நீதிபதிகளின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் கே.சந்துரு, வி.ராம சுப்பிரமணியன், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ராஜசூரியா, டி.சுதந்திரம், வி.எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேலு, கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன் ஆகிய 14 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆகியுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே நாளை பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment