மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரக்கூடிய வியாபாரிகள் 50 சதவீதம் பேர் இன்று கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் வியாபாரம் மந்தமாக இருந்தது. விலை ஏற்றத்தை விட சற்று குறைவாக விற்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன் தந்த தகவல் விபரம்: மழையால் காய்கறி வரத்து குறைந்த போதிலும் இன்று விலை உயர்த்தப்படவில்லை.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் பலர் வராததால் வியாபாரம் குறைந்தது. அதனால் காய்கறிகள் நேற்றைய விலையை விட குறைந்த விலைக்கு இன்று விற்கப்பட்டன. எல்லா காய்கறிகளும் 2 ரூபாய் வரை குறைத்து விற்கப்பட்டன. வழக்கத்தை விட 30 சதவீத விற்பனை குறைந்தது. ஆனால் சில்லரை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பு உண்டு.
மழை நேரத்தில் காய்கறிகள் கழிவு அதிகமாகும். அதனால் மொத்த விலையை விட 100 சதவீதம் கூடுதலாக விற்பார்கள்.
0 comments:
Post a Comment