பெண்களை முன்னேற்றுவதில் இந்தியா சிறப்பிடம்

"பெண்களை முன்னேற்றுவதில் இந்தியா கடினமாக உழைக்கிறது' என்று ஐ.நா., அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார்."உலகில் பல நாடுகளில் மதத்தின் பெயரால், பெண்கள் ஒடுக்கப்பட்டனர். மதச் சம்பிரதாயங்களை மீறி, பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகிறது' என்கிறார் ஐ.நா.,வின் மதச் சுதந்திரத்துக்கான இணைப்பாளர் அஸ்மா ஜகாங்கீர்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:உலகில் சில சமுதாயங்களில் மதத்தின் பெயரால் பெண்களை கார் ஓட்டுவதற்குக் கூட அனுமதிக்க மாட்டார்கள். சில நாடுகளில் மதத்தின் பெயரால், பெண்கள் தங்கள் தலையை சேலையால் மூடவில்லையெனில் தண்டனை அளிப்பர். இன்னும் சில நாடுகளில் பெண்களின் பிறப்பு, பிறப்புக் கட்டுப்பாடு, அவர்களின் உடலமைப்பு இவற்றினால் பெண் தன்மையைப் பேண வேண்டும் என்று வற்புறுத்துவர்.


ஆனால், இந்தியாவில் இதற்கு மாறான சூழ்நிலை நிலவுகிறது. மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் மதச் சம்பிரதாயங்கள் இருந்தாலும், அவர்கள் சம உரிமை பெறுவதில் இந்தியா முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனால், இந்தியாவில் பெண்களுக்குப் பிரச்னையே இல்லை என்று நான் கூற வரவில்லை. ஆனாலும், அவர்கள் முன்னேறுவதற்கான நம்பகமான சூழல் அங்கிருக்கிறது என்பது தான் கருத்து.


இருப்பினும், உலகப் பொருளாதார அமைப் பின் "சர்வதேச பாலியல் இடைவெளிப் பட்டியலி'ல் மொத்தமுள்ள 134 நாடுகளில், இந்தியா 114 வது இடத்தில் தான் இருக்கிறது. 2008ல் 115வது இடத்திலிருந்தது. இருபாலருக்கும் வாய்ப்புகள், உதவிகளை வழங்குவதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் அமைக்கப்படுகிறது.பெண்களின் தனிமனித சுதந்திரத்துக்கும், அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் துன்புறுத்தலுக்குள்ளா வதற்கும் மிகச்சிறிய நூலிழை அளவு வேறுபாடு தான் இருக்கிறது. அந்த வேறுபாட்டைக் கண்டறிந்து பெண்களின் முன்னேற் றத்துக்கு நடவடிக்கை எடுப்பதுதான் இன்றைய அரசுகளின் முக்கியமான சவால்.இவ்வாறு அஸ்மா தெரிவித்துள்ளார்.

0 comments: