அ.தி.மு.க.வின் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க பிரிவு சார்பில் டாஸ்மாக் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு டாஸ்மாக் பிரிவு மாநில செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சூரிய ஆச்சாரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, கலைராஜன், செந்தமிழன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
செங்கோட்டையன் கூறும்போது, அண்ணா தொழிற்சங்கத்தில் 36 ஆயிரத்து 240 டாஸ்மாக் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழிவாங்கும் போக்கை கைவிட்டு விட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால். அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என்றார்.
டாஸ்மாக் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்க வேண்டும், கூடுதல் நேர பணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், ஊக்க தொகையை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை, மருத்துவ காப்பீடு, வாரவிடுமுறை, அரசு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment