நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு போலி ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதை தடுக்க, இரு நாடுகளும் எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம், ஆட்கள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளன.
இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான குழுவினரும், நேபாள உள்துறைச் செயலர் கோவிந்தா குசூம் தலைமையிலான குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக காத்மாண்டுவில் பேச்சு நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை யின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:குற்றவாளிகளை பரஸ்பரம் பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம், கிட்டத்தட்ட முடிவடை யும் நிலையில் உள்ளது. இரு நாடுகளும் மற்ற நாட்டிற்கு எதிரான பயங்கரவாதிகளை தங்கள் மண்ணில் செயல்பட அனுமதிப்பதில்லை என, முடிவு செய்துள்ளன.
எல்லை தாண்டி நடைபெறும் குற்றங்களை தடுப்பது மற்றும் தெற்காசிய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போலி ரூபாய் நோட்டுகள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க, இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment