வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் உயர்தர மது, ஒயின் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், ஐரோப்பிய யூனியன் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பிரான்ஸ், ஜெர்மனி உள் ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா உட்பட 150 நாடுகள், உயர்தர மது, ஒயின், "ஸ்காட்ச்' போன்றவற்றை இறக்குமதி செய்கின்றன. இதில் இந்தியா 2007ல், 395 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுவையும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒயினையும் இறக்குமதி செய்துள்ளது. மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கள் தான், இவ்வகை இறக்குமதி சரக்குகளுக்கான பெரிய சந்தையாக இருந்து வருகின்றன. மகாராஷ்டிரா, குறைந்த வரியில் சரக்குகளை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மறுத்துவிட்டது.
மற்ற இரு மாநிலங்களும் வெளிநாட்டு மதுவை அத்தியாவசியப் பொருளாகக் கருதி, அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டன. மேலும், குறைந்த வரியில் இறக்குமதி செய்வதால் பெரும் செலவுச் சுமை ஏற்படுகிறது. இதனால், இந்த இறக்குமதி சரக்குகள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து இந்திய - ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும், உலக வர்த்தக மையத்தின் கவனத்துக்கும் இந்தப் பிரச்னையை ஐரோப்பிய யூனியன் கொண்டு செல்ல இருக்கிறது. அப்படி நடந்தால், அதன் காரணமாக ஏற்படும் எந்த விளைவுகளையும் இந்தியா எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது என்று வர்த்தகத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் அன்னே மரி இட்ராக் கூறுகையில், "இந்தப் பிரச்னையை உலக வர்த் தக மையத்துக்குக் கொண்டு செல் லாமல், சுமுகமான முடிவு காண் போம்' என்று தெரிவித்துள்ளார். மது, ஒயின் இவற்றின் மதிப் பின் அடிப்படையில், தற்போது 100 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment